மையநீரோட்டம் » தந்தைமை

சுட்டி டி.வி.யானது…
1.

கடும் மழலையில் பேசும் என் 4 வயது மகன் சிரமத்தை மீறிச் சொல்லும் சொற்கள் சில: விளையாட்டுப் பூங்கா, சுரங்கப் பாதை, மலை வீடு, உயரமான மலை, குழந்தைகள். வழக்கமான இனிமையிலிருந்து மாறுபட்ட இனிமையாக இருக்கிறது இந்தப் பேச்சு. நான்கு வயதுக் குழந்தையைக் கூட இப்படிப் பேசவைக்கும் சுட்டி டி.வி.க்குப் பெற்றோர்கள் கடமைப்பட்டிருக்கிறார்கள்!

சுட்டி டி.வி.யின் சொந்த சரக்கு தேறாது என்றாலும் டோராவின் பயணங்கள் (குறிப்பாக), ஸ்பைடர்மேன், குளோரியாவின் வீடு, ஹீமேன், கிரேஸி ஜெஸ்ஸி, செட்ரிக் போன்ற டப்பிங் தொடர்கள் சுமாரான மொழிபெயர்ப்பையும் பண்பாட்டு அன்னியத்தன்மையையும் தாண்டிக் குழந்தைகளுக்குத் தமிழ் கற்றுக்கொடுக்கின்றன.

குழந்தைகள் பள்ளியிலும் மற்றவர்களுடன் பழகுவதிலும் கற்றுக்கொள்வது போக சன் டி.வி.யையும் விஜய் டி.வி.யையும் பார்த்தா தமிழ் கற்றுக்கொள்ளப்போகிறார்கள்? எப்போதும் டி.வி. ஓடிக்கொண்டிருக்கும் வீடுகளில் டப்பிங் தமிழ்தான் குழந்தைகளுக்கு செந்தமிழைக் கற்றுக்கொடுக்க வேண்டியிருக்கிறது. குறிப்பாக 4 போன்ற ரெண்டுங்கெட்டான் வயதில் இருப்பவர்களுக்கு. 6-7 வயது என்றால் கூடப் புத்தகம் படிக்கவைக்கலாம், படித்துக் காட்டலாம்.

2.

கலைக் கண்ணோடு பார்க்கும்போது சுட்டி டி.வி.யில் வரும் நிகழ்ச்சிகளில் சிறந்தது நான் பார்த்த வரை ‘குளோரியாவின் வீடு’ என்ற தொடர்தான். இந்தக் கதையில் வரும் மனித உருவங்கள், கட்டிடங்கள், நிலப்பரப்புகள், பொருட்கள் முதலானவை அற்புதமான கற்பனையுடன் வரையப்பட்டிருக்கின்றன.

Image courtesy: DasErste/Check Eins

2000ஆம் ஆண்டில் வந்த Gloria’s House என்ற ஆங்கிலத் தொடரின் டப்பிங் இது. படங்களை வரைந்தவர் லீ ஷெப்பர்ட் (Lee Sheppard) என்ற இளம் ஆஸ்திரேலிய கார்ட்டூனிஸ்ட், அனிமேஷன் கலைஞர்.

டப்பிங் கூட அட்டகாசம். நல்ல, வித்தியாசமான நகைச்சுவை. குரல் கொடுத்தவர்கள் நிச்சயம் சம்பளத்திற்கு அதிகமாக வேலை செய்திருக்கிறார்கள். தொடரின் திரைப்பதிவுகள் சிலவற்றையும் விவரங்களையும் இந்த ஜெர்மன் டி.வி. சைட்டில் பார்க்கலாம்.

3.

இந்த டப்பிங் தொடர்களில் மொழி தொடர்பான விஷயங்களை விட்டால் ரொம்பக் கடுப்பான விஷயம் கற்பனைப் பஞ்சம்.

எதற்கெடுத்தாலும் தமிழ் சினிமாப் பாடல்களையும் பின்னணி இசையையுமே பிடித்துத் தொங்கிக்கொண்டிருந்தால் எரிச்சலாக இருக்கிறது. டப்பிங் மற்றும் சொந்த நிகழ்ச்சிகளின் டைட்டில் இசைக்கும் நிகழ்ச்சிகளுக்கான விளம்பரங்களுக்கும் சுட்டி டி.வி. திரைப்படப் பாடல்களை மிக அதிகமாகப் பயன்படுத்துகிறது. ஸ்பைடர் மேன் தொடரின் டைட்டிலுக்கு மூலத்தில் பின்னணி இசை/பாடல் போடாமலா விட்டிருப்பார்கள்? ‘பந்தலேரோ’, ‘டோராவின் பயணங்கள்’ போன்ற தொடர்களுக்குச் செய்தது போல் பாட்டையும் டப்பிங் செய்வதுதானே (ஆனால் பந்தலேரோ பாட்டு படுமோசம்)?

