மொழிபெயர்ப்பு ஆஃப் த டே

எனது நோக்கியா செல்பேசியின் இயக்கமுறைமையைப் புதுப்பித்த பின் அதில் இலவசமாக சில மென்பொருட்கள் ஏற்றப்பட்டிருந்தன. அதில் ஒன்று IndiSmS என்ற நகைச்சுவை மென்பொருள். இந்திய மொழிகளில் குறுஞ்செய்தி அனுப்புவதற்காகவாம் இந்தத் தமாசு. வழங்கியோர் எடர்னோ இன்ஃபோடெக்

இடைமுகத்தைப் பாதி மொழிபெயர்ப்பும் பாதி ஒலிபெயர்ப்புமாக அரைகுறையாகத் தமிழாக்கியிருக்கிறார்கள். ‘அன்புள்ள’, ‘வணக்கம்’, ‘நன்றி’ போன்ற எளிய சொற்களை வரவழைக்கவே படாத பாடு பட வேண்டியிருக்கிறது. ‘அன்பு’ கடைசி வரை வரவில்லை. இந்த மென்பொருளை சும்மா திறந்து மூடினாலே Updating dictionary என்று பீட்டர் விடுகிறது. Made my day!

PHP கண்ணாமூச்சி

எனது இன்னொரு வலைப்பதிவில் தலைப்புப் படத்தை க்ளிக் செய்தால் முகப்புப் பக்கம் திறக்கும்படி செய்ய நாய்ப் பாடு பட்டேன். சாதாரணமாக இது சாதாரண விசயம்தான். ஆனால் Cup of Coffee வார்ப்புருவை வடிவமைத்த புண்ணியவாளர்கள் தேவையில்லாமல் சிக்கலாக்கியிருந்தார்கள்.

தீர்வு தேடி கூகிளில் பல மணி நேரம் காலியானது. பிறகு திடீரென்று உறைக்க, header.phpஐ முழுவதுமாகப் பார்த்தேன். header.phpஇல் ஹெடர் படத்தைத் தனியாக <div id=”logo”> என்று ஒளித்துவைத்திருக்கிறார்கள். style.css கோப்பிலும் அதை #logo என்றுதான் ஒதுக்கிவைத்திருக்கிறார்கள்.

எனக்கோ பிஹெச்பியும் தெரியாது, ஒரு மானாவும் தெரியாது. ஹெடர் கோப்பை நகலெடுத்து நோட்பேடில் போட்டு சேமித்த பின் இங்கே கிடைத்த வரிகளை ஒட்டி மாற்றிப் பார்த்தேன்.

<div id=”logo”>
<h1><a href=”<?php echo get_option(‘home’); ?>/”><?php bloginfo(‘name’); ?></a></h1>
<h2><?php bloginfo(‘description’); ?></h2>
</div>

என்பதை இப்படி மாற்றினேன்:

<div id=”logo” onclick=”window.location.href='<?php bloginfo(‘url’); ?>'” style=”cursor: pointer;”>
<h2><?php bloginfo(‘description’); ?></h2>
</div>

பிரச்சினை எதுவும் ஏற்படவில்லை. என் அனுபவம் மற்றவர்களுக்கு ஒரு பாடமாக விளங்கவே இந்தப் பகிர்வு.

ஊரான் வீட்டு நெய்…

இலவச மின்னூல்கள் தரும் வலையகமான manybooks.netஐ மேய்ந்துகொண்டிருந்தபோது பழைய புத்தகங்களை நூற்றுக்கணக்கில் பார்க்க நேர்ந்தது. மீன்பிடிப்பது, சமையல், வரலாறு, மதம், துப்பறியும் கதைகள், பயண நூல்கள் என்று பல வகைப் புத்தகங்கள். ஆனால் அவற்றில் என்னைக் கவர்ந்தது அட்டை வடிவமைப்பு.

நான் பார்த்த 200 சொச்சம் பக்கங்களில் 19ஆம் நூற்றாண்டின் இறுதியிலிருந்து 20ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதி வரையிலான ஆண்டுகளில் வந்திருந்த அந்தப் புத்தகங்களின் அட்டை வடிவமைப்பில் தெரிந்த புதுமைகளையும் நேர்த்தியையும் பார்க்க ஆச்சரியமாக இருந்தது.

புத்தக வடிவமைப்பு என்பது கடந்த 30-40 ஆண்டுகளாக இருந்துவரும் விஷயம் என்று நானாக நினைத்துக்கொண்டிருந்தேன். ஆனால் இந்தப் புத்தகங்களை வடிவமைத்தவர்கள் பக்கா தொழில்முறை நிபுணர்களாக இருந்திருக்கிறார்கள். ஒரே காலகட்டத்தில் வந்த புத்தகங்களில் கூட அட்டை வடிவமைப்பில் தெரியும் range பிரமிப்பூட்டுகிறது. காம்பொசிஷன் பற்றிய அறிவும்தான்.

Continue reading

2012இல் இணையம்

http://www.collegehumor.com/article:1770659. பெனாத்தல் சுரேஷ் தமிழ்மணத்தைக் கிண்டல் பகடி செய்து போட்ட ஒரு ஸ்க்ரீன்ஷாட் நினைவுக்கு வருகிறது.