• குட்டிப் பதிவு

    சுட்டி டி.வி.யில் லக்கி லூக்
    சிறுவர்களாவோம்! இன்றிலிருந்து திங்கள் முதல் வெள்ளி வரை மதியம் 1.30 மணிக்கு. மகனுக்கு லக்கி லூக் indoctrination தொடங்க நல்ல சந்தர்ப்பம். (7)


Archive for the ‘மொழிபெயர்ப்பு’ Category


மொழிபெயர்ப்பு ஆஃப் த டே

எனது நோக்கியா செல்பேசியின் இயக்கமுறைமையைப் புதுப்பித்த பின் அதில் இலவசமாக சில மென்பொருட்கள் ஏற்றப்பட்டிருந்தன. அதில் ஒன்று IndiSmS என்ற நகைச்சுவை மென்பொருள். இந்திய மொழிகளில் குறுஞ்செய்தி அனுப்புவதற்காகவாம் இந்தத் தமாசு. வழங்கியோர் எடர்னோ இன்ஃபோடெக்
இடைமுகத்தைப் பாதி மொழிபெயர்ப்பும் பாதி ஒலிபெயர்ப்புமாக அரைகுறையாகத் தமிழாக்கியிருக்கிறார்கள். ‘அன்புள்ள’, ‘வணக்கம்’, ‘நன்றி’ போன்ற எளிய சொற்களை வரவழைக்கவே படாத பாடு பட வேண்டியிருக்கிறது. ‘அன்பு’ கடைசி வரை வரவில்லை. இந்த மென்பொருளை சும்மா திறந்து மூடினாலே Updating dictionary என்று [...]

சுட்டி டி.வி.யானது…

1.
கடும் மழலையில் பேசும் என் 4 வயது மகன் சிரமத்தை மீறிச் சொல்லும் சொற்கள் சில: விளையாட்டுப் பூங்கா, சுரங்கப் பாதை, மலை வீடு, உயரமான மலை, குழந்தைகள். வழக்கமான இனிமையிலிருந்து மாறுபட்ட இனிமையாக இருக்கிறது இந்தப் பேச்சு. நான்கு வயதுக் குழந்தையைக் கூட இப்படிப் பேசவைக்கும் சுட்டி டி.வி.க்குப் பெற்றோர்கள் கடமைப்பட்டிருக்கிறார்கள்!
சுட்டி டி.வி.யின் சொந்த சரக்கு தேறாது என்றாலும் டோராவின் பயணங்கள் (குறிப்பாக), ஸ்பைடர்மேன், குளோரியாவின் வீடு, ஹீமேன், கிரேஸி ஜெஸ்ஸி, செட்ரிக் போன்ற டப்பிங் [...]

மொழிபெயர்ப்பின் மொழிபெயர்ப்பு – 1

இது 2002இல் நான் மொழிபெயர்த்த சிறுகதை. ஜெர்மன் மொழியிலிருந்து ஆங்கிலத்திற்கு செய்யப்பட்ட மொழிபெயர்ப்பின் தமிழாக்கம். அகழ்வாராய்ச்சியில் கிடைத்தது. ஹைன்ரிஷ் போல் (Heinrich Böll) எழுதிய At the Bridge என்ற கதையின் பெயர்ப்பு. கொஞ்சம் டச்சப் வேலை செய்து பெருந்தவறுகளைத் திருத்தியிருக்கிறேன். மற்றபடி இப்போதும் என் மொழிபெயர்ப்பு அப்படியேதான் இருக்கிறது.
மொழிபெயர்ப்பு பற்றி சவுண்டு விடுபவன் தன் மொழிபெயர்ப்பைக் காட்டாமல் இருக்கிறான் என்ற அவப்பெயரைத் தவிர்க்கவும் இதனை இங்கு ரிலீஸ் செய்கிறேன்.
ஹைன்ரிஷ் போல் எனது அபிமான ஜெர்மன் எழுத்தாளர்களில் [...]

இலக்கண போலீஸ்

Downfall of Grammar. படத்தைப் பார்த்தவர்களுக்கு இன்னும் தமாசாக இருக்கும்.

புதுப் பஞ்சாங்கம்

Progress Publishers என்ற முன்னேற்றப் பதிப்பகம், ராதுகா பதிப்பகம், மீர் பதிப்பகம் உள்ளிட்ட சோவியத் பதிப்பகங்களின் புத்தகங்களை சோவியத் காலத்தில் தமிழகத்தில் விற்றுவந்த நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் தற்போது தன் கையிருப்பில் உள்ள ருஷ்யப் புத்தகங்களைத் தொடர்ந்து விற்றும் தாறுமாறாகப் பதிப்பித்தும் வருவது தெரிந்த விஷயம்.
முன்னேற்றப் பதிப்பகத்தின் ‘ருஷ்யப் புரட்சி 1917′ என்ற படக்கதையின் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் மறுபதிப்பை  ‘சித்திரக்கதை‘யில் பார்த்தேன். உள்ளே ஒரு பக்கத்தில் மொண்ணை செவ்வகத்திற்குள் நியூ செஞ்சுரிக்காரர்கள் போட்டிருக்கும் [...]