இதற்கு காரணம்:

1. சுட்டி டி.வி.காரர்களிடம் சரக்கு இல்லாமை.

2. சினிமாவையும் அரசியலையும் (கிரிக்கெட்டையும்) விட்டால் ஒரு மண்ணும் தெரியாமை, நம் பத்திரிகைகள் போல.

4.

கதாபாத்திரங்களின் பெயர்கள் நம் சூழலுக்குப் பொருந்தாமல்/உச்சரிக்கக் கடினமாக இருப்பதால் பிரபு, மணி, புஜ்ஜி என்றெல்லாம் ஒரேயடியாக உள்ளூர்ப்படுத்தும் அபத்தம் சப்பை மேட்டர் என்றாலும் உறுத்தத்தான் செய்கிறது. Beat, Notta, Molly, Wazza போன்ற பெயர்கள் வேலைக்கு ஆகாது என்பதற்காக மேற்கத்தியக் கதாபாத்திரங்களுக்கு உள்ளூர்ப் பெயர் வைப்பதும் கற்பனைப் பஞ்சம்தானே. அதற்கு பதிலாக Nottaவை மேரி என்றும் Wazzaவை ரிச்சர்ட் என்றும் மாற்றிக்கொள்ளலாமே.

5.

‘சூப்பர் 5′ என்ற பெயரில் ஒரிஜினல் (கவுண்டமணியின் பொய்க்கு செந்தில் சிரித்துக்கொள்வது போல் சிரித்துக்கொள்க) தொடர் ஒன்று வருகிறது. பின்னிவிட்டார்கள். கதை, திரைக்கதை, வசனம், நடிப்பு, இசை, ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் எலலாம் பயங்கரம். குழந்தைகளை சாப்பிட வைக்க சில தாய்மார்கள் ‘சூப்பர் 5 போடுவேன்’ என்று சொல்லி மிரட்டிப் பணியவைப்பதாகக் கேள்வி.

நானும் சிறு வயதில் நான்கு மூலைகளிலும் நால்வேறு வண்ணங்கள் பூசப்பட்ட திரையைக் கொண்ட டயனோரா டி.வி.யில் தூர்தர்ஷன் நிகழ்ச்சிகள் பார்த்திருக்கிறேன். அப்போது எங்கே குழந்தைகளுக்கு தனி சானல். பேபி ஷாலினியும் ‘ஒரு விரல்’ கிருஷ்ணாராவும் நடித்த ‘அம்லு’ என்று ஒரு தொடரையும் ஞாயிற்றுக்கிழமை காலையில் ‘ஏக் தோ தீன் சார்’ என்று ஒரு இந்தித் தொடரையும் பார்த்திருக்கிறேன். அம்லு ETஐப் பார்த்து அடித்தது. ‘ஏக் தோ தீன் சார்’ ஹார்டி பாய்ஸ், பேமஸ் பைவ் வகையறாக்களைப் பார்த்து அடித்தது. பின்னதின் பழைய ஃபார்முலாவை எடுத்துக்கொண்டு அபத்தமான மாயாஜால அம்சங்களைச் சேர்த்து உருவாக்கப்பட்ட மரணக் கடியே ‘சூப்பர் 5′. பாவம் நடித்த குழந்தைகள்.

6.

‘லக்கி லூக்’ தொடர் குழந்தைகளிடையே எவ்வளவு வரவேற்பு பெற்றிருக்கிறது என்று தெரியவில்லை. டோரா, பென்10 போன்ற சில கதாபாத்திரங்கள் பிரபலமாகிவிட்டதால் அவற்றின் படம் போட்ட கைக்குட்டை, ஸ்டிக்கர், புத்தகப் பை, மதிய உணவு டப்பா போன்றவை அமோகமாக விற்பனையாகின்றன. லக்கி லூக்கிற்கு அந்த அந்தஸ்து கிடைக்குமா? ஆனால் லக்கி லூக் எப்போது குழந்தைகளுக்கான கதையாக இருந்திருக்கிறது.

