சுய நேர்மை

பாடாவதி வங்கி ஒன்றில் வைத்திருக்கும் கணக்கிலிருந்து பணம் எடுக்க ஏ.டி.எம். போனேன் நேற்று.

எனக்கு முன்பு ஒருவர் உள்ளே போய் கார்டைப் போட்டுப் போட்டு விளையாடிக்கொண்டிருந்ததால் கொஞ்ச நேரம் காத்திருந்தேன். அப்போது சிம்புட் பறவை என்று வர்ணிக்கத் தக்க தும்பி சைஸ் பூச்சி ஒன்று சுற்றிச் சுற்றி வந்தது. அதன் தொந்தரவிலிருந்து தப்பிப்பதெங்ஙனம் என்று யோசித்தவாறு நான் நின்றிருக்கையில் அந்த மனிதர் ஒரு வித நிம்மதியுடன் வெளியே வந்தார்.

நான் உள்ளே போய்க் கொஞ்ச நேரம் கழித்துத்தான் கவனித்தேன். பூச்சியும் உள்ளே வந்துவிட்டிருந்தது. வேலை முடிந்து வெளியே போன பின் திரும்பிப் பார்த்தால் பூச்சி இன்னும் ஏ.டி.எம். பூத்திலேயே இருந்தது.

நான் மட்டும் சமூகப் பொறுப்போ சக மனிதர்களின்பால் இரக்கமோ இல்லாமலிருந்தால் இந்த அனுபவத்தைக் கவிதையாக்கியிருப்பேன்.

6 thoughts on “சுய நேர்மை

  1. நான் கூட கவிதை எழுத முயற்சி செஞ்சு ஒர்க்கவுட் ஆகலேன்னா, இப்படித்தான் சொல்லிப்பேன். :-)

  2. எனக்கு ஒர்க் அவுட் பிரச்சினை இல்லை. இந்த வலைப்பதிவிலேயே பல கவிதைகளை உற்பத்தி செய்து போட்டிருக்கிறேன். அவை ‘கவிதை :-(‘ என்ற வகையறாவில் இருக்கின்றன. ஆனால் நான் அவற்றைக் கவிதைகள் என்று சீரியஸாக சொல்லிக்கொண்டால் பெரும் பாதகம் செய்தவனாவேன் அல்லது அஞ்ஞானியாவேன்!

  3. உங்கள் கணக்கில் பணம் இல்லாததை பூச்சி பார்த்துவிட்டதால் கவிதை எழுத முடியவில்லை அதானே தலைவா? அல்லது ஏ.டி.எம் பூச்சிகள் என்று ஒரு கவிதை வரமலா போய்விடும்.

  4. முத்துக்குமார், பணம் இல்லாத அவலத்தை ‘பாடாவதி’ என்ற சொல்லைப் பிரயோகித்ததை வைத்துக் கண்டுபிடித்தீர்களா, பூச்சியே உங்களிடம் சொன்னதா? பூச்சி மேல் உங்கள் ‘அர்த்தப்படுத்தலை’ ஏற்றியதை மந்திர யதார்த்தவியல் என்று சொன்னால் சரியாக இருக்குமா?

  5. பூச்சி மேல் என்னுடைய அர்த்தமேற்றலை மந்திர யதார்த்தவியல் என்று கூறமுடியுமா என்று தெரியவில்லை ஆனால்… பாடாவதி என்ற சொல்லைக் கொண்டு பணம் இல்லாத்தை கண்டுபிடித்ததாக சாத்தான் கண்டுபிடித்தது மந்திர எதார்த்த வாசிப்பாக இருக்கும் என்று அஞ்சுகிறேன்.

  6. இப்போதெல்லாம் இப்படித்தான் படைப்புகளை இன்ரப்ரெற் (interpret) செய்கிறார்கள்.

Comments are closed.