விதி செய்த குறும்பு
காந்தியின் பொருட்களைக் கடைசியில் சாராய சாம்ராட் விஜய் மல்லையா வாங்கிவிட்டார். என்ன ஒரு irony!
பழைய பாய்ச்சல்
டெக்ஸ் வில்லர், XIII மாதிரியான தரத்தில் – சித்திரங்களிலாவது – தமிழில் காமிக்ஸ் கொண்டுவரும் சாத்தியம் இருந்து அதைத் தமிழ் பதிப்புத் துறை உணராமலே இருந்துவிட்டதோ என்று தோன்றியது, இந்தப் படத்தைப் பார்த்தபோது (கிட்டத்தட்ட இந்தப் படத்துடன் ஒப்பிடலாம்).
சித்திரச் சந்தை
பெங்களூரில் ஆண்டுதோறும் புத்தகக் காட்சி போல ‘சித்திரச் சந்தை’ ஒன்று நடப்பதாக இந்த வார விகடனில் ஒரு கட்டுரை (பக். 96) போட்டிருக்கிறார்கள். தமிழக நகரங்களிலும் அப்படி நடந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்!
ஊரான் வீட்டு நெய்…
இலவச மின்னூல்கள் தரும் வலையகமான manybooks.netஐ மேய்ந்துகொண்டிருந்தபோது பழைய புத்தகங்களை நூற்றுக்கணக்கில் பார்க்க நேர்ந்தது. மீன்பிடிப்பது, சமையல், வரலாறு, மதம், துப்பறியும் கதைகள், பயண நூல்கள் என்று பல வகைப் புத்தகங்கள். ஆனால் அவற்றில் என்னைக் கவர்ந்தது அட்டை வடிவமைப்பு. நான் பார்த்த 200 சொச்சம் பக்கங்களில் 19ஆம் நூற்றாண்டின் இறுதியிலிருந்து 20ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதி வரையிலான ஆண்டுகளில் வந்திருந்த அந்தப் புத்தகங்களின் அட்டை வடிவமைப்பில் தெரிந்த புதுமைகளையும் நேர்த்தியையும் பார்க்க ஆச்சரியமாக இருந்தது. புத்தக வடிவமைப்பு [...]
உரத்த சிந்தனை: the மொழிபெயர்ப்பு
ட்விட்டரில் பாஸ்டன் பாலா ‘the’வை எப்படி மொழிபெயர்ப்பது என்று ஒரு கேள்வி போட்டிருந்தார். Theவை மொழிபெயர்ப்பதில் சிரமம் இல்லை என்றாலும் குறிப்பிட்ட இடங்களில் குறிப்பிட்ட விதமாக அதை மொழிபெயர்ப்பது ஏன் என்று விளக்கத் தொடங்கினால் ‘கேராக’ இருக்கிறது. எனவே இந்தப் பதிவைப் பாதி விளக்கமும் பாதி ரோசனையும் பாதி மறைமுகக் கேள்விகளுமாகத் தருகிறேன். article என்கிற விஷயம் தமிழில் இல்லை. A, an, the ஆகியவை தம்மை அடுத்து வரும் சொற்களில் சேர்க்கும் பொருள், எண்ணிக்கை போன்ற [...]

