ஆனந்த விகடனின் பொது அறிவு

இன்று வந்த ஆனந்த விகடனிலிருந்து ஒரு சாம்பிள், 56ஆம் பக்கத்தில் இருக்கும் “என் அப்பா யார்?” என்ற கட்டுரையிலிருந்து (கலரிங் மட்டும் நான் கொடுத்தது).

‘மை மம்’ (எனது அம்மா) என்ற பெயர்தான் காலப் போக்கில் கண்டபடி உருமாறி மம்மா மியா என்றாகிவிட்டது.

பத்திரிகைக்காரர்களுக்கு வேண்டிய பொது அறிவு இவர்களுக்கு இருந்தால் ஆங்கிலப் பத்திரிகைகளில் mamma mia என்ற சொற்றொடரைக் கொண்டு சோனியா காந்தி கிண்டல் செய்யப்படுவதை கவனித்திருப்பார்கள்.

விக்கிபீடியாவில் mamma miaவுக்கு அருகில் “(literally, my mum)” என்று ஆங்கிலத்தில் பொருள் தரப்பட்டிருக்கிறது. ABBA பற்றியும் mamma mia பற்றியும் விக்கிபீடியாவிலிருந்துதான் அரைகுறையாகத் தகவல் எடுத்திருக்கிறார்கள். தமிழ்ப் பத்திரிகையாளர்களுக்குத் தேவையான ஆங்கில வாசிப்பு இந்த விகடன் துணை ஆசிரியருக்குக் கிடைக்கவில்லை, பாவம்.

கலர்ஃபுல் கலக்கல் காக்டெயில், ஜிலீர் லைட்டிங், ஜில் காஸ்ட்யூம் என்றெல்லாம் குழந்தைத்தனமான வார்த்தைகளை ஒப்பேற்றுவதற்கு ஆகும் நேரத்தை அடிப்படை பொது அறிவை வளர்த்துக்கொள்வதில் செலவழிக்கலாம் அல்லவா? இந்த மாதிரி நிறைய செய்கிறார்கள்.

4 thoughts on “ஆனந்த விகடனின் பொது அறிவு

 1. தமிழ் பத்திரிகை உலகில் உள்ள ஒரு பெரிய குறை இது தான். பொது அறிவை வளர்த்துக் கொள்ள இப்போது உள்ள தலைமுறைக்கு நேரமும், தேவையும் இல்லை. விக்கி பீடியா மற்றும் கூகிள் துணை இருந்தால் போதும், யார் எந்த கட்டுரையும் எழுதி விடலாம் என்ற இப்போதைய நிலைக்கு இதுவும் ஒரு சான்று.

  மாமா மியா என்பது ஒரு Interjection என்பது சிறுவயதில் ஆங்கில மொழியை முறையாக கற்றவர்களுக்கு தெரியும்.

  இந்த அரைகுறை (விக்கி, கூகிள்) அறிவோடு எழுதுபவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் பெருகிக் கொண்டு வருவது தான் வருத்தத்தை அளிக்கிறது.

  நான் பல முறை குமுதம் மற்றும் ஆனந்த விகடன் போன்ற பத்திரிக்கைகளில் Factual Errors இருப்பதை கண்டிருக்கிறேன் (குறிப்பாக விளையாட்டு சம்பந்தப்பட்ட கட்டுரைகளில்).அதனை மன்னிக்கவும் செய்யலாம், ஏனெனில் இவற்றால் பெரிய பாதகங்கள் ஏற்பட போவதில்லை. ஆனால் இது போன்ற தவறை வன்மையாக கண்டிக்கிறேன்.

  P.S:// (கலரிங் மட்டும் நான் கொடுத்தது).//நீங்கள் கலரிங், சரி லே அவுட் யார்? அவர்கள் ஆளா?

 2. இது விக்கிபீடியா-கூகிள்-ஐஎம்டிபி-… இதழியல் யுகம். முறையான வாசிப்பு இல்லாமல் நூலகங்களில் மேய்ந்து புத்தகங்கள் எழுதியவர்களின் அடுத்த தலைமுறை இவர்கள். இனி இப்படித்தான் இருக்கும் போலிருக்கிறது.

 3. ஒருமுறை தனேஷ் கனேரியா (என நினைக்கிறேன்) சச்சின் விக்கெட்டை எடுத்தபோது அவரிடம் பந்தைக் கொடுத்து ஆட்டோகிராஃப் போட்டுத் தரச் சொன்னார்.

  சச்சின் அதில் “Once in a blue moon” என்று எழுதிக் கையெழுத்திட்டுத் தந்தார்.

  அதை ஆ.வி இப்படி ரிப்போர்ட் செய்திருந்தது:

  சச்சின் கனேரியாவுக்கு “முன்பொரு காலத்தில் நீலப்பந்து இருந்தது” என்று கையெழுத்திட்டுத் தந்தார். ஏன் என்று நிருபர்கள் கேட்டதற்கு, “எப்போதும் சும்மா கையெழுத்திட்டுத் தருவதற்கு போரடிக்கிறது. அதனால்தான் இப்படி எந்தப் பொருளும் வராத இப்படியொரு வாக்கியத்தை எழுதிக் கையெழுத்திட்டேன்”.

 4. @சேதுபதி அருணாசலம்: அட்டகாசம். ஆ.வி. மாதிரி வராது. :-)

Comments are closed.