உசாத் துணை குறிப்பிடாமை

ஆங்கில மொழியில் மிகவும் கவர்ச்சியான ஒரு அம்சம், எதிர்மறையான விஷயங்களுக்குக் கூட நல்ல பெயர் வைத்து மீசை மண்ணைத் தட்டிவிடும் euphemism என்கிற உத்தி. இதற்கொரு நல்ல உதாரணத்தை நேற்று பார்த்தேன்.

‘குளோப் அண்ட் மெயில்’ நாளேடு, ‘த நியூ ரிபப்ளிக்’ பத்திரிகையில் வந்த ஒரு மேட்டரை சுட்டது. விஷயம் வெளியே தெரியவந்து சர்ச்சை ஆனதும், முன்னது பின்னதிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டது. ஆனால் அது plagiarism என்ற குற்றச்சாட்டை ‘கு & மெ’ மறுத்தது. ஏனென்றால் அதற்கு வேறொரு பெயர் உண்டாம் – failure of attribution (ஐட்டம் 12 & 6). ‘ஒரிஜினலாக எழுதியவர் பெயரைப் போடாமல் விட்டுவிட்டோம், மற்றபடி அது திருட்டு இல்லை’ என்பது நல்ல லாஜிக்.

Failure of attribution-ஐ ‘உசாத் துணை குறிப்பிடத் தவறுதல்’ என்று ஜாலியாகத் தமிழாக்கலாம். இன்றைக்கு நமக்கு அச்சிலே காணக் கிடைக்கின்ற பல மேட்டர்களும் உசாத் துணை குறிப்பிடத் தவறுவதால் ஏற்படுவனவே. டவுன்லோடு படைப்புகளிலிருந்து தமிழ்ப் புத்தக அட்டைப் படங்கள் வரை இந்த மூல நோய் பரவியிருக்கிறது.

(Serial plagiarism என ஒன்று இருப்பதையும் இந்த வலைப்பக்கத்தில்தான் தெரிந்துகொண்டேன். பார்க்க: 27.)