கொரட்டூர் கொலை வழக்கு
அகதா க்றிஸ்டி என்ற மகத்தான மர்மக் கதாசிரியர் இவ்வளவு காலமாகத் தமிழில் மொழிபெயர்க்கப்படாதிருந்த காரணத்தை சமீபத்தில் ஊகித்தேன். காப்பிரைட் போக, நமது மொழிபெயர்ப்பாளர்கள் கைவைத்து சுட்டுக்கொண்டதுதான் காரணமாக இருக்கும். சிட்னி ஷெல்டனைவிட அகதா க்றிஸ்டியை மொழிபெயர்ப்பது கடினம். முயன்ற பலர் அவருடைய மொழிநடை, நகைச்சுவை, பொதுவாகத் தூக்கலாகத் தெரியும் பிரிட்டிஷ் தன்மை, மற்றும் இன்ன பிற மொழிபெயர்க்கவியலாத்தன்மைகள், எல்லாவற்றையும் உணர்ந்து கைவிட்டிருப்பார்கள். ஆனால் இதெல்லாம் மொழிபெயர்ப்பாளர்கள் கவலை. குத்துமதிப்பாளர்களுக்கு இந்தப் பிரச்சினைகள் எதுவும் காணப்படாது. இப்போது எழுத்துக்களில் [...]
மொழிபெயர்ப்பு ஆஃப் த டே
எனது நோக்கியா செல்பேசியின் இயக்கமுறைமையைப் புதுப்பித்த பின் அதில் இலவசமாக சில மென்பொருட்கள் ஏற்றப்பட்டிருந்தன. அதில் ஒன்று IndiSmS என்ற நகைச்சுவை மென்பொருள். இந்திய மொழிகளில் குறுஞ்செய்தி அனுப்புவதற்காகவாம் இந்தத் தமாசு. வழங்கியோர் எடர்னோ இன்ஃபோடெக் இடைமுகத்தைப் பாதி மொழிபெயர்ப்பும் பாதி ஒலிபெயர்ப்புமாக அரைகுறையாகத் தமிழாக்கியிருக்கிறார்கள். ‘அன்புள்ள’, ‘வணக்கம்’, ‘நன்றி’ போன்ற எளிய சொற்களை வரவழைக்கவே படாத பாடு பட வேண்டியிருக்கிறது. ‘அன்பு’ கடைசி வரை வரவில்லை. இந்த மென்பொருளை சும்மா திறந்து மூடினாலே Updating dictionary [...]
ஆனந்த விகடனின் பொது அறிவு
இன்று வந்த ஆனந்த விகடனிலிருந்து ஒரு சாம்பிள், 56ஆம் பக்கத்தில் இருக்கும் “என் அப்பா யார்?” என்ற கட்டுரையிலிருந்து (கலரிங் மட்டும் நான் கொடுத்தது). ‘மை மம்’ (எனது அம்மா) என்ற பெயர்தான் காலப் போக்கில் கண்டபடி உருமாறி மம்மா மியா என்றாகிவிட்டது. பத்திரிகைக்காரர்களுக்கு வேண்டிய பொது அறிவு இவர்களுக்கு இருந்தால் ஆங்கிலப் பத்திரிகைகளில் mamma mia என்ற சொற்றொடரைக் கொண்டு சோனியா காந்தி கிண்டல் செய்யப்படுவதை கவனித்திருப்பார்கள். விக்கிபீடியாவில் mamma miaவுக்கு அருகில் “(literally, my [...]
கசாப்பு
1. சமீபத்தில் சன் நியூஸில் மும்பை தாக்குதல் தீவிரவாதி அஜ்மல் அமீர் கசப்/கசாபின் (Kasab) வயது பற்றித் திரையின் அடியில் ஒரு செய்திப் பட்டை ஓடிக்கொண்டிருந்தது. அதில் ‘கசாப்புக்கு’ என்று போட்டிருந்தார்கள். கசாப்புக்குத் தயாராகும் ஆடு என்பது போல. பிற மொழிச் சொற்களை ஒலிபெயர்க்கும்போது தமிழில் pa, ba, sa, cha, ta, da, ka, ga, tha, dha போன்ற ஒலிகளைத் துல்லியமாக எழுத முடியாதது ஒரு குறைதான். ஆனால் இருப்பதை வைத்துக்கொண்டு அட்ஜஸ்ட் செய்துகொள்ள [...]
இலக்கண போலீஸ்
Downfall of Grammar. படத்தைப் பார்த்தவர்களுக்கு இன்னும் தமாசாக இருக்கும்.

