எபவுட்

எதற்காக வலைப்பதிவு செய்கிறாய் என்று ஒரு சராசரி வலைப்பதிவரிடம் கேட்டால் அவர் சொல்லும் பதில் “நான் ஏன் எழுதுகிறேன்?” என்ற தலைப்பில் பெரிய பெரிய எழுத்தாளர்கள் சொல்லும் பதிலை விட ஆழமாக இருக்கும். இந்த வலைப்பதிவைத் தொடங்க நான் சொல்லக் கூடிய சாக்குகளாவன:

1. சித்திரமும் கரப் பழக்கம் (சரி, கைப்பழக்கமாகவே இருந்துவிட்டுப் போகட்டும்), செந்தமிழும் நாப்பழக்கம். ஓரளவு ரீஜன்ட்டாகத் தமிழ் எழுதக் கூடிய நான் எழுத மறந்துவிடக் கூடாதே என்பதற்காக.

2. ஒரு சராசரி வலைப்பதிவரைப் போல எனக்குள்ளும் எஸ்கேப் ஆகத் துடித்துக்கொண்டிருக்கும் ஆயிரம் எண்ணங்களையும் கருத்துகளையும் வலைமக்கள் மேல் அவிழ்த்து விட.

3. நான், எனது, எனக்கு முதலான வார்த்தைகளைப் பயன்படுத்தி நிறைய எழுதிக் குவிக்க வேண்டும் என்ற படுதீவிர ஆசையைத் தீர்த்துக்கொள்ள.

4. இவ்வலைப்பதிவைப் படிக்கும் 50,000 சொச்சம் வாசகர்களுக்குப் பயன் தரும் வகையில் பல மேட்டர்களைச் சொல்ல.

5. இந்த மாதிரி நிறைய நம்பர்டு லிஸ்ட் போட.

ஃபயர்ஃபாக்ஸ் இல்லையா?