மையநீரோட்டம் » வாழ்க்கை

திடீர் நினைவுகள்
(எச்சரிக்கை: இது பியூர்லி பர்சனல் இடுகை. எழுதியே ஆக வேண்டியிருந்தது.)

திடீரென்று தொடர்பே இல்லாமல் இளையராஜாவின் ‘இதயம் போகுதே’ பாடல் நினைவுக்கு வந்தது. அந்தப் பாடலை நான் முதன்முதலில் கேட்டபோது பயங்கர சோகமானேன். அப்போது எனக்கு எட்டு வயதுகூட நிரம்பவில்லை. அருமையான, ஆனால் ரொம்ப சோகமான பாட்டு அது. ‘புதிய வார்ப்புக’ளில் கதாநாயகர் பாக்யராஜ் காதலி ரதி அக்னிஹோத்ரியை விட்டுப் பேருந்தில் போகும்போது அசரீரியாக வரும் அந்தப் பாடல். பேருந்து புழுதியைக் கிளப்பிக்கொண்டு போகும், ரதி பொட்டலில், வெயிலில் நின்று வேதனையுடன் பார்த்துக்கொண்டிருக்க பாடல் தொடங்குவது போல் ஒரு காட்சி மனதில் இருக்கிறது.  உடனே தொடங்கியது நோஸ்டால்ஜிய இணையத் தேடல். அந்தப் படம் வந்த ஆண்டு 1979 என்று தெரிந்தது. சரியாக இன்ன வயதில் இன்ன அனுபவம் எனக்குக் கிடைத்தது என்று ‘தேதிப்படுத்த’ முடிவது புல்லரிப்பாக இருந்தது. பாட்டின் வீடியோ (பொட்டல் நிலம் இல்லை). இளவயது காதல் பிரிவு/முறிவுகளின்போதெல்லாம் இந்தப் பாட்டுதான் மனதில் எழும்.

உடனே பின்விளைவாக வேறு சில நினைவுகள் கிளம்பின. குடும்பப் பிரச்சினை காரணமாக பேச்சுவார்த்தை இல்லாதிருந்த ஒரு உறவினரைத் தற்செயலாக திருவல்லிக்கேணி ஸ்டார் தியேட்டரில் ‘கழுகு’ (1981) படம் பார்க்கப் போயிருந்தபோது எதிர்கொண்டு ஓரிரு வார்த்தை பேசியது ஒரு நினைவு. ‘கழுகுவில்’ நன்றாக நினைவிருப்பது அதில் வரும் பேருந்தும் ரஜினிகாந்தின் நண்பர் கொலையாவதும். பிறகு எதற்கோ ஒரு எலுமிச்சம்பழமும் நினைவில் நின்றிருக்கிறது. விக்கிபீடியாவில் கதையைப் படித்தபோதுதான் அது துர்சடங்குகள் நிறைந்த கிரிமினல் சாமியார் கொலைப் படம் என்று தெரிந்தது. எலுமிச்சம்பழத்திற்கு இப்போது நியாயங்கற்பிக்க முடிகிறது. (‘மெட்ராஸ் டு பாண்டிச்சேரி’க்குப் பிறகு தமிழில் வந்த ரோட் மூவி இதுதானோ?) ஒரிஜினலில் கூட பஸ் ஓடியிருக்கிறது.

அதே காலகட்டத்தில் காரணமே இல்லாமல் பீதியைக் கிளப்பிய ஒரு படம் ‘தூரத்து இடி முழக்கம்’. 1981இல் வந்த விஜயகாந்த் படம். இணையத்தில் தகவல்கள் போதாது. அந்த வயதில் எதனாலோ சில காட்சிகள் அமானுஷ்யமானவையாகத் தோன்றி பயந்திருக்கிறேன். நான் பார்த்தது தொலைக்காட்சியில். எனவே 1982 வாக்கில் பார்த்திருக்கக்கூடும். இசை சலீல் சௌதுரி. ‘உள்ளமெல்லாம் தள்ளாடுதே‘ பாட்டை இப்போது கேட்டால் ஒரு லாங்ஷாட் காட்சி திகிலூட்டியதும் படம் முடிந்து மாலை இருளில் பாட்டி வீட்டு வாசல் படிக்கட்டில் வந்து உட்கார்ந்ததும் நினைவில் வந்து முட்டுகின்றன.

