April 22, 2009

சுட்டி டி.வி.யானது…

Posted by : சாத்தான்

1. கடும் மழலையில் பேசும் என் 4 வயது மகன் சிரமத்தை மீறிச் சொல்லும் சொற்கள் சில: விளையாட்டுப் பூங்கா, சுரங்கப் பாதை, மலை வீடு, உயரமான மலை, குழந்தைகள். வழக்கமான இனிமையிலிருந்து மாறுபட்ட இனிமையாக இருக்கிறது இந்தப் பேச்சு. நான்கு வயதுக் குழந்தையைக் கூட இப்படிப் பேசவைக்கும் சுட்டி டி.வி.க்குப் பெற்றோர்கள் கடமைப்பட்டிருக்கிறார்கள்! சுட்டி டி.வி.யின் சொந்த சரக்கு தேறாது என்றாலும் டோராவின் பயணங்கள் (குறிப்பாக), ஸ்பைடர்மேன், குளோரியாவின் வீடு, ஹீமேன், கிரேஸி ஜெஸ்ஸி, செட்ரிக் [...]


April 6, 2009

இலக்கண போலீஸ்

Posted by : சாத்தான்

Downfall of Grammar. படத்தைப் பார்த்தவர்களுக்கு இன்னும் தமாசாக இருக்கும்.


March 14, 2009

ஆண்களுக்கு ரப்பர் கருவி

Posted by : சாத்தான்

நாள் ஒரு மின்னூல் வலையகத்திலிருந்து பி.டி.எஃப். கோப்புகளை சரமாரியாக டவுன்லோட் செய்து மேய்ந்துகொண்டிருந்தபோது 1937 அக்டோபர் ‘பிரசண்ட விகட’னில் கண்ணில் பட்டது இந்த முத்து. படிப்பதற்க்குக் கடினமா யிருப்பின் க்ளிக் செய்து பெரிதாக்கிப் பாருங்கள். அப்போது ஆணுறையை ரப்பர் என்றிருக்கிறார்கள். இப்போது ரப்பர் என்றால் டில்டோ. ஒரு கனெக்சன் இருக்கத்தான் செய்கிறது. ‘பெண்களிடமிருந்து நோய்களை வாங்கிக் கொள்ளாமல் தடுப்பதற்கு’ – பயங்கரம்!


March 4, 2009

மொழிபெயர்ப்பு ஆஃப் த டே

Posted by : சாத்தான்

Bird table = பறவை அட்டவணை


February 26, 2009

மொழிபெயர்ப்பு ஆஃப் த டே

Posted by : சாத்தான்

Phenomenal Woman = வியப்புக்குரிய பெண் (இங்கிருந்து. “ride of my breasts” என்பதை “மார்பகங்களின் ஓட்டம்” என்றும் “wondered”ஐ “அதிசயித்தார்கள்” என்றும் மொழிபெயர்த்திருக்கிறார் மொழிபெயர்ப்பாளர். மார்பகங்கள் ஓடுமா?) மூலம்: Phenomenal Woman. கவிதையை மொழிபெயர்ப்பதில் பலருக்கு உள்ள நம்பிக்கை வியப்பூட்டுகிறது, வேதனையளிக்கிறது.


குட்டிப் பதிவு

சுட்டி டி.வி.யில் லக்கி லூக்
சிறுவர்களாவோம்! இன்றிலிருந்து திங்கள் முதல் வெள்ளி வரை மதியம் 1.30 மணிக்கு. மகனுக்கு லக்கி லூக் indoctrination தொடங்க நல்ல சந்தர்ப்பம். (7)