முடிந்து தொடங்கும் கவிதை

பயணம் முடிந்த பின்னும்
தொடர்ந்து நடக்கும் கால்களை
பின்தொடர்கின்றன கண்கள்

முடிந்துவிட்டது பயணம்
தொடர்ந்து நடக்கும் கால்கள்
பின்தொடரும் கண்கள்

பின்தொடர்கின்றன கண்கள்
தொடர்ந்து நடக்கும் கால்களை
பயணம் முடிந்த பின்னும்

பயணம் முடிந்துவிட்டது
கால்கள் நடக்கும் தொடர்ந்து
கண்கள் பின்தொடரும்

4 thoughts on “முடிந்து தொடங்கும் கவிதை

  1. உங்களது கவிதைகள் கவிதை சார்ந்து இயங்காமல், இயக்கம் சார்ந்து இயங்குவதால் வாசிப்பில் உள்மனவோட்டம் தீவிரமடைகிறது. இந்தக் கவிதையைப் படிக்கும்போது உள்விசாரணைகளின் எண்ணக் கொதிப்பில் சரசரவென ஊறும் பாம்பென மனம் நெளிகிறது என்றாலும் துயரத்தின் தீவிரம் இந்தக் கவிதையோடு தீராது. காற்றின் வீசித் தீராத குளிரில் நடுங்கும் உயிரென துளிர்க்கிறது கவித்துவம் இந்தக் கவிதையில்.

  2. துளிர்க்கிறது என்று சொல்லிவிட்டீர்களல்லவா, அப்படியெனில் இந்தக் கவிதை நிச்சயம் ஒரு மாசுடர் பீசு தான்.

  3. என்றைக்காவது உங்களுக்கு கவிதை எழுதும் உந்துதல் வந்து எழுதினீர்களென்றால், நெகிழாமல் சிரிக்கப்போகிறோம். அந்த அவல நிலையைப் பற்றி கூட கவிதை எழுத முடியாத அவல நிலை. த்சு த்சு.

  4. அது பத்தி எனக்குக் கவலையில்ல. சீரியசான மேட்டருங்களா தோணும்போது கூட எப்படியாவது நகைச்சுவை கோட்டிங் குடுத்து அமுக்கிடுறது. நகைச்சுவையாக்க முடியலன்னா அபாண்டண்டு.

Comments are closed.