புத்தக இயந்திரம்!

நாம் கேட்கும் புத்தகத்தை ஐந்து நிமிடங்களில் அச்சடித்துத் தரும் புத்தக இயந்திரம் ஒன்று லண்டனில் வந்திருக்கிறது! புண்ணியம் கட்டிக்கொண்டிருப்பது புத்தகச் சேவை நிறுவனமான பிளாக்வெல் நிறுவனம். நிமிடத்துக்கு 100 பக்கங்கள் அச்சடிக்கிறது.

பார்ப்பதற்கு ஜெராக்ஸ் இயந்திரம் போல் இருப்பதாக சொல்லப்படும் இந்த ‘எஸ்பிரசோ புத்தக இயந்திர’த்திற்கு உள்ளேயே அச்சிடுதல், பைண்டிங் எல்லாம் நடந்து முடிந்து புத்தகம் சூடாக வருகிறதாம். Hot off the (Es)press(0) என்று தமாசாக சொல்லிக்கொள்ளலாம்.

சுமார் 5 லட்சம் புத்தகங்கள் இப்படிக் கிடைக்கிறதாம். இன்னும் சில மாதங்களுக்குள் 10 லட்சம் புத்தகங்களைக் கிடைக்கச்செய்யத் திட்டமிட்டிருக்கிறார்கள். அச்சு இயந்திரம் கண்டுபிடிக்கப்பட்ட பின் பதிப்புத் துறையில் அடுத்த பெரிய புரட்சி இதுதான் என்கிறார்கள். சிறு புத்தகக் கடைகள் லட்சக்கணக்கான புத்தகங்களை வைத்துக்கொண்டு விற்கவும் வழி.

இதில் விசேடம் என்னவென்றால் அச்சில் இல்லாத, மிகப் பழைய புத்தகங்களைக் கூட அச்சிட்டுக்கொள்ளலாம். விலை பற்றி நிச்சயமாகத் தெரியவில்லை. இந்த ‘எஸ்பிரசோ புத்தக இயந்திர’த்தின் பயன்பாட்டைப் பார்த்து விலையை நிர்ணயிப்பார்கள் என்றும் கடைசியில் வழக்கமான புத்தக விலைக்கு வந்துவிடும் என்றும் கார்டியன் செய்திக் கட்டுரை சொல்கிறது. விலையிலும் புரட்சி வந்தால் நன்றாக இருக்கும்.

இங்கே நாங்களெல்லாம் இருக்கிறோமே, கண்ணில் படவில்லையா?

Comments

One Response to “புத்தக இயந்திரம்!”

  1. நூஃபா இஸ்மாயீல் (செவ‌த்த‌ப்பா) on January 19th, 2010 7:16 pm

    வ‌ர‌வேற்க‌ப்ப‌ட‌ வேண்டிய‌ (கால‌த்திற்கேற்ற‌ மாற்று) விஷ‌ய‌ம் அல்ல‌வா? எங்க‌ளுக்கு த‌க‌வ‌ல் த‌ந்த‌மைக்கு மிக்க‌ ந‌ன்றி!

Got something to say?