யாஹூ தரும் மொழி அனுபவம்

ஒரு வலையகத்திற்குப் பெயர் தேடுவது ஒரு புதிய மொழி அனுபவமாக இருக்க முடியும். இது இன்று யாஹூ டொமெய்ன் பதிவுச் சேவைப் பக்கத்தில் தெரிந்துகொண்ட விஷயம்.

Net4domains.com-இல் பெயர் தேடினால் பெயர் இருக்கிறதா இல்லையா என்ற தகவல் மட்டும்தான் கிடைக்கும். யாஹூவில் பெயர் இல்லை என்றால் விட மாட்டார்கள். தேடிய பெயரில் இருக்கும் சொற்களின் அகராதி ஒன்றை வைத்திருக்கிறார்கள். அதிலிருந்து இணைச் சொற்களை எடுத்துப் புதிய எழுத்துகளை உருவாக்கிக் காட்டுகிறார்கள். இதன் புண்ணியத்தில் பல வேடிக்கையான காம்பினேஷன்கள் உற்பத்தியாகின்றன. எ.கா. (நீலக் கட்டம் நான் போட்டது):

yahoodomain.png

Techdirt என்ற ஒற்றை வார்த்தையிலிருந்து tech-ஐப் பிரித்துப் புரிந்துகொண்டு, technology, hightech என்றெல்லாம் அதற்கு மாற்று, இணைச் சொற்களைத் தேடி எடுக்க யாஹுவின் நிரலுக்குத் தெரிகிறது. ஆனால் இந்த அகராதிப் பயன்பாடு, dirt என்ற சொல்லுக்கு வரும்போது சூப்பர் காமெடி ஆகிவிடுகிறது (HighTechRareEarth என்ற ‘சொல்லாக்க’த்தில் தானியங்கு மொழிபெயர்ப்பு வாடை அடிக்கவில்லை?).

யாஹூ திணைப் பெயர் பதிவுச் சேவையின் அகராதியில் கெடட வார்த்தைகளுக்கும் இடமுண்டு. Fuckwit என்று தேடினால் fuck -இன் பல பொருட்களை எடுத்தாள்கிறது. அதன் பட்டியலைப் படிக்கும்போது வாய்விட்டு சிரித்துவிட்டேன். மென்பொருளுக்கு சொற்களின் தொனியைப் புரியவைக்கும் மாபெரும் tagging பணியில் யாரும் இறங்குவதில்லை என்பதற்கு இந்தப் பட்டியல் அட்டகாசமான உதாரணம் (FuckwitOnline-ஆம், என்னவோ Microsoft Office Online மாதிரி!). முழுப் பட்டியலையும் இங்கே படித்து ரசிக்கலாம். படம் கீழ்க்கண்டாற்போல –

yahoodomain2.png

4 thoughts on “யாஹூ தரும் மொழி அனுபவம்

  1. மொழிபெயர்ப்பு குறித்தே ஒரு வலைப்பதிவு என்பது வித்தியாசமாக இருக்கிறது. தொடர்ந்து எழுதுங்கள். நீங்கள் தேர்ந்தெடுக்கும் வார்ப்புருக்களும் நல்லா இருக்கு. நான் மாத்தி மாதிப் போட்டு அலுத்துப் போய் கடைசியல் cutline போதும் என்று அதிலேயே உக்கார்ந்துட்டேன். தவிர, அந்த வார்ப்புருவில் நிறைய தமிழாக்கங்கள் செய்திருப்பதாலும் மாற மனசில்லை.

  2. வருகைக்கு நன்றி! ஒரு அப்டேட்: மொழிபெயர்ப்பு பற்றி நான் ஓவராகப் பொரும ஆரம்பித்துவிட்டதால் வலைப்பதிவதை நிறுத்தியிருக்கிறேன். யாருக்காவது உபயோகமாக எழுதினால் நல்லதுதான், வெறுமனே சாபங்களை வாரி வழங்கிக்கொண்டிருந்தால் என்ன பயன்? கொஞ்சம் ரீபூட் செய்துகொண்டு திரும்பி வரலாம் என்று நினைக்கிறேன்.

    வேர்ட்பிரஸ் வார்ப்புருக்கள் இப்போது முன்பை விட வகைவகையாக வந்துகொண்டிருக்கின்றன. அதனால் முன்பு இருந்த அளவுக்கு வார்ப்புருப் பஞ்சம் இருப்பது போல் தெரியவில்லை. அட்மின் தீம் ப்ரிவ்யூ (http://bitbybit.wordpress.com/code/wordpress/plugins/admin-theme-preview/) இருக்கும்போது வார்ப்புருத் தேர்வு சுவாரஸ்யமாகிவிடுகிறது.

Comments are closed.