கவிதை உத்தி நெ. 1

பிதற்றலான உரைநடையைக் கவிதையாக்க நம் கவிஞர்கள் கையாளும் ஒரு உத்தியைப் பற்றிப் பயனுள்ள தகவல் ஒன்று இன்று வந்த டெக்கான் க்ரானிக்கிளின் இலவச இணைப்பில் கிடைத்தது.

வாக்கிய/வாசக அமைப்பை உல்டா ஆக்கும் உத்தியைத்தான் சொல்கிறேன். என்னையே மேற்கோள் காட்டிக்கொண்டால் –

எதையும் முதலிலேயே சொல்லிவிட்டால் சஸ்பென்ஸ் இருக்காது. அதனால்தான் சில கவிஞர்கள் கவிதையின் முதல் சொல்லையோ சொற்றொடரையோ அடுத்த சில வரிகளுக்கு ஒளித்து வைத்துக்கொண்டு கடைசி வரியாக ரிலீஸ் பண்ணுகிறார்கள்.

இதற்கு anastrophe என்று பெயராம் (தமிழ் இலக்கணத்திலும் இதற்கு ஒரு பெயர் இருக்க வேண்டும்). விளக்கம்:

Inversion of the normal syntactic order of words. For example: “To market went she.”

அப்படியாயின் நம் கவிஞர்களில் பலர் poets அல்லர், anastrophists.

குறிப்புகள்:

» அனாஸ்ட்ரஃபிக்கு சில உதாரணங்கள் என் மூன்று காதல் கவிதைகளில்.

» கவிதையில் வாக்கிய அமைப்பை மாற்றுவது தவறு என்று நான் சொல்லவில்லை. அதுதான் கவிதை நடை என்றும் கவித்துவம் என்றும் நம்பிக்கொண்டு அதை மட்டுமே வைத்துக் கவிதை எழுதுவதே தமிழ் அனாஸ்ட்ராஃபி.

6 thoughts on “கவிதை உத்தி நெ. 1

  1. ஆஹா..நான் அருங்கவிதை என்று நினைத்துக் கொண்டிருத்ததை எல்லாம் உத்தினு தோலுரிச்சுட்டீங்க :) தொடர்ந்து இந்த உத்திகள் குறித்து எழுதுங்கள்..சுவாரசியமா இருக்கு

  2. தமிழ்க் கவிதைகளில் இப்படிப் பல்வேறு போக்குகள் உண்டு. இன்னொரு முக்கியமான போக்கு “ஓ கவிதை” போக்கு. அது பற்றியும் உங்களிடமிருந்து ஒரு பதிவை எதிர்பார்க்கிறோம்.

  3. கட்டியக்காரண்ணே, அதப் பத்தி நீங்களும் எளுதலாம்ணே!

    ரசிகருங்கோ, நக்கலா? பதிவிற்கான இரண்டாவது குறிப்பைப் பாருங்கள், டிஸ்கிளெய்மர் போட்டிருக்கிறேன்.

