டைமண்டு கவிதை 1

சுமார் பத்து வருடங்களுக்கு முன்பு கவியரசு வைரமுத்துவை யாரோ இலக்கியவாதி பிரபல பத்திரிகை ஒன்றில் தாக்கியிருந்தார். யார் என்று நினைவில்லை. ஆனால் கவியரசு எழுதுவது கவிதை இல்லை என்று அவர் சொல்லியிருந்தார்.

சும்மா இருப்பாரா டைமண்டு? “என் பிரிய எதிரிகளே!” என்ற தலைப்பில் ஒன்று எழுதினார். அதற்காகவே காத்திருந்த பத்திரிகை ஒன்று அதை வெளியிட்டது. அதைப் பகடி செய்து நான் எழுதியது கீழே. பகடியைப் பார்த்து ஒரிஜினலை ஊகித்துக்கொள்ளலாம்!

அடைத்தாலும் தப்புவேன்!

என் வறிய எதிரிகளே!

மழைக்கால வெயிலில் உங்களை
நினைத்தால்
உடல் கொஞ்சம் விறைக்கிறது.

உங்கள் முகவரியை
நீங்கள் ஏன் என்
நிமிராத வாலில்
எழுதிவிட்டுப் போகிறீர்கள்?

எருக்கம் பூவையும்
மல்லிகைப் பூவையும்
எப்படி உங்களால்
ஒரே நாறில்
ஒரே நேரத்தில்
கோர்க்க முடிகிறது?

இப்போதெல்லாம்
உங்கள் பேனா
எழுத்துக்களையும் எண்களையும் தவிர
வேறெதையும்
எழுதுவதில்லையே!

நீங்கள் தூவிய
பூக்கள் என் காலைத் தடுக்கியது.

நீங்கள்
தட்டிக் கொடுத்தபோது
என் சட்டையில் தையல் விட்டது.

வறிய எதிரிகளே!

பீடியால் சுட்டு – என்
வெள்ளத்தை வற்றச் செய்யத் திட்டமா?

என்ன செய்வீர்கள் என்னை?
பணமும் புகழும் சோறும்
இல்லாத தேசத்திற்கா
என்னை நாடு கடத்திவிட முடியும்?

பூண்டி நீர்த் தேக்கத்தில்
எனக்கான நீரைக்
களவாடிவிடவா முடியும்?

தமிழகப் பெட்டிக் கடைகளில்
எனக்கான பீடிகளை
அமுக்கிவிடவா முடியும்?

எழுதிக்கொள்ளுங்கள்
எதிரிகளே!

என்னைச் சிறையிலடைத்தாலும்
நான் கம்பியிடம் கவிதை பாடி
வெளியே வந்துவிடுவேன்.

என் வறிய எதிரிகளே!

நீங்கள் என் மேல் எறிந்த
தீப்பந்தங்களைக்
கொண்டு நான் முதுகு
சொறிந்துகொள்கிறேன்.

என் மீது வீசும் காகித
அம்புகளால் நான் காது
குடைந்துகொள்கிறேன்.

என் மானம் அறிவு தொட முடியாத
தூரத்தில் இருக்கிறது.
சமூகத்தின் சம்மதத்தோடு
நான் சாகாமல் இருக்கிறேன்.

என் பென்சிலுக்கு ரப்பர் இல்லை.

என் பாஷையை
கழுதைகளுக்கு சொல்லிக்
கொடுத்துவிட்டுச் சாவேன்.

என் கவிதைகளை
பல்லிகளுக்கு சொல்லிக்
கொடுத்துவிட்டுப் போவேன்.

என் எழுத்து
படிக்கும் மக்களின் தலையெழுத்து!

என் வறிய எதிரிகளே
என் இதயத்தைச் சொறியாதீர்கள்.

பேண்ட்டைக் கிழித்து
பெர்முடாஸ் ஆக்கிவிடலாம் என்று
பிழை செய்யாதீர்கள்.

சில நூற்றாண்டுகளுக்குத்
தேவையான தாட்களை – என்
சின்ன வீட்டில் நான்
சேமித்து வைத்திருக்கிறேன்.

கூகிள்வழிப் பயனர்கள்

நேற்று கூகிள் தேடலின் வழியாக இந்த வலைப்பதிவுக்கு வந்தவர்கள் தேடப் பயன்படுத்திய சொற்கள்:

தமிழ் செக்ஸ்
ஓல்
காதல் கவிதைகள்

தமிழ்க் காமம் பற்றி அப்படி என்னத்தை எழுதிவிட்டேன் என்று தெரிந்துகொள்ள சம்பந்தப்பட்ட சொற்றொடரை கூகிளில் போட்டுத் தேடினேன். முடிவுகளில் 18 பக்கம் வரை என் வலைப்பதிவைக் காணோம். தேடியவர் ரொம்பப் பொறுமைசாலிதான். எனக்குத்தான் பொறுமை இல்லாமல் க்ளோஸ் பண்ணிவிட்டேன். சுய வலைத் தேடலுக்கும் (ego surfingதான்!) ஒரு அளவுண்டு, இல்லையா?

ஒரு தேடல் இருக்க வேண்டும் என்கிற தத்துவம் தொழில்நுட்ப ரீதியில் செயல்படுத்தப்படுவது குறித்து மகிழ்ச்சியே.

குரூரமான நகைச்சுவை

தயவு செய்து மென்மையான இதயம் கொண்டோர் மேற்கொண்டு படிக்க வேண்டாம் எனக் கேட்டுக்கொள்ளப்படுகிறது. தயவு செய்யாமல் மென்மையான இதயம் கொண்டோருக்கும் இந்த வேண்டுகோள் பொருந்தும்.

