April 24, 2009

புத்தக இயந்திரம்!

Posted by : சாத்தான்

நாம் கேட்கும் புத்தகத்தை ஐந்து நிமிடங்களில் அச்சடித்துத் தரும் புத்தக இயந்திரம் ஒன்று லண்டனில் வந்திருக்கிறது! புண்ணியம் கட்டிக்கொண்டிருப்பது புத்தகச் சேவை நிறுவனமான பிளாக்வெல் நிறுவனம். நிமிடத்துக்கு 100 பக்கங்கள் அச்சடிக்கிறது. பார்ப்பதற்கு ஜெராக்ஸ் இயந்திரம் போல் இருப்பதாக சொல்லப்படும் இந்த ‘எஸ்பிரசோ புத்தக இயந்திர’த்திற்கு உள்ளேயே அச்சிடுதல், பைண்டிங் எல்லாம் நடந்து முடிந்து புத்தகம் சூடாக வருகிறதாம். Hot off the (Es)press(0) என்று தமாசாக சொல்லிக்கொள்ளலாம். சுமார் 5 லட்சம் புத்தகங்கள் இப்படிக் கிடைக்கிறதாம். [...]


April 22, 2009

சுட்டி டி.வி.யானது…

Posted by : சாத்தான்

1. கடும் மழலையில் பேசும் என் 4 வயது மகன் சிரமத்தை மீறிச் சொல்லும் சொற்கள் சில: விளையாட்டுப் பூங்கா, சுரங்கப் பாதை, மலை வீடு, உயரமான மலை, குழந்தைகள். வழக்கமான இனிமையிலிருந்து மாறுபட்ட இனிமையாக இருக்கிறது இந்தப் பேச்சு. நான்கு வயதுக் குழந்தையைக் கூட இப்படிப் பேசவைக்கும் சுட்டி டி.வி.க்குப் பெற்றோர்கள் கடமைப்பட்டிருக்கிறார்கள்! சுட்டி டி.வி.யின் சொந்த சரக்கு தேறாது என்றாலும் டோராவின் பயணங்கள் (குறிப்பாக), ஸ்பைடர்மேன், குளோரியாவின் வீடு, ஹீமேன், கிரேஸி ஜெஸ்ஸி, செட்ரிக் [...]


April 17, 2009

மொழிபெயர்ப்பின் மொழிபெயர்ப்பு – 1

Posted by : சாத்தான்

இது 2002இல் நான் மொழிபெயர்த்த சிறுகதை. ஜெர்மன் மொழியிலிருந்து ஆங்கிலத்திற்கு செய்யப்பட்ட மொழிபெயர்ப்பின் தமிழாக்கம். அகழ்வாராய்ச்சியில் கிடைத்தது. ஹைன்ரிஷ் போல் (Heinrich Böll) எழுதிய At the Bridge என்ற கதையின் பெயர்ப்பு. கொஞ்சம் டச்சப் வேலை செய்து பெருந்தவறுகளைத் திருத்தியிருக்கிறேன். மற்றபடி இப்போதும் என் மொழிபெயர்ப்பு அப்படியேதான் இருக்கிறது. மொழிபெயர்ப்பு பற்றி சவுண்டு விடுபவன் தன் மொழிபெயர்ப்பைக் காட்டாமல் இருக்கிறான் என்ற அவப்பெயரைத் தவிர்க்கவும் இதனை இங்கு ரிலீஸ் செய்கிறேன். ஹைன்ரிஷ் போல் எனது அபிமான [...]


April 13, 2009

சுட்டி டி.வி.யில் லக்கி லூக்

Posted by : சாத்தான்

சிறுவர்களாவோம்! இன்றிலிருந்து திங்கள் முதல் வெள்ளி வரை மதியம் 1.30 மணிக்கு. மகனுக்கு லக்கி லூக் indoctrination தொடங்க நல்ல சந்தர்ப்பம்.


April 7, 2009

திருட்டு – 2

Posted by : சாத்தான்

எனக்கு நிஜமாகவே புரியாத ஒரு விஷயம் – எங்கோ போகும் வழியில் திடீரென எதிர்ப்படும் உன்னை எதிர்பாராமல் திகைக்கிறேன் ஆறாம் வாய்ப்பாடு மறந்தவனாய். இந்த நாலு வரியை சொந்தமாக எழுதத் துப்பு இருக்காதா? இதைக் கூடவா காப்பியடிப்பார்கள்? இதை ஒருவர் தன் வலைப்பதிவில் தன் பெயரில் போட்டுக்கொண்டுள்ளார். தொடர்பான முந்தைய பதிவு


குட்டிப் பதிவு

சுட்டி டி.வி.யில் லக்கி லூக்
சிறுவர்களாவோம்! இன்றிலிருந்து திங்கள் முதல் வெள்ளி வரை மதியம் 1.30 மணிக்கு. மகனுக்கு லக்கி லூக் indoctrination தொடங்க நல்ல சந்தர்ப்பம். (7)