வேர்ட்பிரஸ்: பக்கத் தலைப்பில் வலைப்பதிவின் பெயர்

ஒரு நண்பர் பரிந்துரைத்த சின்ன வேர்ட்பிரஸ் உத்தி: நம் சொந்த வேர்ட்பிரஸ் வலைப்பதிவில் பக்கத் தலைப்பில் வலைப்பதிவின் பெயரையும் இடுகையின் பெயரையும் வரவழைக்க header.php கோப்பில் கொஞ்சம் கை வைக்க வேண்டும்.

Header.php கோப்பில் முதலில் இந்த வரிகளைக் கண்டுபிடியுங்கள்…

<title><?php if (is_home()) {bloginfo(‘name’) ;} else { wp_title(‘ ‘);} ?></title>

அதை எடுத்துவிட்டு இந்தத் துண்டை ஒட்டுங்கள்…

<title>
<?php
if(is_home()) {
bloginfo(‘title’);
echo ‘ | ‘;
bloginfo(‘description’);
} else{
wp_title(”);
echo ‘ | ‘;
bloginfo(‘name’);
}
?>
</title>

இதன் ஒட்டுமொத்த விளைவைத்தான் இந்த வலைப்பதிவின் பக்கத் தலைப்பில் பார்க்கிறீர்கள்.