குழந்தைப் பருவத்திலிருந்து எனக்கு முதல் வேலை கிடைத்த சமயம் வரை நினைவில் தங்கிய திரைப்படப் பாடல்கள், படங்கள், தொடர்பான நினைவுகள் என்று எழுதிக்கொண்டே போகலாம். புகைப்படம் எடுத்துக்கொள்ளும் கலாச்சாரம் எங்கள் குடும்ப மரத்திலேயே இல்லை. எனவே எனக்கும் சிறுவயது என ஒன்று இருந்தது என்பதற்கு ஆதாரமாக மிகச் சில புகைப்படங்களும் நிறைய இளையராஜா பாட்டுக்களும்தான் இருக்கின்றன.

முப்பதாண்டுக் காலத்தில் இளையராஜா பாடல்களை வானொலியிலும் தொலைக்காட்சியிலும் பல நூறு முறை கேட்டுவிட்டதாலோ என்னவோ தற்போது இளையராஜா இசையில் சுத்தமாக ஆர்வம் இல்லை. ஆனால் ஏதாவது ஒரு சம்பவத்தை, இடத்தை, முகத்தை, குரலை, எண்ணவோட்டத்தை நினைவிற்குக் கொண்டுவந்துவிடும் பாடல்கள் ஏராளம்.

கூகுளில் ஒரு ரவுண்டு காலப் பயணம் போய்விட்டு வந்தால் என் இயல்பிற்குத் தொடர்பே இல்லாத ஒரு காலகட்டத்தில் வாழ்ந்துகொண்டிருக்கும் உணர்வு ஏற்படுவதுதான் இந்த வெட்டி ஆராய்ச்சியின் மிச்சம்.

அதென்னவோ…
நேற்று ர.சு. நல்லபெருமாளின் ‘கல்லுக்குள் ஈரம்’ வாங்கினேன். கவிதா வானதி பதிப்பக வெளியீடு. கெட்டி அட்டை போட்ட குண்டுப் புத்தகம். மிக நேர்த்தியான பைண்டிங். அடக்கமான சைஸ். கையில் வைத்துப் படிக்க சுகமான வடிவம். அட்டை ஓவியமும் அந்த காலத்து ஓவியரான வினு வரைந்தது. எல்லாமுமாய்ச் சேர்ந்து அந்தப் புத்தகத்தை நான் படித்தபோது ஏற்படுத்திய அதே “நாஸ்டால்ஜிய” உணர்வை ஏற்படுத்தின.

அதே சமயத்தில் அகிலனின் ‘புது வெள்ளம்’ நாவலும் வாங்கினேன். இதுவும் சிறுவயதில் என்னைப் பரவசப்படுத்திய நாவல். இப்போது வாங்கியது தாகம் வெளியீடு. அட்டையில் ஃபோட்டோஷாப்பிற்கு உட்படுத்தப்பட்ட அபிஷேக் பச்சன், நந்திதா தாஸ், தபு, பாபி தியோல் படங்கள். கொடுமை, ஆனால் கிட்டத்தட்ட ர.சு.ந. அளவுக்கு நல்ல பைண்டிங். பழக்கமான, சிநேகமான எழுத்துரு. அட்டைதான் பிரச்சினை. புத்தகத்தைத் திறந்துவிட்டால் படிப்பதில் சிக்கல் இருக்காது.

அதென்னவோ இன்றைய பதிப்பாளர்கள் வழவழ என்ற மஞ்ச கலர் மேப்லித்தோ தாளில் ஒரே சைஸில் போடும் புத்தகங்களைப் பார்த்தால் எனக்குப் படிக்க ஆர்வம் ஏற்படுவதில்லை. புதுவெள்ளத்தைப் படிக்கத் தொடங்கினால் 1945ஆம் ஆண்டு நம் கண் முன் விரியத் தாளின் நிறமும் புத்தகத்தின் சைஸும் பைண்டிங்கும் கூட உதவுகின்றன. பதிப்புத் தொழில்நுட்பம் முன்னேறிவிட்டாலும் புத்தகங்களுக்குரிய இந்தக் கவர்ச்சியைத்தான் இன்று வெளிவரும் புத்தகங்களில் பார்க்க முடியவில்லை. சுஜாதாவையும் சுந்தர ராமசாமியையும் எஸ். ராமகிருஷ்ணனையும் டீலக்ஸாகப் படிக்கும்போது உறுத்தவில்லை. ஆனால் அகிலன், கல்கி எல்லாம் மஞ்சள் பேப்பரில் வந்தால் வாசிப்பனுபவம் பாதிக்காது?

கவிதைத் தொகுப்புக்கு முன்னுரை
என் கவிதைத் தொகுப்பு வரும்போது கீழ்க்காண்பதை முன்னுரையாகப் போட்டுக்கொள்ளவிருக்கிறேன். சிறுகதைத் தொகுப்புதான் முதலில் வரும் என்று நினைக்கிறேன்.

