குரூரமான நகைச்சுவை

தயவு செய்து மென்மையான இதயம் கொண்டோர் மேற்கொண்டு படிக்க வேண்டாம் எனக் கேட்டுக்கொள்ளப்படுகிறது. தயவு செய்யாமல் மென்மையான இதயம் கொண்டோருக்கும் இந்த வேண்டுகோள் பொருந்தும்.

* * *

வழக்கமான வலையுலாத்தலில் கண்ணில் பட்டது இந்த limerick ‘அகராதி’. எளிமையான சிந்தனைகளை சந்தத்துடன் நறுக்கென்று எழுதும் இந்தப் பழம்பெரும் கலை அழியாமல் இருப்பது சந்தோசமான விசயம். சைட்டிலிருந்து ஒரு எ.கா.:

An antipornography nut
Sees commercials as televised smut.
He’s complaining today
About feminine spray
And those diaper ads showing a butt. (Chris Doyle)

லிமரிக் என்றதும் எனக்கு முழுசாக நினைவுக்கு வருவது என் கல்லூரி நாட்களில் நான் பாடித் திரிந்த ஒரு லிமரிக்:

Here lies the amorous Fanny Hicks
The scabbard of ten thousand pricks
If you want to do her honor
Pull out your cock and piss upon her.

இதில் நகைச்சுவை அதிகம் இல்லையென்றாலும் எப்படியோ மனதில் தங்கிவிட்டது. அதே போல Harry Graham என்பார் எழுதிய Ruthless Rhymes-ஐயும் கண்டுபிடித்தேன். வகுப்பறையில் நண்பர்களுடன் படித்து அடக்க முடியாமல் சிரித்த லிமரிக்குகள் இவை. சாம்பிள்:

Auntie, did you feel no pain
Falling from that apple tree?
Will you do it, please, again?
‘Cos my friend here did’nt see.

– – –

Father heard his children scream,
So he threw them in the stream,
Saying, as he drowned the third,
“Children should be seen, not heard!”

OEDILF-ல் யார் வேண்டுமானாலும் உறுப்பினராகி நகைச்சுவைக் கவிதைகள் எழுதலாம். அது வலையில் பிரசுரிக்கப்படும் தகுதியை சைட்டின் ஆசிரியர் குழு தீர்மானிக்கும். இங்கே நல்ல கவிதைகள் நிறைய இருப்பது வியப்பளிக்கிறது (முன்பே கொடுத்த லிங்க்தான், இருந்தாலும் சுட்டுச் சொற்கள் லிங்க் இல்லாமல் வரக் கூடாதாமே).

அப்டேட்: தமிழில் செய்யுள் வடிவமும் (காளமேகம் ஸ்டைல்) ஹைக்கூவும் லிமரிக்கிற்கு நன்றாக ஒத்துழைக்கும். என் முந்தைய மூன்று காதல் கவிதைகளும் கிட்டத்தட்ட free verse லிமரிக் முயற்சிகள்தாம்.

2 thoughts on “குரூரமான நகைச்சுவை

  1. அப்படித்தான் அதிகம் எழுதப்பட்டிருக்கு. ஆனா A Century of Humourனு அருமையான ஆக்ஸ்போர்டு புஸ்தவம் ஒண்ணு எங்கைல இருந்தது. அதுல லிமரிக் வகைப்பாட்டுல கென்னத் கிரகாமைப் போட்டிருந்தாங்க. உங்க லிமரிக் நல்லாருக்கு. :-) Yet another comment ending with a smiley. (:-))

Comments are closed.