மொழிபெயர்ப்பு ஆஃப் த டே

Phenomenal Woman = வியப்புக்குரிய பெண் (இங்கிருந்து. “ride of my breasts” என்பதை “மார்பகங்களின் ஓட்டம்” என்றும் “wondered”ஐ “அதிசயித்தார்கள்” என்றும் மொழிபெயர்த்திருக்கிறார் மொழிபெயர்ப்பாளர். மார்பகங்கள் ஓடுமா?) மூலம்: Phenomenal Woman. கவிதையை மொழிபெயர்ப்பதில் பலருக்கு உள்ள நம்பிக்கை வியப்பூட்டுகிறது, வேதனையளிக்கிறது.

பழைய பாய்ச்சல்

டெக்ஸ் வில்லர், XIII மாதிரியான தரத்தில் – சித்திரங்களிலாவது – தமிழில் காமிக்ஸ் கொண்டுவரும் சாத்தியம் இருந்து அதைத் தமிழ் பதிப்புத் துறை உணராமலே இருந்துவிட்டதோ என்று தோன்றியது, இந்தப் படத்தைப் பார்த்தபோது (கிட்டத்தட்ட இந்தப் படத்துடன் ஒப்பிடலாம்).

சித்திரச் சந்தை

பெங்களூரில் ஆண்டுதோறும் புத்தகக் காட்சி போல ‘சித்திரச் சந்தை’ ஒன்று நடப்பதாக இந்த வார விகடனில் ஒரு கட்டுரை (பக். 96) போட்டிருக்கிறார்கள். தமிழக நகரங்களிலும் அப்படி நடந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்!