இன்று வந்த ஆனந்த விகடனிலிருந்து ஒரு சாம்பிள், 56ஆம் பக்கத்தில் இருக்கும் “என் அப்பா யார்?” என்ற கட்டுரையிலிருந்து (கலரிங் மட்டும் நான் கொடுத்தது).
‘மை மம்’ (எனது அம்மா) என்ற பெயர்தான் காலப் போக்கில் கண்டபடி உருமாறி மம்மா மியா என்றாகிவிட்டது.
பத்திரிகைக்காரர்களுக்கு வேண்டிய பொது அறிவு இவர்களுக்கு இருந்தால் ஆங்கிலப் பத்திரிகைகளில் mamma mia என்ற சொற்றொடரைக் கொண்டு சோனியா காந்தி கிண்டல் செய்யப்படுவதை கவனித்திருப்பார்கள்.
விக்கிபீடியாவில் mamma miaவுக்கு அருகில் “(literally, my mum)” என்று ஆங்கிலத்தில் பொருள் தரப்பட்டிருக்கிறது. ABBA பற்றியும் mamma mia பற்றியும் விக்கிபீடியாவிலிருந்துதான் அரைகுறையாகத் தகவல் எடுத்திருக்கிறார்கள். தமிழ்ப் பத்திரிகையாளர்களுக்குத் தேவையான ஆங்கில வாசிப்பு இந்த விகடன் துணை ஆசிரியருக்குக் கிடைக்கவில்லை, பாவம்.
கலர்ஃபுல் கலக்கல் காக்டெயில், ஜிலீர் லைட்டிங், ஜில் காஸ்ட்யூம் என்றெல்லாம் குழந்தைத்தனமான வார்த்தைகளை ஒப்பேற்றுவதற்கு ஆகும் நேரத்தை அடிப்படை பொது அறிவை வளர்த்துக்கொள்வதில் செலவழிக்கலாம் அல்லவா? இந்த மாதிரி நிறைய செய்கிறார்கள்.









