சுமார் 2 வயதில் எனக்கொரு மகன் இருக்கிறான். அவனுக்கு சோறு தண்ணி இறங்க வேண்டும் என்றால் டி.வி.யில் சன் மியூசிக் போட வேண்டும், அல்லது இந்த கம்ப்யூட்டரில் வீடியோ பாடல்களை ஓட்ட வேண்டும். முக்கால்வாசிப் பாடல்களில் த்ரிஷா வருகிறார். த்ரிஷா மேல் எனக்கிருக்கும் அளவு கடந்த மரியாதை என்னிடமிருந்து அவனுக்குத் தொற்றியிருக்கிறது. இதற்கு மரபணு ரீதியான காரணங்கள் இருக்கலாம்.
அவன் அதிர்ஷ்டக்காரன். நான் அவன் வயதில் இருந்தபோது அவனுக்குப் பார்க்கக் கிடைப்பது போல் த்ரிஷா, அசின், நயன்தாரா, ஷ்ரேயா, [...]
Archive for the ‘பொட்டி’ Category
த்ரிஷாவைப் பார்த்து வளரும் தலைமுறை
எனக்குப் பிடித்த ரேடியோ விளம்பரங்கள்
‘எனக்குப் பிடித்த’ என்று ஆரம்பித்து ஒரு பதிவாவது போடவில்லை என்றால் நான் வலைப்பதிவுலக மரபை மீறியவனாகி சக வலைப்பதிவாளர்களால் ஒதுக்கப்படலாம். ஆகவேதான் இந்தப் போஸ்ற்.
எனக்குப் பிடித்த இந்த இரண்டு விளம்பரங்களுமே எகனை முகனையை சிறப்பாக, அல்லது திறம்பட, அல்லது இரண்டு விதமாகவும் கையாண்டிருக்கின்றன. ஓவர் டு அடுடேஸ்மென்ட்:
1. சுவைக்கத் தெரிந்த நாக்கே
நீ விரும்புவது ஏஆர்ஆர் பாக்கே
2. இவன்தான் என் மகன் – my son
இவன் போடுற பனியன்-ஜட்டி Bison.
இரண்டிற்கும் குரலை ஈந்தவர் பல்லாயிரக்கணக்கான ரேடியோ விளம்பரங்களில் குரல் [...]

