மொழிபெயர்ப்பு ஆஃப் த டே

எனது நோக்கியா செல்பேசியின் இயக்கமுறைமையைப் புதுப்பித்த பின் அதில் இலவசமாக சில மென்பொருட்கள் ஏற்றப்பட்டிருந்தன. அதில் ஒன்று IndiSmS என்ற நகைச்சுவை மென்பொருள். இந்திய மொழிகளில் குறுஞ்செய்தி அனுப்புவதற்காகவாம் இந்தத் தமாசு. வழங்கியோர் எடர்னோ இன்ஃபோடெக்

இடைமுகத்தைப் பாதி மொழிபெயர்ப்பும் பாதி ஒலிபெயர்ப்புமாக அரைகுறையாகத் தமிழாக்கியிருக்கிறார்கள். ‘அன்புள்ள’, ‘வணக்கம்’, ‘நன்றி’ போன்ற எளிய சொற்களை வரவழைக்கவே படாத பாடு பட வேண்டியிருக்கிறது. ‘அன்பு’ கடைசி வரை வரவில்லை. இந்த மென்பொருளை சும்மா திறந்து மூடினாலே Updating dictionary என்று பீட்டர் விடுகிறது. Made my day!

2 thoughts on “மொழிபெயர்ப்பு ஆஃப் த டே

  1. இந்த மாதிரி திராபைகளையெல்லாம் நீங்கள் வந்தவுடனே முயற்சி செய்வதுதான் ஆச்சரியம் தருகிறது. இதனால்தான், “எவ்வளவு அடிச்சாலும் தாங்குறாண்டா கொய்யாலே” என்று புதிது புதிதாக களத்தில் இறக்கிவிடுகிறார்கள்.

  2. தமிழ்ச் சூழல் வடநாட்டுக்காரர்களுக்குக் கூடத் தெரிந்திருக்கிறது ஓய்.

Comments are closed.