முடிந்து தொடங்கும் கவிதை
பயணம் முடிந்த பின்னும் தொடர்ந்து நடக்கும் கால்களை பின்தொடர்கின்றன கண்கள் முடிந்துவிட்டது பயணம் தொடர்ந்து நடக்கும் கால்கள் பின்தொடரும் கண்கள் பின்தொடர்கின்றன கண்கள் தொடர்ந்து நடக்கும் கால்களை பயணம் முடிந்த பின்னும் பயணம் முடிந்துவிட்டது கால்கள் நடக்கும் தொடர்ந்து கண்கள் பின்தொடரும்
புதுக்கவிதையின் வீச்சும் வலிமையும்
இந்தப் பக்கம் வந்து ரொம்ப நாளாகிவிட்டாலும் சில சமயங்களில் என் வலைப்பதிவுகள பற்றி கூகிளில் ஈகோ ட்ரிப் அடித்து மனசைத் தேற்றிக்கொள்வதுண்டு. இன்று மதியம் அப்படியான ஒரு ட்ரிப் அடித்தபோது என் பழைய பதிவு ஒன்றிலிருந்த சில ‘காதல் கவிதை’ களை இன்னொரு வலைப்பதிவில் பார்க்கும் பாக்கியம் கிடைத்தது. ஒரு வாலிபர் நான் தமாசாக எழுதியதை சமீபத்தில் எடுத்துத் தன் வலைப்பதிவில் போட்டுக்கொண்டுள்ளார். எழுத்துத் திருட்டில் ஈடுபட விரும்புபவர்கள் அதன் நுட்பங்களை முன்பே அதில் ஊறித் திளைத்துப் [...]
கவிதை உத்தி நெ. 1
பிதற்றலான உரைநடையைக் கவிதையாக்க நம் கவிஞர்கள் கையாளும் ஒரு உத்தியைப் பற்றிப் பயனுள்ள தகவல் ஒன்று இன்று வந்த டெக்கான் க்ரானிக்கிளின் இலவச இணைப்பில் கிடைத்தது. வாக்கிய/வாசக அமைப்பை உல்டா ஆக்கும் உத்தியைத்தான் சொல்கிறேன். என்னையே மேற்கோள் காட்டிக்கொண்டால் – எதையும் முதலிலேயே சொல்லிவிட்டால் சஸ்பென்ஸ் இருக்காது. அதனால்தான் சில கவிஞர்கள் கவிதையின் முதல் சொல்லையோ சொற்றொடரையோ அடுத்த சில வரிகளுக்கு ஒளித்து வைத்துக்கொண்டு கடைசி வரியாக ரிலீஸ் பண்ணுகிறார்கள். இதற்கு anastrophe என்று பெயராம் (தமிழ் [...]
சுய நேர்மை
பாடாவதி வங்கி ஒன்றில் வைத்திருக்கும் கணக்கிலிருந்து பணம் எடுக்க ஏ.டி.எம். போனேன் நேற்று. எனக்கு முன்பு ஒருவர் உள்ளே போய் கார்டைப் போட்டுப் போட்டு விளையாடிக்கொண்டிருந்ததால் கொஞ்ச நேரம் காத்திருந்தேன். அப்போது சிம்புட் பறவை என்று வர்ணிக்கத் தக்க தும்பி சைஸ் பூச்சி ஒன்று சுற்றிச் சுற்றி வந்தது. அதன் தொந்தரவிலிருந்து தப்பிப்பதெங்ஙனம் என்று யோசித்தவாறு நான் நின்றிருக்கையில் அந்த மனிதர் ஒரு வித நிம்மதியுடன் வெளியே வந்தார். நான் உள்ளே போய்க் கொஞ்ச நேரம் கழித்துத்தான் [...]
காதலுக்கு அவமரியாதை
(ஐலவ்யூ வைரஸ் ஆறாம் ஆண்டு நிறைவுக் கவிதை) ஃபிலிப்பைன்ஸ் நாட்டு கணிப்பொறியியல் மாணவர் ஒருவர் எழுதிய ‘ஐலவ்யூ’ வைரஸால் உலகெங்கும் நிறுவனங்களுக்குப் பல கோடி டாலர் நஷ்டம். – செய்தி காதல் கடிதம் எழுதிய தென்கிழக்காசியனே! (உன் திருப்பெயர் என் தமிழ் வாயில் நுழைய மறுக்கிறது) உன்னால் உலகப் பொருளாதாரம் பெருந்தொகை இழந்து தவிக்கிறது. நீ உன் தலையைச் சொறிந்த கையால் கீபோர்டைத் தட்டியதில் இங்கே டிஜிட்டல் டேட்டாக்கள் ரீசைக்கிள் ஆகிவிட்டன. பிலிப்பைன்சு நண்பா, நீ கணினியை [...]

