April 22, 2009

சுட்டி டி.வி.யானது…

Posted by : சாத்தான்

1. கடும் மழலையில் பேசும் என் 4 வயது மகன் சிரமத்தை மீறிச் சொல்லும் சொற்கள் சில: விளையாட்டுப் பூங்கா, சுரங்கப் பாதை, மலை வீடு, உயரமான மலை, குழந்தைகள். வழக்கமான இனிமையிலிருந்து மாறுபட்ட இனிமையாக இருக்கிறது இந்தப் பேச்சு. நான்கு வயதுக் குழந்தையைக் கூட இப்படிப் பேசவைக்கும் சுட்டி டி.வி.க்குப் பெற்றோர்கள் கடமைப்பட்டிருக்கிறார்கள்! சுட்டி டி.வி.யின் சொந்த சரக்கு தேறாது என்றாலும் டோராவின் பயணங்கள் (குறிப்பாக), ஸ்பைடர்மேன், குளோரியாவின் வீடு, ஹீமேன், கிரேஸி ஜெஸ்ஸி, செட்ரிக் [...]


April 7, 2009

திருட்டு – 2

Posted by : சாத்தான்

எனக்கு நிஜமாகவே புரியாத ஒரு விஷயம் – எங்கோ போகும் வழியில் திடீரென எதிர்ப்படும் உன்னை எதிர்பாராமல் திகைக்கிறேன் ஆறாம் வாய்ப்பாடு மறந்தவனாய். இந்த நாலு வரியை சொந்தமாக எழுதத் துப்பு இருக்காதா? இதைக் கூடவா காப்பியடிப்பார்கள்? இதை ஒருவர் தன் வலைப்பதிவில் தன் பெயரில் போட்டுக்கொண்டுள்ளார். தொடர்பான முந்தைய பதிவு


March 26, 2009

புதுப் பஞ்சாங்கம்

Posted by : சாத்தான்

Progress Publishers என்ற முன்னேற்றப் பதிப்பகம், ராதுகா பதிப்பகம், மீர் பதிப்பகம் உள்ளிட்ட சோவியத் பதிப்பகங்களின் புத்தகங்களை சோவியத் காலத்தில் தமிழகத்தில் விற்றுவந்த நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் தற்போது தன் கையிருப்பில் உள்ள ருஷ்யப் புத்தகங்களைத் தொடர்ந்து விற்றும் தாறுமாறாகப் பதிப்பித்தும் வருவது தெரிந்த விஷயம். முன்னேற்றப் பதிப்பகத்தின் ‘ருஷ்யப் புரட்சி 1917′ என்ற படக்கதையின் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் மறுபதிப்பை  ‘சித்திரக்கதை‘யில் பார்த்தேன். உள்ளே ஒரு பக்கத்தில் மொண்ணை செவ்வகத்திற்குள் நியூ செஞ்சுரிக்காரர்கள் [...]


March 7, 2009

இது மேட்டர் சைட் இல்லை

Posted by : சாத்தான்

வலைப்பதிவு எழுதும்போது ‘கெட்ட வார்த்தை’களைப் பயன்படுத்துவதில் எனக்குப் பிரச்சினை இல்லை. ஆனால் கூகிளிலும் குருஜி.காமிலும் உடலுறுப்புகளின் பெயரைத் தேடி தினமும் இந்த வலைப்பதிவுக்கு வருகிறார்கள். இந்த கேஸ்களைத் தவிர்க்க உடலுறுப்பு சார்ந்த கெட்ட வார்த்தைகளைப் பயன்படுத்தக் கூடாது என்று தீர்மானம் மேற்கொள்ள வேண்டியிருக்கிறது.


February 23, 2009

பழைய பாய்ச்சல்

Posted by : சாத்தான்

டெக்ஸ் வில்லர், XIII மாதிரியான தரத்தில் – சித்திரங்களிலாவது – தமிழில் காமிக்ஸ் கொண்டுவரும் சாத்தியம் இருந்து அதைத் தமிழ் பதிப்புத் துறை உணராமலே இருந்துவிட்டதோ என்று தோன்றியது, இந்தப் படத்தைப் பார்த்தபோது (கிட்டத்தட்ட இந்தப் படத்துடன் ஒப்பிடலாம்).


குட்டிப் பதிவு

சுட்டி டி.வி.யில் லக்கி லூக்
சிறுவர்களாவோம்! இன்றிலிருந்து திங்கள் முதல் வெள்ளி வரை மதியம் 1.30 மணிக்கு. மகனுக்கு லக்கி லூக் indoctrination தொடங்க நல்ல சந்தர்ப்பம். (7)