  4. சாத்தான் அவர்களே அனஸ்ட்ரோபி ஒன்றும் புதிதல்ல. எந்த ஒரு அணி அலங்கார உத்தியும் வெவ்வேறு கால கட்டங்களில் வெவ்வேறு பெயர் பெற்று வழங்கப்படுகின்றன. அனாஸ்ட்ரோபி என்பது ஏற்கனவே கிரேக்க நாடகத்தில் பயன்படுத்தப்படும் ஒன்று. கோஷ்டி கான குழுவினர் அரங்க மேடையில் வலது பக்கத்திலிருந்து இடது பக்கமாக நகர்ந்தபடியே குலுவை பாடுவதும் அனஸ்ட்ரோபிதான். மேலும் ஹிஸ்டெரான் – ப்ரோடெரான் அதாவது பின்னால் வரவேன்டியது முன்னால் வருவது அல்லது திருப்ப முறையாக… என்று கால ஒழுங்கின்மையை வேறு ஒரு பயன்பாட்டிற்காக உத்தியாக பயன்படுத்துவது. இது பற்றி கிரேக்க அலங்காரவியலிலும் உள்ளது. சமஸ்கிருத இலக்கிய கோட்பாடுகளில் இது எவ்வாறு வழங்கப்படுகிறது என்பதை ஞானக்கூத்தனிடம் கேட்டால் தெரிய வரும். அதாவது காலைப்பனியில் நனையும் புல்வெளி என்று ஒரு வரி அமைத்தால், முக்கியத்டுவம் அல்லது அழுத்தம் எதற்கு அளிக்கப்படவேண்டும் என்பது பொறுத்து கவிஞர்கள் அனாஸ்ட்ரோபியை பயன்படுத்தலாம். குறிப்பிட்ட வரியில் அழுத்தம் காலைப்பனிக்கு கொடுக்கப்படவேண்டுமென்றால் புல்வெளி நனையும் காலைப்பனி என்று குறிப்பிடலாம் அல்லது நனைதலுக்கு கொடுக்கவேன்டுமென்றால் நனையும் புல்வெளியின் காலைப்பனி எனலாம். அல்ல புல்வெளிக்கு முக்கியத்துவம் வேண்டுமென்றால் புல்வெளியின் நனையும் காலைப்பனி எனலாம். ஆனால் இதனாலெல்லாம் என்ன என்று தெரியவில்லை. இங்கு புல்வெளி, நனைதல் மற்றும் காலைப்பனி போன்றவை எதற்கு குறியீடாய் அமைகிறது என்பது பொறுத்து அனாஸ்ட்ரோபியை திறம்பட பயன்படுத்தலாம். நம் கவிஞர்கள் பயன்படுத்துவது குறித்து நான் கருத்து கூற விரும்பவில்லை. இந்த உத்தியின் முக்கிய நோக்கமாக ஒன்றை குறிப்பிடலாம் என்று தோன்றுகிறது. ரஷ்ய உருவவியல்வாதிகள் கூறும் பரிச்சயமழிப்பு அல்லது அல்- பரிச்சயமாக்கல் என்ற டிஃபெமிலியரைசேஷன் என்ற கருத்தாக்கத்தை செய்து பார்க்கலாம். அதாவது நாம் தினசரி உபக்யோகிக்கும் மொழி பல்வேறு நோக்கம் சார்ந்த பயன்பாடு சார்ந்த இலக்குகளுக்காக பயன் படுத்தப்படுகிறது. அதில் ஒன்றும் சுவையில்லை. அது வெறும் வெற்று அரட்டையாக இருக்கிறாது. எனவே அந்த மொழிப் பிரயோகத்திலிருந்து சற்றே இளைப்பாற சற்றே ஒதுங்கியிருக்க இது போன்ற உத்திகளை பயன்படுத்தி தினசரி மொழி எனும் கச்சடாவிலிருந்து தப்பித்து கொள்ளலாம். வெறும் மொழிப்பிரயோகத்தை புரட்டிப்போடுவது மட்டுமல்லாமல் அழுத்தங்களை மாற்றிப் போட்டு மொழியின் பல்படித்தான தன்மையை வெளிக்கொணர்ந்து அர்த்த தளத்தில் தலைகீழாக்குவதும் ஒரு முக்கிய விஷயமாகும்.

  5. //கோஷ்டி கான குழுவினர் அரங்க மேடையில் வலது பக்கத்திலிருந்து இடது பக்கமாக நகர்ந்தபடியே குலுவை பாடுவதும் அனஸ்ட்ரோபிதான்.//

    முத்துக்குமார், anastrophe வெறும் வாக்கிய அமைப்பு சம்பந்தப்பட்ட விஷயம் என்று நினைத்தேன். தற்போது லேசாகத் தலை கிறுகிறுக்கிறது. இந்த சப்பை மேட்டரில் இவ்வளவு இருக்கும் என்று எதிர்பார்க்கவில்லை.

Comments are closed.