கரடிச் சந்து

பல காமிக்ஸ் தொகுப்புகளையும் புத்தகங்களையும் எழுதிய ஸ்டீவ் ஹாலண்டின் வலைப்பதிவில் காமிக்ஸ் வரலாறு நிறைய தெரிந்துகொள்ளலாம். இணைப்பு: Bear Alley

3 thoughts on “கரடிச் சந்து

 1. தோழர்,

  உங்களுக்கு தெரியுமா இல்லையா என்பது தெரியவில்லை.

  எழுபதுகளிலும், எண்பதுகளிலும் (என் இப்போதும் கூட) சக்கை போடு போட்ட முத்து காமிக்ஸ், லயன் காமிக்ஸ் போன்றவை இங்கிலாந்தில் இருக்கும் பிளீட்வே என்ற பதிப்பகத்தாரிடம் (இப்போது IPC மீடியா) இருந்து தான் கதை உரிமைகளை வாங்கி தமிழில் மொழி பெயர்த்து வெளியிட்டனர்.

  அந்த பதிப்பகம் இருந்த தெரு பெயர் தான் இது. ஸ்டீவ் பின்னர் இந்த பதிப்பகத்தின் பழைய புத்தகங்களை எல்லாம் தொகுத்து புது பிரதிகள் வெளியிட நினைத்த நேரம் தான் இந்த பிளாக்’ஐ ஆரம்பித்தார். அதனால் தான் இந்த பெயர்.

  ஸ்டீவ் ஹாலந்து தொகுத்த புத்தகங்கள் இந்தியாவில் விற்பனைக்கு கிடைக்கின்றன. சென்னையில் லேண்ட்மார்க் போன்ற கடைகளில் கிடைக்கும்.

  அந்த புத்தகம் பற்றிய இடுகைக்கான சுட்டி இதோ:http://tamilcomicsulagam.blogspot.com/2009/02/news-14-tin-tin-commando-comics-wild.html

  கிங் விஸ்வா.

 2. ஃப்ளீட்வே பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன். இரும்புக்கை மாயாவி கூட ஃப்ளீட்வே பதிப்பகத்தின் தயாரிப்புதான், இல்லையா? நீங்கள் இதையெல்லாம் பயங்கரமாகத் தெரிந்துவைத்திருக்கிறீர்கள்!

 3. தோழர்,

  நீங்கள் சொல்வது சரிதான், இரும்புக்கை மாயாவி கூட ஃப்ளீட்வே பதிப்பகத்தின் தயாரிப்புதான்.

  நான் ஏற்கனவே கூறியபடி, காமிக்ஸ் எனக்கு பிடித்த விஷயங்களில் ஒன்று. எனக்கு பிடித்த விஷயங்களை நான் தீவிரமாக தேடுவேன், அந்த தேடல் பூர்த்தியாகும் வரை. தேடல் தொடர்கிறது.

  நன்றி.

  கிங் விஸ்வா.

Comments are closed.