எனது நோக்கியா செல்பேசியின் இயக்கமுறைமையைப் புதுப்பித்த பின் அதில் இலவசமாக சில மென்பொருட்கள் ஏற்றப்பட்டிருந்தன. அதில் ஒன்று IndiSmS என்ற நகைச்சுவை மென்பொருள். இந்திய மொழிகளில் குறுஞ்செய்தி அனுப்புவதற்காகவாம் இந்தத் தமாசு. வழங்கியோர் எடர்னோ இன்ஃபோடெக்
இடைமுகத்தைப் பாதி மொழிபெயர்ப்பும் பாதி ஒலிபெயர்ப்புமாக அரைகுறையாகத் தமிழாக்கியிருக்கிறார்கள். ‘அன்புள்ள’, ‘வணக்கம்’, ‘நன்றி’ போன்ற எளிய சொற்களை வரவழைக்கவே படாத பாடு பட வேண்டியிருக்கிறது. ‘அன்பு’ கடைசி வரை வரவில்லை. இந்த மென்பொருளை சும்மா திறந்து மூடினாலே Updating dictionary என்று [...]
Archive for the ‘கணினி’ Category
மொழிபெயர்ப்பு ஆஃப் த டே
செல்பேசியில் தமிழ் வலைப்பக்கங்கள்
ஒரு வழியாக செல்பேசியில் தமிழ் வலைப்பக்கங்களைப் பார்க்க முடிகிறது. Skyfire என்ற புதிய செல்பேசி உலாவி பற்றிய இந்தத் தகவல் ட்விட்டரில் விக்கியும் பிரபு ஃபெராரியும் போட்ட ட்வீட்களில் கிடைத்தது. இந்த உலாவி விண்டோஸ் மொபைல் 5, 6, நோக்கியா என் சீரீஸ், இ சீரிஸ் ஆகியவற்றுக்குக் கிடைக்கிறது.
இணையத்தில் ஆளுக்கொரு தமிழ் எழுத்துருவைப் பயன்படுத்திக்கொண்டிருந்த காலத்தில் சிலர் தமிழ் வலைப்பக்கங்கள் எல்லோருக்கும் தெரிய வேண்டும் என்பதற்காக அவற்றை ஜிஃப்/ஜேபெக் படங்களாகப் போட்டதுதான் நினைவுக்கு வருகிறது. ஸ்கைஃபயர் வலைப்பக்கங்களை [...]
PHP கண்ணாமூச்சி
எனது இன்னொரு வலைப்பதிவில் தலைப்புப் படத்தை க்ளிக் செய்தால் முகப்புப் பக்கம் திறக்கும்படி செய்ய நாய்ப் பாடு பட்டேன். சாதாரணமாக இது சாதாரண விசயம்தான். ஆனால் Cup of Coffee வார்ப்புருவை வடிவமைத்த புண்ணியவாளர்கள் தேவையில்லாமல் சிக்கலாக்கியிருந்தார்கள்.
தீர்வு தேடி கூகிளில் பல மணி நேரம் காலியானது. பிறகு திடீரென்று உறைக்க, header.phpஐ முழுவதுமாகப் பார்த்தேன். header.phpஇல் ஹெடர் படத்தைத் தனியாக <div id=”logo”> என்று ஒளித்துவைத்திருக்கிறார்கள். style.css கோப்பிலும் அதை #logo என்றுதான் ஒதுக்கிவைத்திருக்கிறார்கள்.
எனக்கோ பிஹெச்பியும் தெரியாது, [...]
ஊரான் வீட்டு நெய்…
இலவச மின்னூல்கள் தரும் வலையகமான manybooks.netஐ மேய்ந்துகொண்டிருந்தபோது பழைய புத்தகங்களை நூற்றுக்கணக்கில் பார்க்க நேர்ந்தது. மீன்பிடிப்பது, சமையல், வரலாறு, மதம், துப்பறியும் கதைகள், பயண நூல்கள் என்று பல வகைப் புத்தகங்கள். ஆனால் அவற்றில் என்னைக் கவர்ந்தது அட்டை வடிவமைப்பு.
நான் பார்த்த 200 சொச்சம் பக்கங்களில் 19ஆம் நூற்றாண்டின் இறுதியிலிருந்து 20ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதி வரையிலான ஆண்டுகளில் வந்திருந்த அந்தப் புத்தகங்களின் அட்டை வடிவமைப்பில் தெரிந்த புதுமைகளையும் நேர்த்தியையும் பார்க்க ஆச்சரியமாக இருந்தது.
புத்தக வடிவமைப்பு என்பது [...]
2012இல் இணையம்
http://www.collegehumor.com/article:1770659. பெனாத்தல் சுரேஷ் தமிழ்மணத்தைக் கிண்டல் பகடி செய்து போட்ட ஒரு ஸ்க்ரீன்ஷாட் நினைவுக்கு வருகிறது.

