• குட்டிப் பதிவு

    சுட்டி டி.வி.யில் லக்கி லூக்
    சிறுவர்களாவோம்! இன்றிலிருந்து திங்கள் முதல் வெள்ளி வரை மதியம் 1.30 மணிக்கு. மகனுக்கு லக்கி லூக் indoctrination தொடங்க நல்ல சந்தர்ப்பம். (7)


Archive for the ‘இணைய கலாச்சாரம்’ Category


கசாப்பு

1.
சமீபத்தில் சன் நியூஸில் மும்பை தாக்குதல் தீவிரவாதி அஜ்மல் அமீர் கசப்/கசாபின் (Kasab) வயது பற்றித் திரையின் அடியில் ஒரு செய்திப் பட்டை ஓடிக்கொண்டிருந்தது. அதில் ‘கசாப்புக்கு’ என்று போட்டிருந்தார்கள். கசாப்புக்குத் தயாராகும் ஆடு என்பது போல.
பிற மொழிச் சொற்களை ஒலிபெயர்க்கும்போது தமிழில் pa, ba, sa, cha, ta, da, ka, ga, tha, dha போன்ற ஒலிகளைத் துல்லியமாக எழுத முடியாதது ஒரு குறைதான். ஆனால் இருப்பதை வைத்துக்கொண்டு அட்ஜஸ்ட் செய்துகொள்ள முடியும்போது கூட [...]

ருஷ்ய சிறுவர் இலக்கியம்

‘பயங்கரவாதி டாக்டர் செவன்’ சில ருஷ்ய சிறுவர் நூல்களைப் பற்றி அழகான ஓவியங்களுடன் எழுதியிருக்கிறார். தவற விடாதீர்கள்!
தமிழில் ரஃபிக் ராஜா, கிங் விஸ்வா, பயங்கரவாதி டாக்டர் செவன், சிவ், புலா சுலாகி, கனவுகளின் காதலன் முதலான சில வலைப்பதிவர்கள் நிறைய தகவல்களோடும் படங்களோடும் தொடர்ந்து எழுதிவருகிறார்கள். இவர்களது அறிவும் ஈடுபாடும் பிரமிப்பூட்டுகின்றன.
இடுகைகளின் நீளத்தைப் பொருட்படுத்தாமல் முழுமையாகப் படித்து கமென்ட் போடும் வாசகர்களிடம் தமிழில் காமிக்ஸ் கிட்டத்தட்ட இல்லாமல் போய்விட்ட சோகத்தைப் பார்க்க முடிகிறது.
இந்த வலைப்பதிவர்கள் பதிப்புத் துறையில் [...]

முதல்ல காசை எடு

என்னுடைய இன்னொரு வலைப்பதிவில் போடும் வின்டேஜ் படங்களை ஃப்ளிக்கரில் இருக்கும் பல்வேறு குழுக்களில் ஏற்றிக்கொண்டிருந்தேன். தமிழ்ப் பத்திரிகைகள், புத்தகங்களில் வந்த சித்திரங்கள் அந்தக் குழுக்களில் இருந்த வெளிநாட்டார் பலரையும் கவர்கின்றன. நாட் எனி மோர். கூகிளின் இலவச மதிய உணவு மாடலைப் பார்த்து யாஹூ எப்போது கற்றுக்கொள்ளப்போகிறது?

திருட்டு – 2

எனக்கு நிஜமாகவே புரியாத ஒரு விஷயம் -
எங்கோ போகும் வழியில்
திடீரென எதிர்ப்படும் உன்னை
எதிர்பாராமல் திகைக்கிறேன்
ஆறாம் வாய்ப்பாடு மறந்தவனாய்.
இந்த நாலு வரியை சொந்தமாக எழுதத் துப்பு இருக்காதா? இதைக் கூடவா காப்பியடிப்பார்கள்? இதை ஒருவர் தன் வலைப்பதிவில் தன் பெயரில் போட்டுக்கொண்டுள்ளார்.
தொடர்பான முந்தைய பதிவு

இலக்கண போலீஸ்

Downfall of Grammar. படத்தைப் பார்த்தவர்களுக்கு இன்னும் தமாசாக இருக்கும்.