அபத்த மொழி

கல்லூரி நாட்களில், Waiting for Godot என்ற (அபத்த) நாடகத்தை எழுதிய பிரிட்டிஷ் எழுத்தாளரான சாமுவல் பெக்கட்டின் நாடகங்களை விட நாவல்களும் சிறுகதைகளும் என்னை அதிகம் கவர்ந்தன. காரணம் அவரது மொழிநடை. லேசில் புரியாது. கவிதை போல் இருக்கும். இசைக்குரிய ஒரு ரிதம் இருக்கும். உரக்கப் படித்தால் சத்தம் நன்றாக இருக்கும். இந்த அம்சங்களும் அவரது முதன்மைப் பாத்திரத்தை impersonal-ஆக ஆக்கிவிடுகின்றன. மொத்தத்தில் மொழியைக் கையாள்வதில் அவருக்கு இருந்த அபரிமிதத் திறமையும் நகைச்சுவையும் இந்தப் படைப்புகளில் வெளிப்படுகின்றன.

அவரது Fizzles என்ற உரைநடைத் துண்டுகளில் எட்டாவது துண்டின் தொடக்க வரிகள் இவை:

For to end yet again skull alone in a dark place pent bowed on a board to begin. Long thus to begin till the place fades followed by the board long after. For to end yet again skull alone in the dark void no neck no face just the box last place of all in the dark the void. Place of remains where once used to gleam in the dark on and off used to glimmer a remain. Remains of the days of the light of day never light so faint as theirs so pale. Thus then the skull makes to glimmer again in lieu of going out.

முழுசாகப் படித்ததில்லை. ஆனால் சுமார் பத்து வருடங்களுக்கு முன் இந்தப் புத்தகத்தை சும்மா மேய்ந்ததில் “For to end yet again skull alone in a dark place” என்ற வார்த்தைகள் மட்டும் எனக்கு மறக்கவே இல்லை. பெக்கட்டின் உரைநடைப் படைப்புகளில் Molloy என்ற அற்புதமான நாவலையும் The End என்ற நல்ல சிறுகதையையும் மட்டும் படித்திருக்கிறேன்.

பெக்கட் Ulysses என்ற பயங்கரமான புத்தகத்தை எழுதிய ஜேம்ஸ் ஜாய்ஸுக்கு மாணவர் போல் இருந்தார். யுலிசிஸ், ஃபினெகன்ஸ் வேக் போன்ற நாவல்களில் ஜாய்ஸ் கையாண்ட நடையின் தாக்கத்தாலோ என்னவோ, பெக்கட்டும் ‘வெய்ட்டிங் ஃபார் கொடோ’ போன்ற நாடகங்களில் சில சமயம் நான்சென்ஸ் மாதிரியும் சில இடங்களில் லத்தீன் மாதிரியும் தெரியும் சொற்களையும் சொற்றொடர்களையும் பயன்படுத்தினார். ‘யுலிசிஸ்’ பெருநாவலிலிருந்து ஓர் உதாரணம்:

They came down the steps from Leahy’s terrace prudently, Frauenzimmer: and down the shelving shore flabbily, their splayed feet sinking in the silted sand. Like me, like Algy, coming down to our mighty mother. Number one swung lourdily her midwife’s bag, the other’s gamp poked in the beach. From the liberties, out for the day. Mrs Florence MacCabe, relict of the late Patk MacCabe, deeply lamented, of Bride Street. One of her sisterhood lugged me squealing into life. Creation from nothing. What has she in the bag? A misbirth with a trailing navelcord, hushed in ruddy wool. The cords of all link back, strandentwining cable of all flesh. That is why mystic monks. Will you be as gods? Gaze in your omphalos. Hello! Kinch here. Put me on to Edenville. Aleph, alpha: nought, nought, one.

இருவரின் மொழிநடையிலும் ஒற்றுமையைப் பார்க்கலாம் (ஜாய்ஸ் எழுதிய எதையும் நான் படித்ததில்லை).

பெக்கட்டைத் திரும்பிப் பார்த்து ரொம்ப காலமாகிவிட்டது. அவரை நினைவுபடுத்தியது எனக்கு வந்த சில குப்பை மின்னஞ்சல்களின் தானியங்கி ‘மொழிநடை’. பெக்கட்டும் அவரைப் போன்றவர்களும் எழுதியதை இன்றைய spam அனுப்புநர்கள் மென்பொருள் உதவியுடன் அனாயாசமாக உருவாக்குகிறார்கள். இரண்டு பேரின் நடையையும் கலக்கி உருவாக்கியது போல் ஒரு நடை … (ஃபார்மேட்டிங் நான் கஷ்டப்பட்டு செய்தது)

Upset market lose becomes mentian complient hes. Taxes doesnt complexity judged swap existing ibmsuse forth. Happy fedora amd commercial closer production patch? Glass nigel technical strategist! Heck quotpoeple tabsquot nonsense poeple aka linforcer rick? Philosophy towards as return carriages paragraphs commas colons? Damage cumulative hotfixes recover! Rethinking cagily tycoon herald tribune orlando ayala foreign. Usersquot deadline delivering, barber gone stumped therefore. Futur hightech reacting hrhrhr, jay rosen heavy, few! Little niche learned quotis, usersquot deadline delivering. Coded wcs perform suggests hurts internet pushing. Tips inbox scripts, bc main log create newscreate! Wtf export importable zonequot? Committing, text looks slogan unskilled copywriter.