* * *

வழக்கமான வலையுலாத்தலில் கண்ணில் பட்டது இந்த limerick ‘அகராதி’. எளிமையான சிந்தனைகளை சந்தத்துடன் நறுக்கென்று எழுதும் இந்தப் பழம்பெரும் கலை அழியாமல் இருப்பது சந்தோசமான விசயம். சைட்டிலிருந்து ஒரு எ.கா.:

An antipornography nut
Sees commercials as televised smut.
He’s complaining today
About feminine spray
And those diaper ads showing a butt. (Chris Doyle)

லிமரிக் என்றதும் எனக்கு முழுசாக நினைவுக்கு வருவது என் கல்லூரி நாட்களில் நான் பாடித் திரிந்த ஒரு லிமரிக்:

Here lies the amorous Fanny Hicks
The scabbard of ten thousand pricks
If you want to do her honor
Pull out your cock and piss upon her.

இதில் நகைச்சுவை அதிகம் இல்லையென்றாலும் எப்படியோ மனதில் தங்கிவிட்டது. அதே போல Harry Graham என்பார் எழுதிய Ruthless Rhymes-ஐயும் கண்டுபிடித்தேன். வகுப்பறையில் நண்பர்களுடன் படித்து அடக்க முடியாமல் சிரித்த லிமரிக்குகள் இவை. சாம்பிள்:

Auntie, did you feel no pain
Falling from that apple tree?
Will you do it, please, again?
‘Cos my friend here did’nt see.

- – -

Father heard his children scream,
So he threw them in the stream,
Saying, as he drowned the third,
“Children should be seen, not heard!”

OEDILF-ல் யார் வேண்டுமானாலும் உறுப்பினராகி நகைச்சுவைக் கவிதைகள் எழுதலாம். அது வலையில் பிரசுரிக்கப்படும் தகுதியை சைட்டின் ஆசிரியர் குழு தீர்மானிக்கும். இங்கே நல்ல கவிதைகள் நிறைய இருப்பது வியப்பளிக்கிறது (முன்பே கொடுத்த லிங்க்தான், இருந்தாலும் சுட்டுச் சொற்கள் லிங்க் இல்லாமல் வரக் கூடாதாமே).

அப்டேட்: தமிழில் செய்யுள் வடிவமும் (காளமேகம் ஸ்டைல்) ஹைக்கூவும் லிமரிக்கிற்கு நன்றாக ஒத்துழைக்கும். என் முந்தைய மூன்று காதல் கவிதைகளும் கிட்டத்தட்ட free verse லிமரிக் முயற்சிகள்தாம்.

திடுமாடு நெடுமுருகா இன்னுமொரு வலைப்பதிவா?!

வாழ்க்கை நம்மை எங்கெல்லாம் இட்டுச் செல்கிறது பாருங்கள். இந்த வலைப்பதிவை இப்போதுதான் ஆரம்பித்து அதற்குள் இதற்கு ‘சிஸ்டர் வலைப்பதிவு’ ஒன்றும் வந்திருக்கிறது.

அட்டகாசமான வலைப்பக்கங்களுக்கு இணைப்பு கொடுப்பதற்காக ஒரு வலைப்பதிவை உருவாக்கியிருக்கிறேன். கையில் சாட்டை வைத்திருந்தால் கீழ்க்கண்ட லிங்க் மேல் சொடுக்குங்கள் (பாத்து, யார் மேலயாவது பட்டுடப் போவுது):

லிங்க்கர்

குறிப்ஸ்:

  • இப்பதிவின் தலைப்பு இங்கிருந்து சுட்டது.
  • சிஸ்டர் வலைப்பதிவின் தலைப்புக்கு இன்ஸ்பிரேசன், Flickr மாதிரி e-யை முழுங்கிவிட்டுப் பெயர் வைக்கும் வெப் 2.0 ட்ரெண்டு.

தேன்கூடு ஷார்ட்கட்

நேற்று அதிகாலை நான் போட்ட இரண்டு பதிவுகள் மதியம் ஆகியும் தேன்கூட்டில் தெரியக் காணோம் என்று தேன்கூட்டாருக்கு மின்னஞ்சல் அனுப்பினேன்.

அவர்கள் துரிதமாக அனுப்பிய பதிலில் கிடைத்த டிப் இது. சாதாரணமாக நீங்கள் பதிவு போட்ட பிறகு அது தேன்கூட்டில் தெரிய “1 மணி நேரம் முதல் 24 மணி நேரம் வரை” ஆகலாம். ஆனால் இந்த ஷார்ட் கட்டுக்குப் போய் ping செய்தால் பதிவு விவரங்கள் 10 நிமிடங்களில் தேன்கூட்டில் கலந்துவிடும். அந்த உரலாவது:

http://www.thenkoodu.com/ping.php

தேன்கூடு பிளாகர் பதிவுகள், வேர்ட்பிரஸ் பதிவுகள் இரண்டையும் எந்தச் சிக்கலும் இல்லாமல் ஏற்று அப்டேட் செய்வது ஒரு சிறப்பு என்றால் நம்மை ping செய்வதும் பயனுள்ள வசதி.

*

tamilblogs திரட்டி ஒரு முக்கியமான வரவு. தமிழில் “வெப் 2.0″ அல்லது அதிநவீன ஜாவாஸ்க்ரிப்ட்டைப் பயன்படுத்தி வந்திருக்கும் முதல் வலையகம் தமிழ் பிளாக்ஸாகத்தான் இருக்கும். நான் குறிப்பாக look and feel பற்றிச் சொல்கிறேன். tamilblogsகாரர்கள் Netvibes-இடமிருந்தும் நிறைய கற்றுக்கொள்ளலாம்.

« Previous PageNext Page »