மேப் போட்றவரு

சில செய்திக் கட்டுரைகளைப் படித்தால் அவற்றின் சோகத்தை மீறி சிரிப்பு வருகிறது. கல்பாக்கம் கடற்கரையில் ஒரு ருஷ்யப் பொறியியலாளரும் அவரது மகளும் தாக்கப்பட்டது பற்றி ஐ.பி.என்.-லைவில் ஒரு IANS கட்டுரை வந்திருக்கிறது.

பொறியியலாளர் தாக்கப்பட்டதையும் அவரது மகள் மானபங்கப்படுத்தப்பட்டதையும் சொல்லிவிட்டு, காவல் துறை விசாரணை செய்துவருகிறது என்பதோடு முடித்துக்கொள்ளாமல் இப்படி நாலு பாரா:

According to officials of the power project, there are over 100 Russian engineers working at the Kudankulam nuclear power project.

The Nuclear Power Corporation of India Ltd (NPCIL) is working on the 2×1000 MW project with Russian technical assistance.

The first unit is expected to be commissioned early next year.

As per the deal between India and Russia, two more reactors of similar or even slightly higher capacity will come up at Kudankulam.

எங்கேயோ ஆரம்பித்து எங்கேயோ முடிக்கிறார்கள். அந்த நாலு பாராவைத் தனி செய்தியாகப் போடுவதற்கு மேட்டர் போதாதோ என்னவோ. போதாமைக்கு சைடில் தமிழ்நாடு வரைபடம் வேறு. புனே, சட்டீஸ்கர் கட்டுரைக்கெல்லாம் மேப்பைப் போடக் காணோம்.

2 thoughts on “மேப் போட்றவரு

  1. இந்தியாவில் வெளிவரும் நாளிதழ்களில் செய்திகள் இப்படித்தான் வருகின்றன. காரணம், ஒரு செய்தியாளர் இத்தனை எழுத்து அடித்தாக வேண்டும் என்று ஒரு கணக்கு இருக்கிறது.. தினமலரில் ஒரு செய்தியைப் படித்துப் பாருங்கள்.. எங்கெல்லாமோ போகும்..

  2. செருப்புக்கேற்ப காலை நீட்டிவிட்டுக்கொள்ளும் வேலைதான். அதுகூடப் பரவாயில்லை, தமிழக வரைபடம்தான் கடுப்பேற்றுகிறது. அவர்களது ஆடியன்ஸ் இந்தி பெல்ட்டில் இருப்பவர்கள்தான் என்று தெளிவாகக் காட்டுகிறார்கள். இந்தி பெல்ட் செய்திகளில் வரைபடங்களைக் காணோம்.

Comments are closed.