1.
கடும் மழலையில் பேசும் என் 4 வயது மகன் சிரமத்தை மீறிச் சொல்லும் சொற்கள் சில: விளையாட்டுப் பூங்கா, சுரங்கப் பாதை, மலை வீடு, உயரமான மலை, குழந்தைகள். வழக்கமான இனிமையிலிருந்து மாறுபட்ட இனிமையாக இருக்கிறது இந்தப் பேச்சு. நான்கு வயதுக் குழந்தையைக் கூட இப்படிப் பேசவைக்கும் சுட்டி டி.வி.க்குப் பெற்றோர்கள் கடமைப்பட்டிருக்கிறார்கள்!
சுட்டி டி.வி.யின் சொந்த சரக்கு தேறாது என்றாலும் டோராவின் பயணங்கள் (குறிப்பாக), ஸ்பைடர்மேன், குளோரியாவின் வீடு, ஹீமேன், கிரேஸி ஜெஸ்ஸி, செட்ரிக் போன்ற டப்பிங் [...]
Archive for the ‘தந்தைமை’ Category
சுட்டி டி.வி.யானது…
18 மாதக் குழந்தையுடன் பேசக் கூடிய விஷயங்கள்
‘டி.வி.யை அணைத்துவிட்டு உங்கள் மகனுடன் நிறைய பேசுங்கள், அவன் பேச்சுத் திறன் நன்றாக வளரும்’ என்று வாரிசின் டாக்டர் சொல்லியிருக்கிறார். அதனால் அவன் மாடு சத்தம், ஆட்டோ சத்தம், கோவில் சத்தம் எல்லாம் படு உன்னிப்பாகக் கேட்கும்போதும் என் அர்த்தமுள்ள சத்தத்தை அவன் காதில் போடுவதைக் கொள்கையாக வைத்திருக்கிறேன்.
குழந்தைகளுடன் பேசுவது என்று முடிவெடுத்துவிட்டால் விஷயத்திற்குப் பஞ்சமே இல்லை. இன்னதுதான் பேச வேண்டும் என்றில்லை. நம் நெருங்கிய நண்பர்கள் கூட ஜீரணித்துக்கொள்ள முடியாத கருத்துக்களைக் குழந்தைகளிடம் சொல்லலாம். அவர்களுக்கு [...]
த்ரிஷாவைப் பார்த்து வளரும் தலைமுறை
சுமார் 2 வயதில் எனக்கொரு மகன் இருக்கிறான். அவனுக்கு சோறு தண்ணி இறங்க வேண்டும் என்றால் டி.வி.யில் சன் மியூசிக் போட வேண்டும், அல்லது இந்த கம்ப்யூட்டரில் வீடியோ பாடல்களை ஓட்ட வேண்டும். முக்கால்வாசிப் பாடல்களில் த்ரிஷா வருகிறார். த்ரிஷா மேல் எனக்கிருக்கும் அளவு கடந்த மரியாதை என்னிடமிருந்து அவனுக்குத் தொற்றியிருக்கிறது. இதற்கு மரபணு ரீதியான காரணங்கள் இருக்கலாம்.
அவன் அதிர்ஷ்டக்காரன். நான் அவன் வயதில் இருந்தபோது அவனுக்குப் பார்க்கக் கிடைப்பது போல் த்ரிஷா, அசின், நயன்தாரா, ஷ்ரேயா, [...]

