நகர்வலம்

The Sentinel Building by Pete Scully

நகர்ப்புற வாழ்க்கையைப் பதிவுசெய்யும் வலைப்பதிவுகள், ஃப்ளிக்கர் புகைப்படக் குழுக்கள் உண்டு. அவற்றையெல்லாம் தூக்கி சாப்பிடும் ஒரு ஐடியாவை சில கலைஞர்கள் அமர்க்களமாகச் செயல்படுத்திவருகிறார்கள்.

Urban Sketchers என்ற இவர்களது வலைப்பதிவில் உலகெங்குமிருந்து ஏராளமான ஓவியர்கள் தமது நகரங்களைச் சித்தரிக்கிறார்கள். முதலில் 2007இல் ஃப்ளிக்கர் குழுவாக வடிவம் பெற்ற இந்த ஐடியா, 2008 நவம்பரில் வலையகமாகியிருக்கிறது.

பல விதமான ஓவிய பாணிகளையும் ஊடகங்களையும் இங்கே பார்க்க முடிகிறது. எளிமையானவை முதல் மிக நுணுக்கமானவை வரை நூற்றுக்கணக்கான படைப்புகளை லீவுபோட்டு நாட்கணக்கில் பார்த்துக்கொண்டிருக்கலாம். பல நாடுகளின் பண்பாடுகள் இங்கே காணக்கிடைப்பதால் ஓவிய பாணிகள் மட்டுமின்றி காட்சிகளும் பல விதமாக இருக்கின்றன.

பெருமூச்சு வருகிறது. இந்தியாவிலிருந்து மூன்று பேர் வரைகிறார்கள். நம்மூரில் (ஃப்ளிக்கர்) புகைப்படக் கலைஞர்களின் எண்ணிக்கையில் ஓவியர்கள் ஒரு சதவீதம் இருந்தால் கூட இங்கே இந்த அளவிற்குக் கலைப் பஞ்சம் இருக்காது.

அர்பன் ஸ்கெட்ச்சர்கள் வலைப்பதிவை வேர்ட்பிரஸில் வைத்துக்கொள்ளாமல் பிளாகரில் வைத்திருப்பதுதான் கவலையளிக்கிறது. யாராவது புத்தி சொன்னால் நல்லது.

2 thoughts on “நகர்வலம்

  1. ///வேர்ட்பிரஸில் வைத்துக்கொள்ளாமல் பிளாகரில் வைத்திருப்பதுதான் கவலையளிக்கிறது. ///

    இருங்க… இருங்க! பத்தவைக்க வேண்டிய இடத்தில் போட்டுக் கொடுக்கிறேன் :)

  2. நான் ஒண்ணும் கூகிள் எம்பிளாயி கிடையாதுங்ணா.

Comments are closed.