மலையேறிடுத்தூ

லேட்டஸ்ட் ஆனந்த விகடனின் ‘பொக்கிஷம்’ பகுதியில் இரண்டு கட்டுரைகள்: ஒன்று, டேவிட் லோ என்ற கார்ட்டூனிஸ்ட்டைப் பற்றி; இன்னொன்று பிகாசோ பற்றி. இரண்டும் முறையே 1963இலும் 1964இலும் வந்திருக்கின்றன. அந்தக் காலத்தில் விகடனில் குப்பையல்லாத மேட்டர்களும் போட்டிருக்கிறார்கள்.

ஆண்களுக்கு ரப்பர் கருவி

நாள் ஒரு நூல் வலையகத்திலிருந்து பி.டி.எஃப். கோப்புகளை சரமாரியாக டவுன்லோட் செய்து மேய்ந்துகொண்டிருந்தபோது 1937 அக்டோபர் ‘பிரசண்ட விகட’னில் கண்ணில் பட்டது இந்த முத்து. படிப்பதற்க்குக் கடினமா யிருப்பின் க்ளிக் செய்து பெரிதாக்கிப் பாருங்கள்.

அப்போது ஆணுறையை ரப்பர் என்றிருக்கிறார்கள். இப்போது ரப்பர் என்றால் டில்டோ. ஒரு கனெக்சன் இருக்கத்தான் செய்கிறது. ‘பெண்களிடமிருந்து நோய்களை வாங்கிக் கொள்ளாமல் தடுப்பதற்கு’ – பயங்கரம்!

அரவியல்

“An erection is a blushing of the penis” என்று பாலியல் நிபுணர் ஹேவ்லக் எல்லிஸ் The Psychology of Sex என்ற புத்தகத்தில் எழுதியிருக்கிறார். ஆணுறுப்பைப் பாம்பாக உருவகிப்பது பழைய விஷயம். இந்த இரண்டின் காம்பினேஷனை 1974 மார்ச் ஆனந்த விகடன் அட்டைப்படத்தில் பார்த்தேன். படத்தை வரைந்தவர் வேறு யார், ஜெயராஜ்தான்.

இது மேட்டர் சைட் இல்லை

வலைப்பதிவு எழுதும்போது ‘கெட்ட வார்த்தை’களைப் பயன்படுத்துவதில் எனக்குப் பிரச்சினை இல்லை. ஆனால் கூகிளிலும் குருஜி.காமிலும் உடலுறுப்புகளின் பெயரைத் தேடி தினமும் இந்த வலைப்பதிவுக்கு வருகிறார்கள். இந்த கேஸ்களைத் தவிர்க்க உடலுறுப்பு சார்ந்த கெட்ட வார்த்தைகளைப் பயன்படுத்தக் கூடாது என்று தீர்மானம் மேற்கொள்ள வேண்டியிருக்கிறது.