ஏ.சி. ரூம் இதழியல் – 2

இது ஒரு belated பதிவு. ஆனால் better late than never.

குறுகிய உயர்சாதி, உயர்வகுப்பு ஆங்கில இதழியலில் தானும் ஓர் அங்கம் என்பதை அவுட்லுக்கும் வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் நிரூபித்துக்கொண்டிருக்கிறது.

இரண்டு வாரங்களுக்கு முன், பிப்ரவரி 05 தேதியிட்ட இதழில் புகைபிடிக்கும் பழக்கம் பற்றிய தனது கவர் ஸ்டோரியில் விளம்பரத் துறை நிபுணர் அலிக் பதம்சி புகைபிடிப்பவர்களை ‘pariah’ என்று குறிப்பிட்டதை அவுட்லுக் அப்படியே வெளியிட்டது. அதைப் பேட்டி கொடுத்த ஒருவருடைய quote-ஆக மட்டுமில்லாமல் ஒரு பெட்டிக் கட்டுரையில் மீண்டும் பயன்படுத்தவும் செய்தது.

சுப்பிரமணிய சுவாமி உளறி மாட்டிக்கொண்ட விவகாரம் அவுட்லுக் போன்ற ஒரு பெரிய பத்திரிகைக்குத் தெரியாமலா இருக்கும்? ஆனால் இவர்களைப் போன்ற பத்திரிகையாளர்களைப் பொறுத்த வரை அறியாமை என்ற பிரச்சினை இல்லை. Pariah என்ற சொல்லை மேலோட்டமான ஒரு உவமையாகப் பயன்படுத்தினால் யார் கேட்கப் போகிறார்கள் என்ற திமிர்தான் அது.

இதைக் கண்டித்துப் பலர் அவுட்லுக்கிற்கு மின்னஞ்சல் அனுப்பியிருக்கிறார்கள்.  கடிதங்களில் ஒன்றிரண்டையாவது அவுட்லுக் வெளியிட்டிருக்கிறதா என்று இந்த இதழை வாங்கிப் பார்த்தேன். இரண்டு வரிக் கடிதங்கள் இரண்டும் அவற்றுக்குக் கீழே சுருக்கமான ஒரு டெம்ப்ளேட் ‘வருந்துகிறோ’மும் போட்டிருக்கிறார்கள்.

ஒரு விதத்தில் பார்த்தால் அவுட்லுக் சாதிப் பிரச்சினை ஒன்றில் சுரணைகெட்டத்தனமாக நடந்துகொண்டதில் ஆச்சரியம் இல்லை. இதைப் பற்றிய எனது முந்தைய பதிவு ஒன்று: ஏ.சி. ரூம் இதழியல்.

இணைப்புகள்:

அவுட்லுக்கின் கவர் ஸ்டோரி
பெட்டிக் கட்டுரை

குறிப்பு:  மேற்கண்ட இணைப்புகளைப் பார்க்கப் பயனர் பெயரும் கடவுச் சொல்லும் தேவை. அவை முறையே பின்வருமாறு:

butterchicken
limesoda

நன்றி: BugMeNot