May 28, 2009

செல்பேசியில் தமிழ் வலைப்பக்கங்கள்

Posted by : சாத்தான்

ஒரு வழியாக செல்பேசியில் தமிழ் வலைப்பக்கங்களைப் பார்க்க முடிகிறது. Skyfire என்ற புதிய செல்பேசி உலாவி பற்றிய இந்தத் தகவல் ட்விட்டரில் விக்கியும் பிரபு ஃபெராரியும் போட்ட ட்வீட்களில் கிடைத்தது. இந்த உலாவி விண்டோஸ் மொபைல் 5, 6, நோக்கியா என் சீரீஸ், இ சீரிஸ் ஆகியவற்றுக்குக் கிடைக்கிறது. இணையத்தில் ஆளுக்கொரு தமிழ் எழுத்துருவைப் பயன்படுத்திக்கொண்டிருந்த காலத்தில் சிலர் தமிழ் வலைப்பக்கங்கள் எல்லோருக்கும் தெரிய வேண்டும் என்பதற்காக அவற்றை ஜிஃப்/ஜேபெக் படங்களாகப் போட்டதுதான் நினைவுக்கு வருகிறது. ஸ்கைஃபயர் [...]


May 13, 2009

கசாப்பு

Posted by : சாத்தான்

1. சமீபத்தில் சன் நியூஸில் மும்பை தாக்குதல் தீவிரவாதி அஜ்மல் அமீர் கசப்/கசாபின் (Kasab) வயது பற்றித் திரையின் அடியில் ஒரு செய்திப் பட்டை ஓடிக்கொண்டிருந்தது. அதில் ‘கசாப்புக்கு’ என்று போட்டிருந்தார்கள். கசாப்புக்குத் தயாராகும் ஆடு என்பது போல. பிற மொழிச் சொற்களை ஒலிபெயர்க்கும்போது தமிழில் pa, ba, sa, cha, ta, da, ka, ga, tha, dha போன்ற ஒலிகளைத் துல்லியமாக எழுத முடியாதது ஒரு குறைதான். ஆனால் இருப்பதை வைத்துக்கொண்டு அட்ஜஸ்ட் செய்துகொள்ள [...]


May 10, 2009

ருஷ்ய சிறுவர் இலக்கியம்

Posted by : சாத்தான்

‘பயங்கரவாதி டாக்டர் செவன்’ சில ருஷ்ய சிறுவர் நூல்களைப் பற்றி அழகான ஓவியங்களுடன் எழுதியிருக்கிறார். தவற விடாதீர்கள்! தமிழில் ரஃபிக் ராஜா, கிங் விஸ்வா, பயங்கரவாதி டாக்டர் செவன், சிவ், புலா சுலாகி, கனவுகளின் காதலன் முதலான சில வலைப்பதிவர்கள் நிறைய தகவல்களோடும் படங்களோடும் தொடர்ந்து எழுதிவருகிறார்கள். இவர்களது அறிவும் ஈடுபாடும் பிரமிப்பூட்டுகின்றன. இடுகைகளின் நீளத்தைப் பொருட்படுத்தாமல் முழுமையாகப் படித்து கமென்ட் போடும் வாசகர்களிடம் தமிழில் காமிக்ஸ் கிட்டத்தட்ட இல்லாமல் போய்விட்ட சோகத்தைப் பார்க்க முடிகிறது. இந்த [...]


May 6, 2009

முதல்ல காசை எடு

Posted by : சாத்தான்

என்னுடைய இன்னொரு வலைப்பதிவில் போடும் வின்டேஜ் படங்களை ஃப்ளிக்கரில் இருக்கும் பல்வேறு குழுக்களில் ஏற்றிக்கொண்டிருந்தேன். தமிழ்ப் பத்திரிகைகள், புத்தகங்களில் வந்த சித்திரங்கள் அந்தக் குழுக்களில் இருந்த வெளிநாட்டார் பலரையும் கவர்கின்றன. நாட் எனி மோர். கூகிளின் இலவச மதிய உணவு மாடலைப் பார்த்து யாஹூ எப்போது கற்றுக்கொள்ளப்போகிறது?


May 5, 2009

மலர்க் காட்சி

Posted by : சாத்தான்

ராயப்பேட்டை (சென்னை) YMCA மைதானத்தில் மே 10 அன்று முடியும் மலர்க் கண்காட்சியில் நான்கு பூச்செடிகள் வாங்கினேன். தினமும் காலையில் செடிகளுக்குத் தண்ணீர் ஊற்றுவதும் பொதுவாகப் ‘பராமரிப்பதும்’ கடைந்தெடுத்த சென்னைவாசியான எனக்கு வித்தியாசமான அனுபவமாக இருக்கிறது. இன்று காலையில் எடுத்த சில புகைப்படங்கள்… இதில் காமெடி என்னவென்றால் முதல் இரண்டு படங்களில் இருக்கும் பூவின் பெயர் மட்டும்தான் எனக்குத் தெரியும் (Dianthus). ரோஜா மாதிரி இருப்பது ரோஜா வகைதான். என்ன பூக்கள் என்று எப்படித்தான் கண்டுபிடிக்கப்போகிறேனோ.


குட்டிப் பதிவு

சுட்டி டி.வி.யில் லக்கி லூக்
சிறுவர்களாவோம்! இன்றிலிருந்து திங்கள் முதல் வெள்ளி வரை மதியம் 1.30 மணிக்கு. மகனுக்கு லக்கி லூக் indoctrination தொடங்க நல்ல சந்தர்ப்பம். (7)