திசை காட்டிப் பறவையில் 20ஆம் அத்தியாயம் சேர்க்கப்பட்டுள்ளது.
Archive for the ‘நாவல்’ Category
வெண்கலக் கடையில் யானை
க்ளாசிக் கதைகளை இன்றைய பண்பாட்டுச் சூழலுக்கு ஏற்ப எப்படியெல்லாம் மாற்றியெழுதுகிறார்கள்/பகடி செய்கிறார்கள்!
ஜேன் ஆஸ்டனின் Pride and Prejudiceஇன் நாசூக்கான உலகத்தில் zombieகளை அவிழ்த்துவிட்டிருக்கிறார் ஒரு எழுத்தாளர். Pride and Prejudice and Zombiesஐக் கண்டிப்பாக வாங்கிப் படிக்கப்போகிறேன்!
புது உலகு படைப்பதில் எனது பங்கு
1. தமிழின் இரண்டாவது க்யூபிச நாவலான எனது ‘திசை காட்டிப் பறவை‘யில் 17ஆம், 18ஆம் அத்தியாயங்கள் சேர்க்கப்பட்டிருக்கின்றன.
2. தவிர்க்கவியலாத காரணங்களால் இவ்வலைப்பதிவில் இனி பின்னூட்டங்கள் வடிகட்டப்படும்.
குமாரின் கதை
கி.பி. 2010-இல் வெளிவரப் போகும் எனது நாவலின் முதல் அத்தியாயத்தை இங்கு தருகிறேன். ‘விளக்கில் தொங்கும் வெளிச்சம்’ என்ற தற்காலிகத் தலைப்பைக் கொண்ட இந்நாவலை Faber & Faber பதிப்பிக்கும். இந்த நாவல் 35 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு ஏதாவது ஒரு முன்னணி பிலிம் மேக்கரால் திரைப்படமாகவும் வரும். சாகித்திய அகாதமி விருது கமிட்டி, please excuse.
* * *
அத்தியாயம் 1 – குமாரின் கதை
முன்னொரு காலத்தில் சென்னையில் சேல்ஸ் பிரிவில் குமார் என்பவன் வேலை பார்த்து வந்தான். [...]

