• குட்டிப் பதிவு

    சுட்டி டி.வி.யில் லக்கி லூக்
    சிறுவர்களாவோம்! இன்றிலிருந்து திங்கள் முதல் வெள்ளி வரை மதியம் 1.30 மணிக்கு. மகனுக்கு லக்கி லூக் indoctrination தொடங்க நல்ல சந்தர்ப்பம். (7)


Archive for the ‘வாழ்க்கை’ Category


கவிதைத் தொகுப்புக்கு முன்னுரை

என் கவிதைத் தொகுப்பு வரும்போது கீழ்க்காண்பதை முன்னுரையாகப் போட்டுக்கொள்ளவிருக்கிறேன். சிறுகதைத் தொகுப்புதான் முதலில் வரும் என்று நினைக்கிறேன்.
*
ஒரு நல்ல கவிதையை எழுதுவதில் கவிஞனுக்குக் கிடைக்கும் மகிழ்ச்சிக்கு ஈடானது, அந்தக் கவிதையை அவனது பிற கவிதைகளுடன் சேர்ந்து ஒரு தொகுப்பாகப் பார்ப்பதில் ஏற்படும் மகிழ்ச்சிதான். அதனை வேறு எதனுடனும் ஒப்பிட முடியாது.
கவிதை எங்கும் இருப்பது. அதை எழுதுவது கவிஞனின் பொறுப்பு. எழுதப்படும் வரை கிடைப்பதில்லை கவிதையின் இருப்பிற்கு நியாயம்.
கவிதை அதன் மொழியில் எழுதப்படுவதும் முக்கியம். இல்லையெனில் கவிதை கவிதையாக [...]

முதல்ல காசை எடு

என்னுடைய இன்னொரு வலைப்பதிவில் போடும் வின்டேஜ் படங்களை ஃப்ளிக்கரில் இருக்கும் பல்வேறு குழுக்களில் ஏற்றிக்கொண்டிருந்தேன். தமிழ்ப் பத்திரிகைகள், புத்தகங்களில் வந்த சித்திரங்கள் அந்தக் குழுக்களில் இருந்த வெளிநாட்டார் பலரையும் கவர்கின்றன. நாட் எனி மோர். கூகிளின் இலவச மதிய உணவு மாடலைப் பார்த்து யாஹூ எப்போது கற்றுக்கொள்ளப்போகிறது?

மலர்க் காட்சி

ராயப்பேட்டை (சென்னை) YMCA மைதானத்தில் மே 10 அன்று முடியும் மலர்க் கண்காட்சியில் நான்கு பூச்செடிகள் வாங்கினேன். தினமும் காலையில் செடிகளுக்குத் தண்ணீர் ஊற்றுவதும் பொதுவாகப் ‘பராமரிப்பதும்’ கடைந்தெடுத்த சென்னைவாசியான எனக்கு வித்தியாசமான அனுபவமாக இருக்கிறது. இன்று காலையில் எடுத்த சில புகைப்படங்கள்…

இதில் காமெடி என்னவென்றால் முதல் இரண்டு படங்களில் இருக்கும் பூவின் பெயர் மட்டும்தான் எனக்குத் தெரியும் (Dianthus). ரோஜா மாதிரி இருப்பது ரோஜா வகைதான். என்ன பூக்கள் என்று எப்படித்தான் கண்டுபிடிக்கப்போகிறேனோ.

புத்தக இயந்திரம்!

நாம் கேட்கும் புத்தகத்தை ஐந்து நிமிடங்களில் அச்சடித்துத் தரும் புத்தக இயந்திரம் ஒன்று லண்டனில் வந்திருக்கிறது! புண்ணியம் கட்டிக்கொண்டிருப்பது புத்தகச் சேவை நிறுவனமான பிளாக்வெல் நிறுவனம். நிமிடத்துக்கு 100 பக்கங்கள் அச்சடிக்கிறது.
பார்ப்பதற்கு ஜெராக்ஸ் இயந்திரம் போல் இருப்பதாக சொல்லப்படும் இந்த ‘எஸ்பிரசோ புத்தக இயந்திர’த்திற்கு உள்ளேயே அச்சிடுதல், பைண்டிங் எல்லாம் நடந்து முடிந்து புத்தகம் சூடாக வருகிறதாம். Hot off the (Es)press(0) என்று தமாசாக சொல்லிக்கொள்ளலாம்.
சுமார் 5 லட்சம் புத்தகங்கள் இப்படிக் கிடைக்கிறதாம். இன்னும் சில [...]

நகர்வலம்

நகர்ப்புற வாழ்க்கையைப் பதிவுசெய்யும் வலைப்பதிவுகள், ஃப்ளிக்கர் புகைப்படக் குழுக்கள் உண்டு. அவற்றையெல்லாம் தூக்கி சாப்பிடும் ஒரு ஐடியாவை சில கலைஞர்கள் அமர்க்களமாகச் செயல்படுத்திவருகிறார்கள்.
Urban Sketchers என்ற இவர்களது வலைப்பதிவில் உலகெங்குமிருந்து ஏராளமான ஓவியர்கள் தமது நகரங்களைச் சித்தரிக்கிறார்கள். முதலில் 2007இல் ஃப்ளிக்கர் குழுவாக வடிவம் பெற்ற இந்த ஐடியா, 2008 நவம்பரில் வலையகமாகியிருக்கிறது.
பல விதமான ஓவிய பாணிகளையும் ஊடகங்களையும் இங்கே பார்க்க முடிகிறது. எளிமையானவை முதல் மிக நுணுக்கமானவை வரை நூற்றுக்கணக்கான படைப்புகளை லீவுபோட்டு நாட்கணக்கில் பார்த்துக்கொண்டிருக்கலாம். [...]