கவிதைத் தொகுப்புக்கு முன்னுரை
என் கவிதைத் தொகுப்பு வரும்போது கீழ்க்காண்பதை முன்னுரையாகப் போட்டுக்கொள்ளவிருக்கிறேன். சிறுகதைத் தொகுப்புதான் முதலில் வரும் என்று நினைக்கிறேன். * ஒரு நல்ல கவிதையை எழுதுவதில் கவிஞனுக்குக் கிடைக்கும் மகிழ்ச்சிக்கு ஈடானது, அந்தக் கவிதையை அவனது பிற கவிதைகளுடன் சேர்ந்து ஒரு தொகுப்பாகப் பார்ப்பதில் ஏற்படும் மகிழ்ச்சிதான். அதனை வேறு எதனுடனும் ஒப்பிட முடியாது. கவிதை எங்கும் இருப்பது. அதை எழுதுவது கவிஞனின் பொறுப்பு. எழுதப்படும் வரை கிடைப்பதில்லை கவிதையின் இருப்பிற்கு நியாயம். கவிதை அதன் மொழியில் எழுதப்படுவதும் [...]
மேப் போட்றவரு
சில செய்திக் கட்டுரைகளைப் படித்தால் அவற்றின் சோகத்தை மீறி சிரிப்பு வருகிறது. கல்பாக்கம் கடற்கரையில் ஒரு ருஷ்யப் பொறியியலாளரும் அவரது மகளும் தாக்கப்பட்டது பற்றி ஐ.பி.என்.-லைவில் ஒரு IANS கட்டுரை வந்திருக்கிறது. பொறியியலாளர் தாக்கப்பட்டதையும் அவரது மகள் மானபங்கப்படுத்தப்பட்டதையும் சொல்லிவிட்டு, காவல் துறை விசாரணை செய்துவருகிறது என்பதோடு முடித்துக்கொள்ளாமல் இப்படி நாலு பாரா: According to officials of the power project, there are over 100 Russian engineers working at the Kudankulam [...]
கசாப்பு
1. சமீபத்தில் சன் நியூஸில் மும்பை தாக்குதல் தீவிரவாதி அஜ்மல் அமீர் கசப்/கசாபின் (Kasab) வயது பற்றித் திரையின் அடியில் ஒரு செய்திப் பட்டை ஓடிக்கொண்டிருந்தது. அதில் ‘கசாப்புக்கு’ என்று போட்டிருந்தார்கள். கசாப்புக்குத் தயாராகும் ஆடு என்பது போல. பிற மொழிச் சொற்களை ஒலிபெயர்க்கும்போது தமிழில் pa, ba, sa, cha, ta, da, ka, ga, tha, dha போன்ற ஒலிகளைத் துல்லியமாக எழுத முடியாதது ஒரு குறைதான். ஆனால் இருப்பதை வைத்துக்கொண்டு அட்ஜஸ்ட் செய்துகொள்ள [...]
சுட்டி டி.வி.யானது…
1. கடும் மழலையில் பேசும் என் 4 வயது மகன் சிரமத்தை மீறிச் சொல்லும் சொற்கள் சில: விளையாட்டுப் பூங்கா, சுரங்கப் பாதை, மலை வீடு, உயரமான மலை, குழந்தைகள். வழக்கமான இனிமையிலிருந்து மாறுபட்ட இனிமையாக இருக்கிறது இந்தப் பேச்சு. நான்கு வயதுக் குழந்தையைக் கூட இப்படிப் பேசவைக்கும் சுட்டி டி.வி.க்குப் பெற்றோர்கள் கடமைப்பட்டிருக்கிறார்கள்! சுட்டி டி.வி.யின் சொந்த சரக்கு தேறாது என்றாலும் டோராவின் பயணங்கள் (குறிப்பாக), ஸ்பைடர்மேன், குளோரியாவின் வீடு, ஹீமேன், கிரேஸி ஜெஸ்ஸி, செட்ரிக் [...]
அரவியல்
“An erection is a blushing of the penis” என்று பாலியல் நிபுணர் ஹேவ்லக் எல்லிஸ் The Psychology of Sex என்ற புத்தகத்தில் எழுதியிருக்கிறார். ஆணுறுப்பைப் பாம்பாக உருவகிப்பது பழைய விஷயம். இந்த இரண்டின் காம்பினேஷனை 1974 மார்ச் ஆனந்த விகடன் அட்டைப்படத்தில் பார்த்தேன். படத்தை வரைந்தவர் வேறு யார், ஜெயராஜ்தான்.