ஒரு நல்ல கவிதையை எழுதுவதில் கவிஞனுக்குக் கிடைக்கும் மகிழ்ச்சிக்கு ஈடானது, அந்தக் கவிதையை அவனது பிற கவிதைகளுடன் சேர்ந்து ஒரு தொகுப்பாகப் பார்ப்பதில் ஏற்படும் மகிழ்ச்சிதான். அதனை வேறு எதனுடனும் ஒப்பிட முடியாது.

கவிதை எங்கும் இருப்பது. அதை எழுதுவது கவிஞனின் பொறுப்பு. எழுதப்படும் வரை கிடைப்பதில்லை கவிதையின் இருப்பிற்கு நியாயம்.

கவிதை அதன் மொழியில் எழுதப்படுவதும் முக்கியம். இல்லையெனில் கவிதை கவிதையாக இல்லாமல் போய்விடும். கவிதை மொழி என்பது தமிழ், ஆங்கிலம், கொங்கணி, பிரெஞ்சு போல ஒரு மொழிதான். அதன் எழுத்துகள் வேண்டுமானால் தமிழ் எழுத்துகளாக இருக்கலாம். ஆனால் அதற்கும் தனியாகச் சொற்களும் வாக்கிய அமைப்பு விதிகளும் இலக்கணமும் உண்டு.

இத்தொகுப்பிலுள்ள கவிதைகள் அனைத்தும் கவிதை மொழியைக் கற்றுக்கொள்ளும் அனுபவத்தின் பதிவுகள் எனலாம். நடமாடும் படிமத் தொழிற்சாலைகளாகப் பிரகாசிக்கும் சிலருக்கு அந்த மொழி எழுதத் தொடங்கும்போதே கற்றுக்கொள்ளத் தேவையில்லாமல் எளிதாகக் கைவருவதோடு அவர்கள் பல தொகுப்புகள் கொண்டுவந்து புத்தக மதிப்புரையாளர்களாகவும் நிறுவப்பட்டுவிடுவது இன்றைய வரலாறு.

ஒரு கவிஞன் தனது முதல் தொகுப்பைப் பிரசவிக்கும்போது கன்னித்தன்மையை இழக்கிறான். எண்ணிறந்த தமிழ்க் கவிஞர்களால் ஊக்குவிக்கப்பெற்று கவிதை எழுதத் தொடங்கிய நான் கவிஞன் என்கிற முறையிலே இத்தொகுப்பின் மூலம் எனது கன்னித்தன்மையை இழப்பதில் நெகிழ்ச்சியடைகிறேன்.

கவிதையை அணுவணுவாக ரசிக்கும் என் நண்பர்களின்றி இந்தத் தொகுப்பு சாத்தியமாக வாய்ப்பிருக்க முடியாது. அவர்களுக்கு நான் பெரிதுமே கடமைப்பட்டிருக்கிறேன்.

முதல்ல காசை எடு
என்னுடைய இன்னொரு வலைப்பதிவில் போடும் வின்டேஜ் படங்களை ஃப்ளிக்கரில் இருக்கும் பல்வேறு குழுக்களில் ஏற்றிக்கொண்டிருந்தேன். தமிழ்ப் பத்திரிகைகள், புத்தகங்களில் வந்த சித்திரங்கள் அந்தக் குழுக்களில் இருந்த வெளிநாட்டார் பலரையும் கவர்கின்றன. நாட் எனி மோர். கூகிளின் இலவச மதிய உணவு மாடலைப் பார்த்து யாஹூ எப்போது கற்றுக்கொள்ளப்போகிறது?

மலர்க் காட்சி
ராயப்பேட்டை (சென்னை) YMCA மைதானத்தில் மே 10 அன்று முடியும் மலர்க் கண்காட்சியில் நான்கு பூச்செடிகள் வாங்கினேன். தினமும் காலையில் செடிகளுக்குத் தண்ணீர் ஊற்றுவதும் பொதுவாகப் ‘பராமரிப்பதும்’ கடைந்தெடுத்த சென்னைவாசியான எனக்கு வித்தியாசமான அனுபவமாக இருக்கிறது. இன்று காலையில் எடுத்த சில புகைப்படங்கள்…

இதில் காமெடி என்னவென்றால் முதல் இரண்டு படங்களில் இருக்கும் பூவின் பெயர் மட்டும்தான் எனக்குத் தெரியும் (Dianthus). ரோஜா மாதிரி இருப்பது ரோஜா வகைதான். என்ன பூக்கள் என்று எப்படித்தான் கண்டுபிடிக்கப்போகிறேனோ.