ஏ.சி. ரூம் இதழியல்

இந்த வார அவுட்லுக்கில் ஒரு கட்டுரை. அதன் தொடக்கத்தில் டி.ஹெச். லாரன்ஸ் கவிதை வரிகள். கட்டுரை முடியும்போதும் அவரது சில வரிகள்.

கட்டுரை எந்த இலக்கிய இழவெடுப்பையும் பற்றியதல்ல. டெங்கு, சிக்குன்குனியா பாதிப்புகள் பற்றியது. கவிஞர் கொசு பற்றி எழுதிவிட்டார், அது இவர்களுக்கு வசதியாய்ப் போய்விட்டது.

கட்டுரையில் இருக்கும் புள்ளிவிவரங்களின்படியே  இந்த நோய்களால் அவனவன் செத்துக்கொண்டிருக்கிறான். இவர்களுக்கு அந்த பயங்கர பாதிப்புகளைப் பற்றிக் கட்டுரை எழுதும்போது மேற்கொள் கொடுக்க மருத்துவர்கள் மட்டுமில்லாமல்  கவிஞர்களும் தேவைப்படுகிறார்கள்.

ஏ.சி. ரூம் என்கிற கிணற்றில் இருப்பவர்களுக்கு சுரணை அல்லது sensitivity கொஞ்சமும் இருக்காது போலிருக்கிறது. குறைந்தபட்ச பொது அறிவு கூட இல்லாதபோது அதெல்லாம் எங்கே இருக்கப் போகிறது.
இலிங்கு: The Aedes of September (தலைப்புக்கே அகராதி தேவை)