ருஷ்ய சிறுவர் இலக்கியம்

‘பயங்கரவாதி டாக்டர் செவன்’ சில ருஷ்ய சிறுவர் நூல்களைப் பற்றி அழகான ஓவியங்களுடன் எழுதியிருக்கிறார். தவற விடாதீர்கள்!

தமிழில் ரஃபிக் ராஜா, கிங் விஸ்வா, பயங்கரவாதி டாக்டர் செவன், சிவ், புலா சுலாகி, கனவுகளின் காதலன் முதலான சில வலைப்பதிவர்கள் நிறைய தகவல்களோடும் படங்களோடும் தொடர்ந்து எழுதிவருகிறார்கள். இவர்களது அறிவும் ஈடுபாடும் பிரமிப்பூட்டுகின்றன.

இடுகைகளின் நீளத்தைப் பொருட்படுத்தாமல் முழுமையாகப் படித்து கமென்ட் போடும் வாசகர்களிடம் தமிழில் காமிக்ஸ் கிட்டத்தட்ட இல்லாமல் போய்விட்ட சோகத்தைப் பார்க்க முடிகிறது.

இந்த வலைப்பதிவர்கள் பதிப்புத் துறையில் கணிசமான நிதியுடன் இறங்கினால், அதுவும் பெரிய பதிப்பகங்கள் எவற்றுக்கும் சோரம் போகாமல் தாங்களே பதிப்பித்தால் தமிழ் காமிக்ஸ் புத்துயிர் பெறும்.

தமிழ் வலைப்பதிவுலகில் எந்த அரசியலும் இல்லாமல் ரசனைப் பகிர்வும் அறிவுப் பகிர்வும் சிறப்பாக நடக்கும் community இவர்கள்தான் என்று நினைக்கிறேன். இவர்களில் பலரது வலைப்பதிவுகளை இங்கே பார்க்கலாம். இந்த வலைப்பதிவர்களுக்கு ஒரு சல்யூட்.

4 thoughts on “ருஷ்ய சிறுவர் இலக்கியம்

  1. அடடா, சாத்தான் நண்பரே….

    உங்கள் அழகிய படங்களுடன் கூடியது வலைபக்கத்திலேயே நான் அதிகம் உழாத்தி கொண்டிருந்ததால், நீங்கள் இங்கு இந்த பதிவை அரங்கேற்றியதை கவனிக்கவே இல்லை.

    காமிக்ஸ் பதிவர்களிடையே காமிக்ஸ் மீதான காதலை சொல்ல தான் வேண்டுமா… நாமே கூட்டு முயற்சியில் காமிக்ஸ் பதியும் காலம் கைகூடும் என்று நானும் பிரார்த்திக்கிறேன்.

    பதிவின் இடையே என்னுடைய வலைப்பூகூட்டியை அறிமுகபடுத்தியதற்கு நன்றிகள் பல.

Comments are closed.