• குட்டிப் பதிவு

    சுட்டி டி.வி.யில் லக்கி லூக்
    சிறுவர்களாவோம்! இன்றிலிருந்து திங்கள் முதல் வெள்ளி வரை மதியம் 1.30 மணிக்கு. மகனுக்கு லக்கி லூக் indoctrination தொடங்க நல்ல சந்தர்ப்பம். (7)


Archive for the ‘ஊடகம்’ Category


அரைகுறைத் தமிழர்கள்

கீழ்க்கண்டவை கடந்த சில நாட்களில் தட்ஸ்தமிழ்.காமில் வந்த தலைப்புச் செய்திகள். இவை அனைத்திற்கும் உள்ள ஒரு ஒற்றுமை கண்ணில் படுகிறதா?

வாசிம் அக்ரம் மனைவி திடீர் சுகவீனம் – சென்னையில் இறக்கப்பட்ட விமானம்
போதையில் இருந்த ஏர் இந்தியா விமானி!
நயன்-பிரபுதேவா.. இடையே புகுந்த ஆயிஷா!
முக்காடு போட்டு வந்த புவனேஸ்வரி
ஹிஸ்பானோவை வாங்கிய டாடா
பெங்களூரில் கண் கலங்கிய வைகோ
சரணாலய பகுதியில் ஆய்வை துவக்கிய கேரளா!
உயிருடன் உள்ளவருக்கு அஞ்சலி செலுத்திய ப.சி!
இல.கணேசனிடம் நலம் விசாரித்த ஸ்டாலின்

சில செய்திகள் வேறு காரணங்களுக்காகக் கடுப்பேற்றினாலும் நான் சொல்ல [...]

மேப் போட்றவரு

சில செய்திக் கட்டுரைகளைப் படித்தால் அவற்றின் சோகத்தை மீறி சிரிப்பு வருகிறது. கல்பாக்கம் கடற்கரையில் ஒரு ருஷ்யப் பொறியியலாளரும் அவரது மகளும் தாக்கப்பட்டது பற்றி ஐ.பி.என்.-லைவில் ஒரு IANS கட்டுரை வந்திருக்கிறது.
பொறியியலாளர் தாக்கப்பட்டதையும் அவரது மகள் மானபங்கப்படுத்தப்பட்டதையும் சொல்லிவிட்டு, காவல் துறை விசாரணை செய்துவருகிறது என்பதோடு முடித்துக்கொள்ளாமல் இப்படி நாலு பாரா:
According to officials of the power project, there are over 100 Russian engineers working at the Kudankulam nuclear power [...]

எழுத்துக் கலைஞர்

ஆலன் மூர், நீல் கெய்மன் போன்ற காமிக்ஸ் ஓவியர்களுடன் இணைந்து பணியாற்றிய பெரிய எழுத்துக் கலைஞரான* Todd Klein தனது வலைப்பதிவில் எழுத்துக் கலையின் நுட்பங்களைப் படங்களுடன் எழுதுகிறார். பல நல்ல நாவல்களையும் காமிக்ஸ் புத்தகங்களையும் சுருக்கமாக, அழகாக அறிமுகப்படுத்துகிறார்.
அவரது வலைப்பதிவு இங்கே. டாடின் வலையகத்தில் கூடப் பார்க்கவும் படிக்கவும் நிறைய இருக்கிறது. அவர் நல்ல ஓவியர் கூட.
*lettering artist – பலூன்களுக்குள் உரையாடல்களை எழுதுபவர், அட்டை, விளம்பரங்கள் போன்றவற்றுக்கு லோகோக்களை வடிவமைப்பவர்…

ஆனந்த விகடனின் பொது அறிவு

இன்று வந்த ஆனந்த விகடனிலிருந்து ஒரு சாம்பிள், 56ஆம் பக்கத்தில் இருக்கும் “என் அப்பா யார்?” என்ற கட்டுரையிலிருந்து (கலரிங் மட்டும் நான் கொடுத்தது).
‘மை மம்’ (எனது அம்மா) என்ற பெயர்தான் காலப் போக்கில் கண்டபடி உருமாறி மம்மா மியா என்றாகிவிட்டது.
பத்திரிகைக்காரர்களுக்கு வேண்டிய பொது அறிவு இவர்களுக்கு இருந்தால் ஆங்கிலப் பத்திரிகைகளில் mamma mia என்ற சொற்றொடரைக் கொண்டு சோனியா காந்தி கிண்டல் செய்யப்படுவதை கவனித்திருப்பார்கள்.
விக்கிபீடியாவில் mamma miaவுக்கு அருகில் “(literally, my mum)” என்று ஆங்கிலத்தில் [...]

கசாப்பு

1.
சமீபத்தில் சன் நியூஸில் மும்பை தாக்குதல் தீவிரவாதி அஜ்மல் அமீர் கசப்/கசாபின் (Kasab) வயது பற்றித் திரையின் அடியில் ஒரு செய்திப் பட்டை ஓடிக்கொண்டிருந்தது. அதில் ‘கசாப்புக்கு’ என்று போட்டிருந்தார்கள். கசாப்புக்குத் தயாராகும் ஆடு என்பது போல.
பிற மொழிச் சொற்களை ஒலிபெயர்க்கும்போது தமிழில் pa, ba, sa, cha, ta, da, ka, ga, tha, dha போன்ற ஒலிகளைத் துல்லியமாக எழுத முடியாதது ஒரு குறைதான். ஆனால் இருப்பதை வைத்துக்கொண்டு அட்ஜஸ்ட் செய்துகொள்ள முடியும்போது கூட [...]