புதுக்கவிதையின் வீச்சும் வலிமையும்

இந்தப் பக்கம் வந்து ரொம்ப நாளாகிவிட்டாலும் சில சமயங்களில் என் வலைப்பதிவுகள பற்றி கூகிளில் ஈகோ ட்ரிப் அடித்து மனசைத் தேற்றிக்கொள்வதுண்டு. இன்று மதியம் அப்படியான ஒரு ட்ரிப் அடித்தபோது என் பழைய பதிவு ஒன்றிலிருந்த சில ‘காதல் கவிதை’ களை இன்னொரு வலைப்பதிவில் பார்க்கும் பாக்கியம் கிடைத்தது.

ஒரு வாலிபர் நான் தமாசாக எழுதியதை சமீபத்தில் எடுத்துத் தன் வலைப்பதிவில் போட்டுக்கொண்டுள்ளார். எழுத்துத் திருட்டில் ஈடுபட விரும்புபவர்கள் அதன் நுட்பங்களை முன்பே அதில் ஊறித் திளைத்துப் பல புத்தகங்களை எழுதியிருக்கும் ஜாம்பவான்களிடம் கற்றுக்கொள்ள வேண்டும். படிக்கிற மேட்டரின் தன்மையைப் புரிந்துகொள்வதும் முக்கியம்.

நகலெடுத்துப் போட்டவர் இந்த இரண்டையும் செய்யாமல் ஈயடிச்சான் காப்பி செய்திருக்கிறார். அதில் ஒரு கவிதையில் அடிக்குறிப்புகளுக்காக சூப்பர்ஸ்க்ரிப்ட்டில் எண்களைக் கொடுத்திருப்பேன். நான்கு குட்டிக் கவிதைகளை சுட்டிருக்கும் இந்தக் கவிஞர் அந்த எண்களையும் சேர்த்து நகலெடுத்துப் போட்டிருக்கிறார்!

இந்த நபர் தபூ சங்கர் பிரியர் போல் தெரிகிறது. காதல் கவிதைகளைக் கிண்டல் செய்து எழுதியதை நிஜ காதல் கவிதைகள் என்று நினைத்துக்கொண்டு அவற்றை சுட்டிருப்பது ஆனந்த விகடன் பாஷையில் சொன்னால் காமெடி கலாட்டா. இந்த மாதிரி கவிதைகளை எழுதுபவர்களுக்குக் கவிதை பற்றிய புரிதலும் கற்பனைத் திறனும் எந்த லட்சணத்தில் இருக்கும் என்று நிரூபித்திருக்கிறார்.

இணையத்தில் இருப்பதைத் திருடி இணையத்திலேயே போட்டால் மாட்டிக்கொள்வோம் என்பது ஒரு சாப்ட்வேர் இன்ஜினியருக்குத் தெரிய வேண்டாமா?

சைடில் ஒரு சிந்தனை: plagiarism என்பது எழுத்துக் கொள்ளை. இதற்கும் plague எனப்படும் கொள்ளை நோய்க்கும் ஏதாவது லிங்க் இருக்குமா?

2 thoughts on “புதுக்கவிதையின் வீச்சும் வலிமையும்

  1. உங்கள் கவிதை பல்வேறு தளங்களில் வெளியாவது கண்டு மகிழ்ச்சி கலந்த வாழ்த்துகள்!

  2. பார்த்துக்கொண்டே இருங்கள். ஸ்நாப்ஜட்ஜில் இருப்பதையெல்லாம் தொகுத்து யாராவது புத்தகமாகப் போட்டுக்கொள்ளப்போகிறார்கள். அப்போது புரியும் உங்களுக்கு என் இதய உள்ளத்தின் வேதனை எண்ணங்கள்.

Comments are closed.