தேன்கூடு ஷார்ட்கட்

நேற்று அதிகாலை நான் போட்ட இரண்டு பதிவுகள் மதியம் ஆகியும் தேன்கூட்டில் தெரியக் காணோம் என்று தேன்கூட்டாருக்கு மின்னஞ்சல் அனுப்பினேன்.

அவர்கள் துரிதமாக அனுப்பிய பதிலில் கிடைத்த டிப் இது. சாதாரணமாக நீங்கள் பதிவு போட்ட பிறகு அது தேன்கூட்டில் தெரிய “1 மணி நேரம் முதல் 24 மணி நேரம் வரை” ஆகலாம். ஆனால் இந்த ஷார்ட் கட்டுக்குப் போய் ping செய்தால் பதிவு விவரங்கள் 10 நிமிடங்களில் தேன்கூட்டில் கலந்துவிடும். அந்த உரலாவது:

http://www.thenkoodu.com/ping.php

தேன்கூடு பிளாகர் பதிவுகள், வேர்ட்பிரஸ் பதிவுகள் இரண்டையும் எந்தச் சிக்கலும் இல்லாமல் ஏற்று அப்டேட் செய்வது ஒரு சிறப்பு என்றால் நம்மை ping செய்வதும் பயனுள்ள வசதி.

*

tamilblogs திரட்டி ஒரு முக்கியமான வரவு. தமிழில் “வெப் 2.0” அல்லது அதிநவீன ஜாவாஸ்க்ரிப்ட்டைப் பயன்படுத்தி வந்திருக்கும் முதல் வலையகம் தமிழ் பிளாக்ஸாகத்தான் இருக்கும். நான் குறிப்பாக look and feel பற்றிச் சொல்கிறேன். tamilblogsகாரர்கள் Netvibes-இடமிருந்தும் நிறைய கற்றுக்கொள்ளலாம்.