அரைகுறைத் தமிழர்கள்

கீழ்க்கண்டவை கடந்த சில நாட்களில் தட்ஸ்தமிழ்.காமில் வந்த தலைப்புச் செய்திகள். இவை அனைத்திற்கும் உள்ள ஒரு ஒற்றுமை கண்ணில் படுகிறதா?

 • வாசிம் அக்ரம் மனைவி திடீர் சுகவீனம் – சென்னையில் இறக்கப்பட்ட விமானம்
 • போதையில் இருந்த ஏர் இந்தியா விமானி!
 • நயன்-பிரபுதேவா.. இடையே புகுந்த ஆயிஷா!
 • முக்காடு போட்டு வந்த புவனேஸ்வரி
 • ஹிஸ்பானோவை வாங்கிய டாடா
 • பெங்களூரில் கண் கலங்கிய வைகோ
 • சரணாலய பகுதியில் ஆய்வை துவக்கிய கேரளா!
 • உயிருடன் உள்ளவருக்கு அஞ்சலி செலுத்திய ப.சி!
 • இல.கணேசனிடம் நலம் விசாரித்த ஸ்டாலின்

சில செய்திகள் வேறு காரணங்களுக்காகக் கடுப்பேற்றினாலும் நான் சொல்ல வருவது மொழி விஷயம். இது என்ன அபத்தமான நடை? இந்தத் தலைப்புச் செய்திகள் எல்லாம் முடிவடையாத வாக்கியங்கள். ஒன்றிரண்டு தடவை என்றால் வெரைட்டிக்காக விட்டுவிடலாம். ஆனால் இப்படி வாக்கியத்தை முடிக்காமல் நிறுத்துவது அச்சுப் பத்திரிகைகளில் கூட ஒரு புதிய பழக்கமாகியிருக்கிறது. படிக்கும்போது பயங்கர ரத்தக் கொதிப்பு ஏற்படுகிறது.

6 thoughts on “அரைகுறைத் தமிழர்கள்

 1. இதையெல்லாம் சொல்லப்போனால், உங்களுக்கு இணைய ஊடகமே தெரியவில்லை என்பார்கள். ஊடகத் துறையில் படிக்காத, அறிவுக்கு எதிரான ஒரு பெரிய கும்பல் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறது. யாரும் எதுவும் செய்ய முடியாது. ரத்தக் கொதிப்பு மாத்திரையைச் சாப்பிட்டுவிட்டு, பேசாமல் வேடிக்கை பார்ப்பதுதான் நம்மால் ஆகக்கூடிய ஒரே காரியம்.

 2. அறிவுக்கு எதிராக ஒரு பெரிய கும்பல் இருப்பதாகத்தான் எனக்கும் தோன்றுகிறது.ஏனென்றால் எல்லா பத்திரிகைகளும் இந்த மாதிரி அபத்தங்களில் ஈடுபட்டிருக்கின்றன.

 3. தாய்மொழி ந‌ம் முக‌ம் என‌ச் சொல்லக் கேட்டிருக்கிறேன் நான்; முக‌த்தைத் தொலைத்துவிட்டு, எதைப் பெறுவ‌த‌ற்காக‌ இப்ப‌டி (அரைகுறைத் த‌மிழில், த‌மிழ் கூறும் ந‌ல்லுல‌கிற்கு த‌லைப்புச் செய்திக‌ள் த‌ந்து) பாடுப‌டுகிறார்க‌ளாம், இந்த‌ ஊட‌க‌விய‌லார்க‌ள்?

 4. தினமலரின் ஒற்றைச் சொல் தலைப்புச் செய்திகளைப் பார்த்துப் பழகினால், மேற்கண்ட அரைகுறைத் தமிழுக்கு இரத்தம் கொதிக்காது :)

  ஆங்கில இதழ்கள் என்றால் இலக்கணச் சுத்தமாக, புரியாத அகரமுதலிச் சொற்களை எல்லாம் பயன்படுத்துபவர்களுக்குத் தமிழ் மட்டும் கிள்ளுக்கீரையாகி வருகிறது… ம்ம்..

 5. தினமலரும் கேலிக்கூத்துதான். மொழிநடை என்பதே தமிழ் செய்தித்தாள்களுக்கு அந்நியமான விஷயமாக இருக்கிறது.

 6. அங்கெல்லாம் அப்ளை பண்ணி, சாத்தானை வேலைக்கு கூப்பிடலன்ற கோபமோ!!

Comments are closed.