கூகிளின் ஆளில்லாத் தமிழ்ச் சேவை

தேடுவதற்கான புலத்தில் ஒரு எழுத்தைத் தட்டினால் அந்த எழுத்தில் தொடங்கும் சொற்களைக் காட்டி உதவும் Google Suggest வசதி தமிழிலும் கிடைப்பது சந்தோசமே. ஆனால் அது குரங்கின் கைப் பூமாலையாகிவிட்டதோ என்று நினைக்கத் தோன்றுகிறது. நினைத்தும் விட்டேன். கண்ணை மூடிக்கொண்டு க்ளிக் செய்க. தமிழ் தெரியாத ஆட்கள் பண்ணும் கூத்தை நினைத்தால் சிரிப்பு சிரிப்பாக வருகிறது.

9 thoughts on “கூகிளின் ஆளில்லாத் தமிழ்ச் சேவை

 1. கட்டியக்காரன்வாள், கண்ண மூடிண்டு க்ளிக் பண்ணுங்கோன்னுதானே சொன்னேன். நீங்க கேக்காம க்ளிக் பண்ணேள், இப்ப மாட்டிண்டேள். ஹேஹ்ஹேஹ்ஹே!

 2. கூகிளுக்கு இது குறித்து எழுத முடியுமா? வெறுமனே (ஏற்கனவே தேடிய சொற்களை வைத்து முடிவெடுப்பதை விட்டு விட்டு) பரிந்துரைகளைக் கொடுப்பதை தவிர்த்து, கொஞ்சம் manual-ஆக செய்ய ஆலோசனை தரலாம்.

  நாளடைவில், இன்னும் பல்கிப் பெருகிய தேடல் பரவ பரவ, இந்தப் பிரச்சினை தானே காணாமல் போகலாம்.

 3. கூகிள் தி்ட்டமிட்டு அலட்சியமாக செயல்படுகிறதோ என்று சிந்திக்கத் தோன்றுகிறது உங்கள் குற்றச்சாட்டைத் தொடர்ந்து.

  சில குறிப்பிட்டச் சொற்களைக் காட்டக்கூடாது என்றோ காட்டலாம் என்றோ கூகிளோ வேறு யாருமோ எப்படி முடிவெடுப்பது? அந்த சொற்களை நிறையபேர் தேடினால் அவை முக்கியமான குறிச்சொற்களாக (அட, இது பாருங்கய்யா!) அவை மாறிவிடுகின்றன.

  இங்கிலீஷ் கெட்டவார்த்தைகளைப் போட்டுத் தேடிப்பாருங்கள். அவை கூகிளால் தடை செய்யப்பட்டிருக்கின்றனவா என்பது தெரியவரும்.

  கூகிளுக்கு தமிழ் தெரிகிறதா இல்லையா, அவர்கள் இந்த கூத்தை ஆடலாமா இல்லையா என்கிற விஷயமில்லை இது. கூகிள் தேடியந்திரம் காய்த்தல் உவத்தல் அற்று இருப்பதே நல்லது.

  சட்டியில் இருப்பது அகப்பையில் வருகிறது. ஏன் அவ்வளவு பேரும் அந்த சொல்லைப் போட்டு இங்கே வந்து தேடுகிறார்கள் என்று யோசித்துப் பாருங்கள்.

  நீங்கள் ஏன் ஐயன்மீர் இந்த கலாச்சார போலீசு வேலையில் இறங்குகிறீர்கள்?

 4. பாலா: தயவுசெய்து ரவிசங்கர், செந்தில்நாதனின் பின்னூட்டங்களைப் படியுங்கள்!

  ரவிசங்கர்: ஐ அக்கிரி!

  செந்தில்: கலாச்சார போலீசிங் விஷயத்தில் உங்கள் கருத்துடன் நான் முழுவதுமாக உடன்படுகிறேன். ஆனால் இது துல்லியமான தகவலா என்று சந்தேகமாக இருக்கிறது. ‘கவிதை’க்கு 72000 பொருத்தங்கள்/முடிவுகள் வரும்போது 793 முடிவுகளே பெற்றுப் பின்தங்கியிருக்கும் ‘கூ***’-ஐ முதலில் சஜெஷனாகக் காட்ட வேண்டுமா என்பதே என் கேள்வி.

  ஆங்கிலத்தில் எஃப் வகையறா வார்த்தைகளை வடிகட்டுகிறார்கள். தமிழில் அந்த வேலையைச் செய்ய யாரையும் போடவில்லை.

 5. இன்னொரு சமாச்சாரம் – கூ-வை விட பூ-வுக்கு அதிக முடிவுகள் (227000) வரும் பியூட்டியை என்னென்று விளக்குவது? :-)

 6. கூகிள் இப்போது ரிவியூ செய்கிறது.

Comments are closed.