பிளாகரை முந்துகிறதா வேர்ட்பிரஸ்?

வேர்ட்பிரஸ் செய்தி வலைப்பதிவு தரும் மாதாந்திர புள்ளிவிவரங்களைப் பார்த்தால் அப்படித்தான் தெரிகிறது.

செப்டம்பர் மாதத்தில் வேர்ட்பிரஸில்

  • உருவாக்கப்பட்ட வலைப்பதிவுகள்: 58,000
  • புதிய பயனர்கள்: 61,000
  • பயனர்கள் இத்தனை முறை தீம் மாற்றினார்கள்: 2,61,000
  • 13,00,000 பதிவுகள் இடப்பட்டன
  • 1,90,000 பக்கங்கள் உருவாக்கப்பட்டன
  • 9,39,000 கமென்ட்ஸ்
  • உதவி கேட்டு 3,400 வேண்டுகோள்கள்
  • பயனர்கள் 2,54,000 கோப்புகளை வலையேற்றினார்கள்
  • 6,30,70,000 பக்கங்கள்/பதிவுகள் பார்க்கப்பட்டன

இந்த சூப்பர் டூப்பர் புள்ளிவிவரம் கூகிளின் பிளாகருக்குப் பெரிய அடி விழுந்திருப்பதைத்தான் காட்டுகிறது.

பிளாகர் பீட்டாவில் பலர் நொந்து போயிருக்கிறார்கள். பி.பீ.க்கு முன்பே பிளாகர் பயனர்களுக்குப் பழைய பதிவுகளை சேமிக்கும் விஷயத்தில் பல பிரச்சினைகள். முழு வலைப்பதிவையும் விழுங்கி ஏப்பம் விட்ட கதைகளும் உண்டு.

கூகிள் அடுத்து என்னத்தான் செய்யப் போகிறதோ…

3 thoughts on “பிளாகரை முந்துகிறதா வேர்ட்பிரஸ்?

Comments are closed.