18 மாதக் குழந்தையுடன் பேசக் கூடிய விஷயங்கள்
‘டி.வி.யை அணைத்துவிட்டு உங்கள் மகனுடன் நிறைய பேசுங்கள், அவன் பேச்சுத் திறன் நன்றாக வளரும்’ என்று வாரிசின் டாக்டர் சொல்லியிருக்கிறார். அதனால் அவன் மாடு சத்தம், ஆட்டோ சத்தம், கோவில் சத்தம் எல்லாம் படு உன்னிப்பாகக் கேட்கும்போதும் என் அர்த்தமுள்ள சத்தத்தை அவன் காதில் போடுவதைக் கொள்கையாக வைத்திருக்கிறேன்.

குழந்தைகளுடன் பேசுவது என்று முடிவெடுத்துவிட்டால் விஷயத்திற்குப் பஞ்சமே இல்லை. இன்னதுதான் பேச வேண்டும் என்றில்லை. நம் நெருங்கிய நண்பர்கள் கூட ஜீரணித்துக்கொள்ள முடியாத கருத்துக்களைக் குழந்தைகளிடம் சொல்லலாம். அவர்களுக்கு ஒன்றும் புரியப் போவதில்லை.

குழந்தைகளுடன் பேச லாஜிக் தேவையில்லை.  சமூகம் நம் மீது சுமத்தும் மொழி சார்ந்த விதிமுறைகளைக் கடைபிடிக்கும் நிர்ப்பந்தம் குழந்தைகளுடன் பேசும்போது நமக்கில்லை. ஜூனியருடன் டாட்டா போகும்போது இலக்கணம், உச்சரிப்பு, கோர்வையான பேச்சு, இதற்கெல்லாம் கூட டாட்டாதான்.

பெரும்பாலும் ஆட்டோ சத்தத்திற்குக் கிடைக்கிற கவனிப்பு என் சத்தத்திற்குக் கிடைப்பதில்லை. இருப்பினும் டாக்டர் பேச்சு கருதிப் பையனுடன் பொதுவாக நான் பேசும் விடயங்கள் பின்வருமாறு:

“அந்தப் பொண்ணு எவ்ளோ அழகா இருக்கா பாத்தியா? அப்பாவ கண்டுக்காம போறா பாரு, திமிர் புடிச்சவ.”

“அந்த அங்க்கிள் தொப்பை பானை மாதிரி இருக்கு பாத்தியா? அங்க்கிள், அங்க்கிள், நீங்க ஆனை மாமாவா பானை மாமாவான்னு கேக்கறியா?”

“பாரு, பைத்தியக்காரக் கோயில்ல மைக் போட்டு கத்தறாங்க. சரியான லூசு கோயில், இல்ல? [வெளியே வரும் முதிய பக்திமான் ஒருவரைக் காட்டி] இந்தப் பையன் எந்த ஸ்கூல் தெரியுமா?”

த்ரிஷாவைப் பார்த்து வளரும் தலைமுறை
சுமார் 2 வயதில் எனக்கொரு மகன் இருக்கிறான். அவனுக்கு சோறு தண்ணி இறங்க வேண்டும் என்றால் டி.வி.யில் சன் மியூசிக் போட வேண்டும், அல்லது இந்த கம்ப்யூட்டரில் வீடியோ பாடல்களை ஓட்ட வேண்டும். முக்கால்வாசிப் பாடல்களில் த்ரிஷா வருகிறார். த்ரிஷா மேல் எனக்கிருக்கும் அளவு கடந்த மரியாதை என்னிடமிருந்து அவனுக்குத் தொற்றியிருக்கிறது. இதற்கு மரபணு ரீதியான காரணங்கள் இருக்கலாம்.

அவன் அதிர்ஷ்டக்காரன். நான் அவன் வயதில் இருந்தபோது அவனுக்குப் பார்க்கக் கிடைப்பது போல் த்ரிஷா, அசின், நயன்தாரா, ஷ்ரேயா, கோபிகா ரேஞ்சுக்கு யாரும் இல்லை. எனக்கு வாய்த்த கருப்பு-வெள்ளை டயனோரா டி.வி.யில் நான் பார்த்த அழகிகள் சீமா, சில்க் ஸ்மிதா, மஞ்சுபார்கவி, ஸ்ரீப்ரியா, மேனகா, கடும் மேக்கப்புடன் கூடிய ஸ்ரீதேவி (மூக்காபரேஷனுக்கு முன்பும் பிறகும்), படாபட் ஜெயலட்சுமி, சில சமயம் ஜெயசுதா… இந்தப் பட்டியலைத் தொடர்வதில் அர்த்தமில்லை.

என்னோடு ஒப்பிடும்போது என் மகனுக்கு இந்த வயதிலேயே அவனுடைய அழகுணர்ச்சியை வளர்க்கும் பெண்களாகக் கிடைப்பதில் எனக்கு சந்தோசமே.