இரண்டும் ஒன்று என்று சொல்ல வரவில்லை. குப்பை அஞ்சல் போன்ற ஒரு விஷயம் சாமுவல் பெக்கட்டையும் ஜேம்ஸ் ஜாய்ஸையும் நினைவூட்டும் பியூட்டியைத்தான் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.

குப்பை போடுபவர்களிடம் காணப்படும் இன்னொரு சுவாரஸ்யமான ட்ரெண்ட், இலவசமாகக் கிடைக்கும் பழைய ஆங்கில இலக்கியப் படைப்புகளில் கொஞ்சம் உருவியெடுத்துக் குப்பைக்கு முலாம் பூசுவது. ஜேன் ஆஸ்டனின் Pride and Prejudice, Emma ஆகிய புகழ்பெற்ற நாவல்களிலிருந்து சில பத்திகள் என் ஜிமெயிலின் ஸ்பாம் ஃபோல்டரில் கிடந்தன. முதலில் கன்னாபின்னாவென்று வெட்டியெடுத்த வரிகள். கீழே விளம்பரம். அதற்குக் கீழே மீண்டும் கண்டபடி கத்தரித்து அள்ளிப்போட்ட துண்டுகள். எலிசபெத் பென்னட்டோ மிஸ்டர் நைட்லியோ ஒரு வாக்கியத்தையும் முழுசாகப் பேச முடியாது. குப்பைக்காரர்கள் ஜேன் ஆஸ்டனின் உரைநடையை சாமுவல் பெக்கட்டின் உரைநடையைப் போல் மாற்றிய வேடிக்கை…

“Nor, if you were, could I ever bear to part with you, my Harriet. You Emma spared no exertions to maintain this happier flow of ideas, and h Soon afterwards Mr. Elton quitted them, and she could not but do him t “Pray, Mr. Knightley,” said Emma, who had been smiling to herself thro No, upon no account in the world, Mr. Weston; I am much obliged to yo “Never, madam,” cried he, affronted in his turn: “never, I assure you.

நிற்க. இந்தக் கோணத்தில் பார்க்கும்போது தமிழ் ஸ்பாம் அவசியமான ஒரு தீமை என்று தோன்றுகிறது. பழைய இலக்கியங்களை சாஃப்ட்வேரை வைத்துக் குதற வேண்டிய அவசியம் இல்லை. இன்று சிறுபத்திரிகைகளில் வரும் கதைகளையும் பின்நவீனத்துவ மோஸ்தர் கவிதைகளையும் அப்படியே எடுத்துப் போடலாம். எங்கோ ஆரம்பித்து இங்கே வந்து முடிய வேண்டும் என்று இருக்கிறது இந்தப் பதிவு.

8 thoughts on “அபத்த மொழி

 1. /ஜேன் ஆஸ்டனின் Pride and Prejudice, Emma ஆகிய புகழ்பெற்ற நாவல்களிலிருந்து சில பத்திகள் என் ஜிமெயிலின் ஸ்பாம் ஃபோல்டரில் கிடந்தன//

  நெசமாவா? எனக்கு இன்னும் *எழுச்சியூட்டும்* மருந்துகளும், ஆன்லைன் டிப்லோமாக்களும் தான் விற்கிறார்கள். அதததுக்கு ஒரு இது வேணும்ல..

  //நிற்க. இந்தக் கோணத்தில் பார்க்கும்போது தமிழ் ஸ்பாம் அவசியமான ஒரு தீமை என்று தோன்றுகிறது//

  உண்மை.

 2. ஸ்ஸ்ஸ்.. அப்பா.. இப்பவே கண்ணக்கட்டுதே…

 3. இப்பவேயா? தமிழ் ஸ்பாம் மாடல் ஒன்றை ரெடி பண்ணிக்கொண்டிருக்கிறேன். பார்த்துவிட்டு சொல்லுங்கள்.

 4. ப்ளாக்ஸ்பாட்டில் வலைப்பதியாத உங்களுக்கு ரேடியா.ஹாப்லாக்.காம் பிரச்சினை எங்கே தெரியப் போகிறது 😀

 5. இப்படி சாமுவேல் பெக்கெட்டையும் எம்மாவையும் தமிழ்ல வாசிக்க நல்லாருக்கு

Comments are closed.