July 23, 2009

எழுத்துக் கலைஞர்

Posted by : சாத்தான்

ஆலன் மூர், நீல் கெய்மன் போன்ற காமிக்ஸ் ஓவியர்களுடன் இணைந்து பணியாற்றிய பெரிய எழுத்துக் கலைஞரான* Todd Klein தனது வலைப்பதிவில் எழுத்துக் கலையின் நுட்பங்களைப் படங்களுடன் எழுதுகிறார். பல நல்ல நாவல்களையும் காமிக்ஸ் புத்தகங்களையும் சுருக்கமாக, அழகாக அறிமுகப்படுத்துகிறார். அவரது வலைப்பதிவு இங்கே. டாடின் வலையகத்தில் கூடப் பார்க்கவும் படிக்கவும் நிறைய இருக்கிறது. அவர் நல்ல ஓவியர் கூட. *lettering artist – பலூன்களுக்குள் உரையாடல்களை எழுதுபவர், அட்டை, விளம்பரங்கள் போன்றவற்றுக்கு லோகோக்களை வடிவமைப்பவர்…


July 17, 2009

மொழிபெயர்ப்பு ஆஃப் த டே

Posted by : சாத்தான்

எனது நோக்கியா செல்பேசியின் இயக்கமுறைமையைப் புதுப்பித்த பின் அதில் இலவசமாக சில மென்பொருட்கள் ஏற்றப்பட்டிருந்தன. அதில் ஒன்று IndiSmS என்ற நகைச்சுவை மென்பொருள். இந்திய மொழிகளில் குறுஞ்செய்தி அனுப்புவதற்காகவாம் இந்தத் தமாசு. வழங்கியோர் எடர்னோ இன்ஃபோடெக் இடைமுகத்தைப் பாதி மொழிபெயர்ப்பும் பாதி ஒலிபெயர்ப்புமாக அரைகுறையாகத் தமிழாக்கியிருக்கிறார்கள். ‘அன்புள்ள’, ‘வணக்கம்’, ‘நன்றி’ போன்ற எளிய சொற்களை வரவழைக்கவே படாத பாடு பட வேண்டியிருக்கிறது. ‘அன்பு’ கடைசி வரை வரவில்லை. இந்த மென்பொருளை சும்மா திறந்து மூடினாலே Updating dictionary [...]


July 16, 2009

ஆனந்த விகடனின் பொது அறிவு

Posted by : சாத்தான்

இன்று வந்த ஆனந்த விகடனிலிருந்து ஒரு சாம்பிள், 56ஆம் பக்கத்தில் இருக்கும் “என் அப்பா யார்?” என்ற கட்டுரையிலிருந்து (கலரிங் மட்டும் நான் கொடுத்தது). ‘மை மம்’ (எனது அம்மா) என்ற பெயர்தான் காலப் போக்கில் கண்டபடி உருமாறி மம்மா மியா என்றாகிவிட்டது. பத்திரிகைக்காரர்களுக்கு வேண்டிய பொது அறிவு இவர்களுக்கு இருந்தால் ஆங்கிலப் பத்திரிகைகளில் mamma mia என்ற சொற்றொடரைக் கொண்டு சோனியா காந்தி கிண்டல் செய்யப்படுவதை கவனித்திருப்பார்கள். விக்கிபீடியாவில் mamma miaவுக்கு அருகில் “(literally, my [...]


குட்டிப் பதிவு

சுட்டி டி.வி.யில் லக்கி லூக்
சிறுவர்களாவோம்! இன்றிலிருந்து திங்கள் முதல் வெள்ளி வரை மதியம் 1.30 மணிக்கு. மகனுக்கு லக்கி லூக் indoctrination தொடங்க நல்ல சந்தர்ப்பம். (7)