சென்சிட்டிவ் ஜர்னலிசம்

நேற்று ஹிந்துஸ்தான் டைம்ஸின் முகப்பில் ஒரு சாவுச் செய்தி போட்டிருந்தார்கள். ஜோக்குகளுக்குப் போடுவது போல் ஒரு கார்ட்டூனும் போட்டிருந்தார்கள். விகடன் பேப்பர்தான் நினைவுக்கு வந்தது. திரைப்பதிவு கீழே:

hts.jpg

இதற்குப் பெயர்தான் sensitive இதழியல்.

அப்புறம் ஒரு தமாஷ்: இன்றைய ஹி.டைம்ஸில் அதுல் சோந்தி என்பவர் கிரிக்கெட் பத்தி ஒன்று எழுதியிருக்கிறார். பங்களாதேஷ் பயிற்சியாளர் டேவ் வாட்மோர் இப்போது பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் இடையில் பீஷ்மர் மாதிரி தடுமாறுகிறாராம். அதாவது இந்திய அணியினர் பாண்டவர்களாம், பங்களாதேஷ்காரர்கள் கௌரவர்களாம்! ஆர்.எஸ்.எஸ். வாடை அடிக்கவில்லை?

2 thoughts on “சென்சிட்டிவ் ஜர்னலிசம்

  1. அண்ணே, விகடன் பேப்பர் போன்ற லோக்கல் சென்சிட்டிவாளர்கள் இவர்கள் போன்ற நேஷனல் சென்சிட்டிவாளர்களிடமிருந்துதான் கற்றுக்கொள்கிறார்கள். அவிக இன்டர்நேஷனல்காரங்கக்கிட்ட இருந்து… மாறுவது சோகால்டு கலாச்சார லெவல் மட்டுமே.

  2. நிஜமாகவா சொல்கிறீர்கள்? மேலை மீடியாவில் நிற வெறி, இன வெறி, வர்க்க வெறி என்று எல்லா வெறிகளும் உண்டு. தகவல் பிழைகள் கூட இருக்கும். ஆனால் இந்த அளவுக்குக் கூமுட்டைத்தனம் கூடவா?

Comments are closed.