புதுப் பஞ்சாங்கம்
Progress Publishers என்ற முன்னேற்றப் பதிப்பகம், ராதுகா பதிப்பகம், மீர் பதிப்பகம் உள்ளிட்ட சோவியத் பதிப்பகங்களின் புத்தகங்களை சோவியத் காலத்தில் தமிழகத்தில் விற்றுவந்த நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் தற்போது தன் கையிருப்பில் உள்ள ருஷ்யப் புத்தகங்களைத் தொடர்ந்து விற்றும் தாறுமாறாகப் பதிப்பித்தும் வருவது தெரிந்த விஷயம். முன்னேற்றப் பதிப்பகத்தின் ‘ருஷ்யப் புரட்சி 1917′ என்ற படக்கதையின் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் மறுபதிப்பை ‘சித்திரக்கதை‘யில் பார்த்தேன். உள்ளே ஒரு பக்கத்தில் மொண்ணை செவ்வகத்திற்குள் நியூ செஞ்சுரிக்காரர்கள் [...]
மொழிபெயர்ப்பு ஆஃப் த டே
Phenomenal Woman = வியப்புக்குரிய பெண் (இங்கிருந்து. “ride of my breasts” என்பதை “மார்பகங்களின் ஓட்டம்” என்றும் “wondered”ஐ “அதிசயித்தார்கள்” என்றும் மொழிபெயர்த்திருக்கிறார் மொழிபெயர்ப்பாளர். மார்பகங்கள் ஓடுமா?) மூலம்: Phenomenal Woman. கவிதையை மொழிபெயர்ப்பதில் பலருக்கு உள்ள நம்பிக்கை வியப்பூட்டுகிறது, வேதனையளிக்கிறது.
உரத்த சிந்தனை: the மொழிபெயர்ப்பு
ட்விட்டரில் பாஸ்டன் பாலா ‘the’வை எப்படி மொழிபெயர்ப்பது என்று ஒரு கேள்வி போட்டிருந்தார். Theவை மொழிபெயர்ப்பதில் சிரமம் இல்லை என்றாலும் குறிப்பிட்ட இடங்களில் குறிப்பிட்ட விதமாக அதை மொழிபெயர்ப்பது ஏன் என்று விளக்கத் தொடங்கினால் ‘கேராக’ இருக்கிறது. எனவே இந்தப் பதிவைப் பாதி விளக்கமும் பாதி ரோசனையும் பாதி மறைமுகக் கேள்விகளுமாகத் தருகிறேன். article என்கிற விஷயம் தமிழில் இல்லை. A, an, the ஆகியவை தம்மை அடுத்து வரும் சொற்களில் சேர்க்கும் பொருள், எண்ணிக்கை போன்ற [...]
மொழிபெயர்ப்பு ஆஃப் த டே
Siblingஐ உடன்பிறப்பு என்று மொழிபெயர்க்கிறோம். Spouseஐ எப்படி மொழிபெயர்ப்பீர்கள் என்று முன்பொரு முறை கேட்டதற்கு ஒரு நண்பர் சொன்னார் நக்கலாக: உடன்படுப்பு. (நாகரிகமானவர்கள் ‘வாழ்க்கைத் துணை’ என்பதைப் பயன்படுத்துகிறார்கள்.)

