ஆப்பிள் சஃபாரி vs விண்டோஸ்

தீவிர ஃபயர்ஃபாக்ஸ் பயனாளியாக இருந்தாலும் ஆப்பிளின் சஃபாரி உலாவி விண்டோஸுக்கு வருகிறது என்று கேள்விப்பட்டதும் உடனடியாக டவுன்லோட் செய்து நிறுவினேன்.  பெரும் ஏமாற்றம்.

ஆப்பிள் சைட்டில் சஃபாரி பீட்டா 3 எதிலெல்லாம் மற்ற உலாவிகளைத் தூக்கிச் சாப்பிடுகிறது என்று பார் சார்ட் எல்லாம் போட்டு வைத்திருக்கிறார்கள். ஆனால் பக்கங்கள் உலாவிக்கு வருவதற்குள் பொறுமை போய்விடுகிறது. சேவை மறுப்பு (Denial of Service) உட்பட பல பிரச்சினைகள் இருப்பதாகப் பலரும் அதற்குள் எழுதிவிட்டார்கள். அதன் புக்மார்க் வசதியைத் தொட்டாலே க்ராஷ் ஆகிறதாம். பீட்டா என்ற பெயரில் சஃபாரிக்குக் குழந்தைத் திருமணம் செய்து வைத்துவிட்டார்கள்.

விண்டோஸ் சஃபாரி பிரச்சினைகள் தற்காலிகமாகவே இருக்கும். ஐட்யூன்ஸ் விண்டோஸில் நன்றாக இயங்கும்போது சஃபாரியும் தவறுகளைத் திருத்திக்கொள்ள ரொம்ப நாள் ஆகாது. அது ஃபயர்ஃபாக்ஸுக்கோ இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரருக்கோ கடும் போட்டியாக உருவெடுக்குமா என்பது வேறு விஷயம்.

ஆனால் பெரியண்ணன் மைக்ரோசாஃப்ட் தவிர எல்லோரும் செய்யும் தப்பை ஆப்பிளும் செய்திருக்கிறது. விண்டோஸ் சஃபாரிக்கு யூனிகோடு சுத்தமாகப் புரியவில்லை. மெக்கின்டாஷில் எப்படியோ. தமிழை அது பிய்த்துப் போடுவதைப் பார்க்க சகிக்கவில்லை. டைப் செய்தாலும் அதே கதைதான். ஃபயர்ஃபாக்ஸ் கூட justify செய்தால்தான் பிய்த்துப் போடுகிறது. சஃபாரியில் முழுசாகவே தகராறுதான்.

எல்லா பெரிய வசதிகளும் ஃபயர்ஃபாக்ஸில் இருக்கும்போது  விண்டோஸ் சஃபாரியை இப்போதைக்கு யாரும் பயன்படுத்துவார்கள் என்று தோன்றவில்லை. ஒரு பக்கம் பரபரப்பாக டவுன்லோடு செய்துகொண்டிருப்பார்கள், இன்னொரு பக்கம் அதே பரபரப்போடு அனின்ஸ்டால் செய்துகொண்டிருப்பார்கள். ஒரு மென்பொருளை பீட்டா டெஸ்ட்டிங் செய்வதற்கு முன்பே உலகிற்கு ஈவது என்ன அணுகுமுறை?

safari.jpg

3 thoughts on “ஆப்பிள் சஃபாரி vs விண்டோஸ்

  1. இந்த இம்சையை நேற்றே சூட்டோடு சூடாக தரவிறக்கி நிறுவி பயன்படுத்தி நொந்தவர்களில் நானும் ஒருவன். :(

  2. சுதர்சன், பிரவுசிங்குக்கு ஃபயர்ஃபாக்ஸ் இருக்கிறது. அழகாக இருக்குமே என்று நம்பி ஏமாந்தேன். அழகாகக் கூட இல்லை.
    ரவி: உணர்ச்சிப் பதிவுக்கு நன்றி!

Comments are closed.